வெப்கேம்களை தேட ஒரு இணையதளம்

தேடியந்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது என்று வெப்கேம்சர்ச் டாட் காம் இணைய தளத்தை வர்ணிக்கலாம். வேறு விதமாக சொல்வதாயின் தலைகீழ் தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.

காரணம், இந்த இணைய தளத்தில் நீங்கள் எதையுமே டைப் செய்யாமல் தேடலாம்.

பொதுவாக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் நீங்கள் பொருத்தமான குறிச்சொல்லை டைப் செய்து தேடலில் ஈடுபட வேண்டும்.

குறிச்சொல் எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தேடல் முடிவுகள் சிறப்பாக அமையும். இது தான் தேடியந்திர இலக்கணம்.

ஆனால், வெப்காம்சர்ச்சிலோ, தேடல் கட்டத்தில் எந்த வார்த்தையும் குறிப்பிட வேண்டாம். அந்த கட்டத்தை வெறுமையாகவே விட்டு தேடும் படி கட்டளையிட்டால், இணைய உலகில் உள்ள சுவாரஸ்யமான வெப்காம் தளங்களை எல்லாம் பட்டியலிட்டு காண்பிக்கிறது. (வெப்காம்சர்ச் மூல தேடியந்திரம் இல்லை. கூகுல், தேடல் தொழில் நுட்பத்தையே இது பயன்படுத்துவதால், கூகுல் முடிவுகளே பட்டியலிடப்படுகிறது).

எந்த குறிச்சொல்லுக்கும் கட்டுப்படாத சுவாரஸ்யமான வெப்கேம் தளங்களை இது பட்டியலிடுகிறது. அவற்றை கிளிக் செய்து பார்த்தால், வெப்கேமில் பதிவாகி உள்ள காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

இதற்கு மாறாக குறிப்பிட்ட வெப்கேம் தளம் தேவை என்றால் அதற்கான குறிச்சொல்லையும் டைப் செய்து தேடலாம்.

இப்படி வெப்கேம் தளங்களை தேட உதவும் தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. இந்தியாவில் உள்ள வெப்கேம் காட்சிகளை தேடித் தரும் பிரத்தியேக தேடியந்திரம் கூட இருக்கிறது.

வெப்கேம்சர்ச் தளத்தில் என்ன விசேஷம் என்றால், இங்கு சுவாரஸ்யமான வெப்கேம் தளங்களை காண முடிவதோடு, அவற்றை நீங்கள் கட்டுப்படுத்தவும் செய்யலாம் என்பதே விஷயம்.
வெப்கேம் பிரியர்கள் ஆரம்ப ஜோரில், வெப்கேமிராக்களை வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் அதனை மறந்து விடுவது உண்டு. அல்லது அதில் பாஸ்வேர்ட் பூட்டு போட மறந்து விடுவதும் உண்டு.

இத்தகைய கேமிராக்களை இண்டர்நெட் மூலமே நீங்கள் இயக்கலாம். வெப்கேம்சர்ச் தேடியந்திரத்தை உருவாக்கியவர்கள் இப்படி பல வெப்கேமிராக்கள் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதை பார்த்து விட்டு, அவற்றை பட்டியலிட்டு தரும் தேடியந்திரமாக இதனை உருவாக்கி உள்ளனர்.
எனவே நீங்கள் காணும் வெப்கேம் வழியே அவற்றை பல்வேறு விதமாக இயக்கவும் செய்யலாம். கேமிரா கோணத்தை மாற்றலாம். காட்சிகளை சின்னதாகவோ, பெரிதாகவோ மாற்றலாம்.
இப்படி செய்வதே ஒரு சுவாரஸ்யம் என்றாலும், இதில் கூடுதலாக ஒரு பலன் இருக்கிறது. நீங்கள் புதிய வெப்கேமிராவை வாங்கி விரும்பும் பட்சத்தில் எந்தவகையான வெப்கேமிரா பொருத்தமானது என்பதை, இப்படி பல வகையான வெப்கேம்களை இயக்கிப்பார்ப்பதன் மூலமே தீர்மானிக்கலாம்.
வெப்கேம் காட்சிகளை தேட உதவும் இந்த தளம், நல்ல வெப்கேமிராவை வாங்கவும் வழி காட்டுகிறது. இந்த வியாபார நோக்கமே இதன் இலக்காகவும் இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் இந்த தளம் வெப்கேமிராக்களுக்கான சுவாரஸ்யமான தேடியந்திரமாகவே இருக்கிறது.

வெப்கேம் பிரியர்கள் இதனை
தாராளமான பயன்படுத்தி பார்க்கலாம். வெப்கேம் உலகிலிருந்து சுவாரஸ்யமான மற்றொரு செய்தி, அமெரிக்காவில் உள்ள யூமா எனும் கிராமத்தில் நடைபெற உள்ள தேர்தல் முழுவதும் வெப்கேமிராவில் படமாக்கப்பட்டு வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்குகள் பதிவாவதை இந்த கேமிராவின் மூலம் வாக்காளர்கள் கண்காணிக்கலாம்.
அரிஜோனா மாகாணத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. அரிஜோனா சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவாக வைத்திருக்க வேண்டும்.
இந்த வீடியோ பதிவை வெப்கேம் இணைப்பாகவே வழங்கி தேர்தலை ஜனநாயக மயமாக்கியிருக்கின்றனர்.

]————http://www.web-cam-search.com/

Advertisements

One response to “வெப்கேம்களை தேட ஒரு இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s