எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம்.

இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் காம்.

மக்களின் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் எல்லா செயலையும் சுவாரஸ்யமானதாக ஆக்கினால் போதும் என்னும்  எண்ணமே இந்த தளத்திற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான விஷ்யமாகட்டும் தனி மனிதர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும் மாற்றத்திற்கான வழி எளிமையானதாகவும் சுவாயானதாகவும் இருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்.

இதற்கான கருத்துக்களை பரிந்துரைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சுற்றுச்சூழல் நோக்கில் சாலையில் குப்பைகளை வீசாமல் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இருப்பினும் இதனை நடைமுறை படுத்துவது சுலபமாக இருப்பதில்லை.இதற்காக அபராதம் விதிப்பதையோ அல்லது தண்டனை அளிப்பதையோ செய்வதை விட குப்பைத்தொட்டியில் வேண்டாதவற்றை போடுவதை சுவை மிகுந்த செயலாக மாற்றினால் எப்படி இருக்கும்?

அதாவது குப்பைத்தொட்டியில் குப்பைகளை போட்டதுமே விஷேச ஒலிகள் கேட்கத்துவங்கி விடும்.இந்த ஒலியை கேட்க விரும்பியே பலரும் குப்பைகளை தொட்டியில் பொடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல ஆரோக்கிய நோக்கில் லிப்டை பயன்படுத்துவதை விட மாடிபாடிகளில் ஏறிச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.ஆனாலும் பலரும் இதனை பின்பற்றுவதில்லை.மூச்சு வாங்க படிகளில் ஏறிச்செல்வதை விட ஜாலியாக லிப்டில் செல்லவே எல்லோரும் விரும்புகின்றனர்.

மாடிப்படிகளை பாடும் படிகளாக,அதாவது ஒவ்வொரு படியில் கால் வைக்கும் போதும் சங்கீத குறிப்புகள் கேட்கும் படி செய்து விட்டால் படிகளில் ஏறுவதை ரசிக்கும் படி செய்து விடலாம்.பியானோ படிகள் என்று இந்த மாடிபடிகளுக்கு பெயர் சூட்டலாம்.

இது போன்ற யோசனைகள் இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.வரவேற்று கருத்து தெரிவிக்கலாம்.மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் உண்மையிலேயே சுவையானதாக இருக்கின்றன.

போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை பொருட்படுத்தாமல் செல்வதை தவிர்க்க,விதிகளை மதித்து நடப்பவர்களின் புகைப்படம் உடனடியாக அருகே உள்ள விளம்பர போர்டில் தோன்றச்செய்தால் எப்படி இருக்கும்?என்று ஒரு யோசனை கேட்கிறது.

அதே போல திரையரங்குகளிலோ சூப்பர் மார்க்கெட்டிலோ வரிசையில் காத்திருக்கும் போது போரடிக்காமல் இருக்க மாயக்கண்ணாடி ஒன்றின் முன் நின்ற படி அதில் தோன்று பந்தை தட்டிக்கொண்டிருக்கும் படி செய்தால் சுவாரஸ்ய்மாகவும் இருக்கும்,அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும் அல்லவா என்கிறது மற்றொரு யோசனை.

இதைவிட சுவையாக இருக்கிறது பொழுதுபோக்கு சைக்கிள்.கூட்டமாக உள்ள இடங்களில் இந்த சைக்கிளை நிறுத்தி விட வேண்டும்.சைக்கிளோடு அழகிய விசிறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.சைக்கிளை மித்திதால் விசிறிகள் சுழலும்.வேகமாக மித்திதால் அதிக விசிறிகள் சுழலும்.போக்குவரத்து செரிசலில் சிக்கியவர்கள் இந்த சைக்கிளை மிதித்து மகிழ்ந்தால் காத்திருப்பு அலுப்பு போய்விடும்.அப்படியே உடற்பயிற்சி செய்த பலனும் கிடைக்கும்.

இப்படி எந்த வேலைக்கும் சுலபமான வழியை கண்டுபிடிக்கலாம் என்கிறது ஃபன்தியரி தளம்.

வர்த்தக நிறுவனமான வால்ஸ்வாகன் இந்த தளத்தை அமைத்துள்ளது.எதையும் சுவார்ஸ்யமாக்கினால் நடைமுறைக்கு கொண்டு வருவது சுலபமாது என்பதை நிறுவன செயல்பாட்டில் கடைபிடித்து வெற்றி கண்டை அடுத்து இந்த கோட்பாட்டை பிரபலமாக்க இந்த தளத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சுவையான கருத்துக்களும் அவற்றை விளக்கும் அருமையான வீடியோக்களும் உள்ளன.

மன்னிக்கவும் தலைப்புக்கும் இன்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஒரு சுவாரஸ்யம் கருதி தான் இந்த தலைப்பு.

————–

http://www.thefuntheory.com/

Advertisements

3 responses to “எல்லாம் இன்பமயம் இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s