புத்தக பிரியர்களுக்கான இணையதளம்

 

பிலிப்கார்ட் இணையதளத்தை இந்தியாவின் அமேசான் என்று சொல்லலாம்.இணையம் மூலம் புத்தக விற்பனையில் ஈடுபட்டுள்ள தளம் என்பதோடு அமேசான் போலவே இந்த பிரிவில் முன்னிலை வகிக்கும் தளமாகவும் பிலிப்கார்ட் விளங்குகிறது.

இணையம் மூலம் புத்தக விற்பனை என்பது புதியதல்ல தான்.இந்தியாவிலேயே பல தளங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.ஆனால் பிலிப்கார்ட்டை இந்த பிரிவில் முன்னோடி தளம் என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன.

உங்கள் வீடு தேடி வரும் கடை என வர்ணித்துக்கொள்ளும் பிலிப்கார்ட்டின் முகப்பு பக்கம் புத்தகங்களால் நிறைந்து கிடந்தாலும் சிக்கலில்லாமல் தெளிவாகவே இருக்கிறது.

புதிய புத்தகங்கள்,அதிகம் விற்ற புத்தகங்கள்,சமீபத்தில் விற்பனையான புத்தகங்கள்,ஆகிய பிரிவுகளில் புத்தகங்கள் அவற்றின் முகப்பு பக்கத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

மற்றபடி உங்களுக்கு தேவையான புத்தகம் இருக்கிறதா என்று தேடிபார்த்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.இவையெல்லாம் வழக்கமாக எல்லா தளங்களும் தரும் வசதிகள் தான்.

உண்மையில் புத்தகத்தை ஆர்டர் செய்ய முடிவு செய்த பிறகு தான் பிலிப்கார்ட்டின் தனித்தன்மையே வெளிப்படுகிறது.மற்ற எந்த தளத்தையும் விட இங்கு புத்தகம் ஆர்டர் செய்வது மிகவும் சுலபமானது.அதாவது எல்லா விதங்களிலும்.

முதலில் புத்தகம் ஆர்டர் செய்வதற்காக முழ நீள படிவத்தை காண்பித்து அந்த தகவல் தேவை இந்த தகவல் தேவை என்றெல்லாம் வதைக்காமல் குறைந்தபட்ச விவரங்களோடு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிகிறது.
அதன் பிறகு புத்தகத்தை ஆர்டர் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.முகவரியையும் செல்போன் எண்ணையும் கொடுத்தால் அடுத்த நிமிடம் எஸ் எம் எஸ் வழியே ஆர்டரை உறுதி செய்யும் சேதி வந்து விடுகிறது.அந்த அளவுக்கு வேகம்.

பொதுவாக இணையத்தில் புத்தகம் அல்லது எந்த பொருட்களை வாங்கும் போதும் எப்படி பணம் செலுத்துவது என்னும் பிரச்சனை எழும்.சிலருக்கு கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் தயக்கம் இருக்கலாம்.இன்னும் சிலரிடம் கிர்டிட் கார்டு வசதி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் பிலிப்கார்ட்டில் இந்த குழப்பமே வேண்டாம்.இணைய வழி பணம் செலுத்துவதில் தயக்கம் உள்ளவர்கள்,கேஷ் ஆன் டெலிவரி வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.அதாவது ஆர்டர் செய்துவிட்டு வீட்டுக்கு புத்தகம் வந்து சேரும் போது பணம் செலுத்தினால் போதுமானது.

ஆர்டர் ஓகே ஆனதுமே புத்தகம் எப்போது எப்படி வரும் எனும் தகவலும் எஸ் எம் எஸ் மூலம் மற்றும் இமெயில் வழியே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.கூரியர் மூலம் 6 நாட்களுக்குள் புத்தகம் வரும் என கூறிவிட்டு மூன்றாவது நாளே டெலிவரியும் செய்து விடுவது உண்டு.

இந்த தளத்தின் மற்றொரு சிறப்பமசம் இந்த புத்தகம் ஸ்டாக்கில் இல்லை என்ற பதில் வராத அளவுக்கு அநேகமாக பெரும்பாலான புத்த்கங்களை கைவசம் வைத்துள்ளனர்.

சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் என்னும் இரண்டு நண்பர்கள் இந்த தளத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.

இருவருமே இணைய வர்த்த்க முன்னோடியான அமேசானில் பணியாற்றியவர்கள்.ஒரே அறையில் வசித்து வந்தவர்கள்.அமேசான் வேலைஉஇல் அலுப்பு ஏற்பட்டதால் தாங்களே சொந்தமாக ஒரு இணைய விற்பனையகத்தை துவங்க தீர்மானித்து 2007 ல் பிலிப்கார்ட்டை நிறுவினர்.

பெஸ்ட் செல்லர் மட்டுமல்லாமல் எல்லா புத்தகங்களையும் இருப்பு வைத்திருக்க வேண்டும் ,ஆர்டர் செய்ய சுலபமான வழி இருக்க வேண்டும் ஆகிய அம்சங்களில் உறுதியாக இருந்தனர்.அதோடு புத்தகம் உரியவரிடம் சென்றடைவதில் எந்த சிக்கலும் இருக்க கூடாது என்பதறகாக முன்னணி கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதற்காக முக்கிய இடங்களில் புத்தக இருப்பு மையங்களை அமைத்ததோடு ,கூரியர் நிறுவன செலவையும் ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.எனவே இணையவாசிகள் கூரியர் செலவை ஏற்க வேண்டியதில்லை.அது மட்டுமல்ல  பல புத்தகங்களின் விலையில் தள்ளுபடியும் கிடைக்கிறது.

இவற்றின் பயனாக இந்திய இணையவாசிகள் மத்தியில் பிலிப்கார்ட்டிற்கு நல்ல பெயரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

தற்போது புத்தக்ங்கள் மட்டும் அல்லாமல்,திரைப்பட டிவிடிக்கள்,பாடல்கள் மற்றும் செல்போன் விற்பனையிலும் இந்த தளம் ஈடுபட்டுள்ளது.

————-

http://www.flipkart.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s