டிவிட்டர் லாட்டரி இணைய‌த‌ள‌ம்.

ஒரு காலத்தில் தமிழ் திரைப்பட உலகில் நாயகர்கள் என்றால் பின்னால் காந்த் சேர்த்து கொள்வதும்,நாயகிகள் என்றால் ஸ்ரீ சேர்த்து கொள்வ‌தும் வெகு பிர‌ப‌ல‌ம்.அதே போல‌ இணைய‌ உல‌கில் சாட்ர‌வுல்ட் த‌ள‌த்தின் வெற்றிக்கு பிற‌கு ர‌வுல‌ட் என்னும் சொல்லை உட‌ன் சேர்த்து கொண்டு உருவாகும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் உருவாக‌த்துவ‌ங்கியிருக்கின்ற‌ன‌.

ர‌வுல‌ட் என்ப‌து ஒரு வகை சூதாட்ட‌ம் என்ப‌தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ப‌ல் எண்கள் கொண்ட‌ வ‌ட்ட வடிவிலான தட்டை சுற்றி விட்டால் ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணில் வந்து நிற்கும்.அந்த எண்ணில் பணம் கட்டியிருந்தால் அடித்தது லாட்டரி.ஆனால் சுற்றும் த‌ட்டில் எந்த‌ எண் வ‌ரும் என‌ யாருக்கும் தெரியாது.

ர‌வுல‌ட் ஆட்ட‌த்தின் இந்த‌ புதிர் தன்மையை அர‌ட்டைக்கு கொண்டு வ‌ரும் வ‌கையில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து தான் சாட்ர‌வுல‌ட் இணைய‌த‌ள‌ம்.

இணைய‌ உல‌கில் அர‌ட்டை எல்லோருக்கும் தெரியும்.விடியோ மூல‌ம் அர‌ட்டை அடிப்ப‌தும் தெரியும்.

சாட்ர‌வுல‌ட் என்ன‌ செய்த‌து என்றால் அறிமுக‌மில்லாத‌ ஒருவ‌ரோடு விடியோ அர‌ட்டையில் ஈடுப‌டும் வ‌சதியை ஏற்ப‌டுத்தி த‌ந்த‌து.அது யாராக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்.யாரோடு பேச‌ப்போகிறோம் என்ப‌து பேசுவ‌த‌ற்கு முன் யாருக்கும் தெரியாது.சாட்ர‌வுல‌ட் த‌ள‌த்தில் நுழைந்த பின் அரட்டைக்கு ஆராவது அகப்படுவார்களா என்று பார்த்தால் திடிரென யாரவது ஒருவர் வெப்கேமில் தோன்றுவார்.விருப்பமிருந்தால் நாமும் வெப்கேம் வழியே அரட்டை அடிக்கலாம்.இல்லை அடுத்த யாரோவை தேடிப்போகலாம்.

இப்ப‌டியாக முன் பின் அறிமுக‌மில்லாத‌ ந‌ப‌ர்க‌ளோடு வெப்கேமில் உரையாட‌லாம்.

அர‌ட்டை என்றாலே ந‌ண்ப‌ர்க‌ளோடு உரையாடுவ‌து தானே.அத‌ற்கு மாறாக‌ உல‌கின் எந்த‌ மூளையிலோ உள்ள‌ ஒருவ‌ரோடு உரையாடும் வாய்ப்பை ஏற்ப‌டுத்துவதே  சாட்ர‌வுல‌ட் தரும் சுவார‌ஸ்ய‌மாக‌ அமைந்த‌து.

அர‌ட்டைக்கான‌ ர‌வுல‌ட் விளையாட்டு போலாமைந்த‌ இந்த‌ இணைய‌த‌ள‌ம் அறிமுக‌மான‌ போது இணைய‌ உல‌கில் பெரும் அதிர்வை உண்டாக்கிய‌து.

புதிய‌ ம‌னித‌ர்க‌ளை த‌ரிசிக்கும் வாய்ப்பை த‌ருவ‌தாக‌  பார‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இந்த‌ த‌ள‌ம் அவ‌ப்போது முக‌ம் தெரியாத‌ ம‌னித‌ர்க‌ளின் நிர்வான‌ ம‌ற்றும் வேறு வித‌மான‌ அதிர்ச்சிக‌ளையும் சாத்திய‌மாக்கி திகைக்க‌ வைத்த‌து.

திடிரென‌ தோன்றும் ந‌ப‌ர் ஆபாச‌மாக‌ செய்து அதிர‌ வைத்த‌ செய‌ல் ச‌ர்ச்சையை ஏற‌ப்டுத்தினாலும் சாட்ர‌வுல‌ட்டை மேலும் பிர‌ப‌லாமாக்கிய‌து.

சீட்டு குலுக்கி போடுவ‌து போல‌ எந்த‌ வித‌ முன் திட்ட‌மிட‌லும் இல்லாம‌ல் புதிய‌வ‌ர்க‌ளை ச‌ந்தித்து பேச‌ உத‌வும் இந்த‌ சேவையை போல‌வே வேறு ப‌ல‌ சேவைக‌ளும் இணைய‌த்தில் உருவாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

அந்த‌ வ‌கையில் டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளுக்காக‌ என்று வ‌ந்துள்ள‌ சேவை தான் டிவிட்ர‌வுல‌ட்.

டிவிட்ட‌ரின் பின்தொட‌ரும் வ‌ச‌தி போன்ற‌வை வெகு பிர‌ப‌ல‌ம்.நண்பர்க‌ள் முல‌மாக‌ டிவிட்ட‌ரில் புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளை பெற‌லாம்.
சில‌ நேர‌ங்க‌ளில் ந‌ண‌ப‌ர்க‌ளின் டிவிட்ட‌ர் தொட‌ர்பு ப‌ட்டியலை(டிவிட்டர் மொழில்யில் டைம்லைன்) பார்த்து அதிலிருந்து டிவிட்ட‌ரில் யாரை பின்தொட‌ராலாம் என்றும் தீர்மானிப்ப‌து உண்ட‌ல்ல‌வா?

இதையே ர‌வுல‌ட் போல‌ புதிர் த‌ன்மையோடு தேடிக்கொள்ள‌ வ‌ழி செய்கிற‌து டிவிட்ர‌வுல‌ட்.

இந்த‌ த‌ள‌த்தின் மூல‌ம் நீங்க‌ளும் டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளில் யாரோ ஒருவ‌ர‌து தொட‌ர்பு ப‌ட்டிய‌லை பார்க்க‌ முடியும்.அப்ப‌டியே புதிய‌ டிவிட்ட‌ர் ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் சுவார‌ஸ்ய‌மான‌ டிவிட்ட‌ர் செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌முடியும்.

டிவிட்ட‌ரில் வெளியாகும் செய்திக‌ளை ப‌டிக்க‌ ப‌ல‌ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன.பிர‌ப‌ல‌மான‌ செய்திக‌ள்,மேலோங்கும் செய்திக‌ள்,பிர‌ப‌ல‌ங்க‌ளின் ப‌திவுக‌ள் என்றெல்லாம் டிவிட்ட‌ர் ப‌கிர்வுக‌ளை ப‌டிக்க‌ முடிகிற‌து.

ஆனால் இந்த‌ வ‌ழிக‌ளில் எல்லாம் கண்ணில் ப‌டாம‌ல் போய்விட‌க்கூடிய‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளியை அறிமுக‌ம் செய்து கொள்ளும் வாய்ப்பை டிவிட்ர‌வுலட் உண்டாக்க்கி தருகிற‌து.அதிலும் எந்த‌ வித‌ திட்ட‌மிட‌லும் இல்லாம‌ல் போகிற‌ போக்கில் யாருடைய‌ டிவிட்ட‌ர் தொட‌ர்பு ப‌ட்டிய‌லை பார்க்க‌லாம்.அதில் உள்ள‌ டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌லாம்.

இதில் நீங்க‌ளும் உங்க‌ள் டிவிட்ட‌ முக‌வ‌ரியை ச‌ம‌ர்பித்து இணைந்து கொள்ள‌லாம்.அப்போது உல‌கின் எங்கோ மூளையில் உள்ள‌ ஒருவ‌ர் உங்க‌ள் டிவிட்ட‌ர் டைம்லைனை எப்போதாவ‌து ப‌டிக்கும் வாய்ப்பு உண்டு.

இதில் இட‌ம் பெற்றுள்ள‌ ப‌ட்டிய‌லையும் ப‌ய‌ன்ப‌டுத்திப்பார்க்க‌லாம்.

இணைய‌ முத‌லீட்டாள‌ரான‌ செவ்ரின் பிஷ்வ‌ர் என்ப‌வ‌ர் இந்த‌ சேவையை உருவாக்கியுள்ளார்.

ஒரு முறை த‌ன‌து ந‌ண்ப‌ரின் டிவிட்ட‌ர் ப‌ட்டிய‌லை எட்டி பார்த்த‌ போது அதில் புதிய‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ள் இருப்ப‌தை க‌ண்டு விய‌ந்த‌ பிஷ்வ‌ர் இதே போல‌ மற்றவ‌ர்க‌ளின் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை பார்க்க‌ முடிந்தால் முற்றிலும் புதிய‌ உலகிற்கான‌ க‌த‌வு திற‌க்குமே என்னும் எண்ண‌த்தில் த‌ன‌து ந‌ண்ப‌ரான‌ ஸ்டிப‌னோடு இணைந்து இந்த‌ த‌ள‌த்தை வ‌டிவ‌மைத்தார்.

பின் குறிப்பு.

சாட்ராவுல‌ட் சேவையின் ம‌க‌த்துவ‌ம் , அது ஏற்ப‌டுத்திய‌ ச‌ர்ச்சை,மர்றும் அத்னை சுற்றியுள்ள சுவார்ஸ்யமான உலகம் பற்றி நீண்ட பதிவு எழுத நினைத்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால் டிவிட்ரவுலட்டை அறிமுக செய்வதற்காக சுருக்கமாக சாட்ரவுல்ட் பற்றி எழுதியுள்ளேன் .விரைவில் விரிவான பதிவு.

============

http://twtroulette.com/

Advertisements

3 responses to “டிவிட்டர் லாட்டரி இணைய‌த‌ள‌ம்.

  1. Pingback: சாட்ரவுலெட் கல்யாணம். « Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s