கூகுலுக்கு எதிராக ஒரு போர்க்கொடி

 

இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இருந்தது. இந்தசேவையை சுற்றி உருவாக்கப்பட்ட பிம்பம்தான் எத்தனை பிரம்மாண்டமாக இருந்தது. கூகுல் சேவைக்காக பிரத்யேக அழைப்புகள் எல்லாம் அனுப்பப்பட்டு இந்த அழைப்புகள் கிடைக்கப் பெறுவது என்பதே ஒரு கவுரமாக இணைய உலகில்கருதப்பட்டது.
.
ஆனால், அறிமுகமான ஓராண்டுக்குள் கூகுல் இந்த சேவையை ஓசைப்படாமல் கொல்வதாக அறிவித்திருக்கிறது. அதாவது கூகுல் வேவ் சேவையை இழுத்து மூடுவதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதற்கான விளக்க அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ வளைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. எதிர்பார்த்த எண்ணிக்கையில் இந்த சேவைக்கான வாடிக்கையாளர்கள் கிடைக்காததால் இதற்கு கூகுல் மூடு விழா நடத்தியிருக்கிறது.

வர்த்தக நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்போடு புதிய சேவைகளை அறிமுகம் செய்வதும், அவற்றை ஒரு கட்டத்தில் கைவிடுவதும் வாடிக்கையானதுதான். இவைமுற்றிலும் நிறுவனங்களின் விருப்பம் மற்றும் லாபக் கணக்கு சார்ந்ததாகும். அந்த வகையில் கூகுலும் தனது எண்ணற்ற சேவைகளில் ஒன்றான வேவ் சேவைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கூகுல் வேவ் சேவையை ஆர்வத்தோடு பயன்படுத்தியவர்களின் நிலை என்ன? இமெயில் மூலம் தகவல் பகிர்வு மற்றும் கூட்டு முயற்சி அடிப்படையிலான திட்டங்களை செயல்படுத்த உதவிய வேவ் சேவையை பயன்படுத்தி இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்களின் கதி என்னவாவது? கூகுல் இந்த சேவையை கை கழுவியதால் நம்பிக்கையோடு இதனை பயன்படுத்தியவர்களும் கைவிட்டு செல்வதுதான் ஒரே வழியா?  வேறு என்ன செய்ய முடியும்? கூகுலின் முடிவை நினைத்து புலம்பலாம். அல்லது கண்டனம் செய்யலாம்.

ஆனால் இணைய யுகத்தில் எந்த வர்த்தக நிறுவனத்தின் முடிவுகளையும் அதன் இஷ்டத்துக்கு விட்டு விட்டு வேடிக்கை பார்க்காமல் இணையம் மூலமே போர்க்கொடி தூக்குவது சாத்தியமே. கூகுல் வேவ் சேவை நிறுத்தப்பட்டதை எதிர்த்தும் இத்தகைய போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. 

சேவ் கூகுல் வேவ் எனும் பெயரில் இதற்காக இணைய தளம் ஒன்று அமைக்கப்பட்டு, கூகுலின் முடிவை அல்லது மனதை மாற்ற வைப்பதற்கான இணைய இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. கூகுல் வேவ் சேவை நிறுத்தப்படும் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தோம். கூட்டு முயற்சியிலான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த சேவையை விலைமதிக்க முடியாததாக இருந்தது என்று இந்த தளம் குறிப்பிட்டு கூகுல் வேவை காப்பாற்றுவதற்காக குரல் கொடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறது. கூகுல் வேவ் சேவையை ஆதரித்து கருத்து தெரிவிப்பதில் தொடங்கி இந்த சேவையை எப்படியெல்லாம் பயன்படுத்தி வந்தோம் என்பது வரை கூகுல் வேவ் அபிமானிகள் கருத்து தெரிவிக்கலாம்.

கூகுல் வேவுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டர் பதிவு, டிக் இணைப்பு உள்ளிட்ட வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. சேவ் கூகுல் வேவ் வாசகம் எழுதிய டிசர்ட்டை வாங்கி அணிந்தும் தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.கூகுல் வேவை பயன்படுத்தியவர்களின் அனுபவத்தை இந்த தளங்களில் படிக்கும்போது, இந்த சேவையின் இழப்பு எத்தனை பெரிதாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கூகுலின் முடிவை இந்த தளம் மாற்றுகிறதோ இல்லையோ இணை வாசிகளின் மனக்குமுறலை பதிவு செய்ய இந்த தளம் உதவும் என்று நம்பலாம்.

ஏற்கனவே ஆஸ்க் தேடியந்திரம் அதன் அடையாளச் சின்னமாக கருதப்பட்ட ஜிவ்ஸ் லோகோவை கைவிட்டபோது அதனை எதிர்த்து ஜிவ்சை மீண்டும் கொண்டு வர கோரும் வலைப்பதிவு ஒன்று துவங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

-00000000]

]http://www.savegooglewave.com/

Advertisements

4 responses to “கூகுலுக்கு எதிராக ஒரு போர்க்கொடி

  1. ya. they should not close google wave.. .கூகிள் வேவ் என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு புரிவதற்கு அதிக காலம் எடுத்தாலும் இது மிகவும் பயனுள்ள ஒரு சாதனமாகும். தேவையை ஏற்படுத்தி வேவினை பாவிக்க முடியாது ஆனால் தேவை ஏற்படும் போது பாவித்தால் அதன் அருமை புரியும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s