தேடாமல் தேட உதவும் புதுமை தேடியந்திரம் ஸ்வாமி.

எதையும் தேடாமலேயே நீங்கள் அடியெடுத்து வைத்தவுடன் உங்களுக்கு விருப்பமான தகவல்களை பட்டியலிட்டு தரக்கூடிய தேடியந்திரம் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?

ஆமாம் நன்றாக தான் இருக்கும் என்ற ஆதங்கள் உங்களுக்கு இருந்தால் கவலையை விடுங்கள்,அப்படியொரு தேடியந்திரம் இருக்கிறது.ஸ்வாமி டாட் காம் தான் அது.
ஒவ்வொரு தேடியந்திரத்துக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும்.ஸ்வாமிக்கும் தனித்தனை இல்லாமல் இல்லை.இது சாதரண தேடியந்திரம் இல்லை.தொடர் தேடியந்திரம்.உங்களுக்காகவே எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் தேடியந்திரம்.

புதியது என்ன? என கண்டுபிடிக்கும் தேடியந்திரம் .

ஸ்வாமியில் நீங்கள் எதையுமே தேட வேண்டாம்.உங்கள் விருப்பம் என்ன என்ன என்று குறிப்பிட்டு விட்டீர்கள் என்றால் இந்த தேடியந்திரம் அந்த பொருள் தொடர்பான தகவல்களை தேடி வைத்திருக்கும்.

நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் தேடல் முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.அடுத்த முறை எப்போது தேவையோ அப்போது எந்த தக‌வல்கள் புதியவையோ அவற்றை பார்க்கலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய‌தெல்லாம் ஸ்வாமியில் உறுப்பினராகி விட்டு உங்களுக்கு எவற்றில் ஆர்வம் இருக்கிற‌தோ அவற்றை குறிப்பிட வேண்டியது மட்டுமே.(உறுப்பினராவது மிக சுலபம்.எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய தேவையில்லை.பயனர் பெயரையும் பாஸ்வேர்டையும் தேர்வு செய்தால் மட்டுமே போதுமாது)

அதன் பிறகு விசுவாசமான‌ ஊழியர் போல ஸ்வாமி உங்களுக்காக தேடி புதிய தகவல்களை பட்டியலிட்டு வைத்திருக்கும்.இமெயில் முகவரியை சமர்பித்து விட்டால் ஸ்வாமி தேடியந்திரத்துக்கு செல்லாமலேயே இமெயில் வாயிலாகவே புதிய தேடல் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ச்சியாக ஒரே பொருள் குறித்து தினமும் தேடும் வழக்கம் கொண்டவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அடிக்கடி தேட வேண்டிய தேவை இல்லாததோடு புதிய தகவல்களை தவறவிடாமலும் இருக்கலாம்.

ஒரு வகையில் பார்த்தால் கூகுல் போன்ற தேடியந்திரங்களில் உள்ள அலெர்ட் சேவை போன்ற‌து தான் இது.கூகுலில் உங்கள் அபிமான தலைப்புகளை தெரிவித்தால் அவை தொடர்பான புதிய செய்திகள் வரும் போது இமெயிலில் எச்சரிக்கை செய்யப்படும்.

ஸ்வாமியும் இதே போன்றது மட்டுமல்ல;இதில் மட்டுமே கவனம் செலுத்தும் சேவையாகும்.அதோடு கூகுல் செய்தி பிரிவில் மட்டுமே புதியவ‌ற்றை அனுப்பி வைக்கிறது.ஆனால் ஸ்வாமி செய்திதளங்கள்,வலைப்படிவுகள்,இணையதளங்கள்,யூடியூப் என சகலமானவற்றையும் தேடி பொருத்தமான தகவல்களை தருகிற‌து.

மேலும் மற்ற தேடியந்திரங்களை விட புதிய தகவல்களை தேடுவதில்  நிபுனத்துவம் மிக்கதாக இருப்பதாக ஸ்வாமி தெரிவிக்கிறது.பொதுவாக மற்ற தேடியந்திரங்களின் அலெர்ட் சேவையில் காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றும் ஆனால் ஸ்வாமி செய்திகள் வெளியாகும் காலத்தை கவனித்து செயல்படுவதாகவும் கூறுகிற‌து.

இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஸ்வாமி உதவும்.

ஆய்வு பணியில் ஈடுபாடிருப்பவர்களுக்கு இந்த சேவை பேருதவியாக இருக்கும்.சாமன்யர்களும் கூட தங்களது அபிமான நட்சத்திரங்கள் பற்றிய செய்திகளை இடைவிடாமல் பின்தொடரலாம்.உதரண‌த்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின் தொடர்பான‌ புதிய தகவகளை தேடமலேயே பெற முடியும்.அதே போல எந்திரன் பற்றியோ சுப்பர் ஸ்டார் பற்றிய தகவலகளையும் தொடர்ந்து பெறலாம்.

எப்போது வேண்டுமானாலும் பயனாளிகள் தங்கள் விருப்ப தேர்வுகளை மாற்றியமைக்கவோ புதிய விருப்பங்களை சேர்த்துக்கொள்ளவோ முடியும்.எல்லாமே சுலபமானது.

கலேம் பிலக்சர் என்பவர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.முதலில் இந்த சேவைக்கு யோதா என்றே பெயர் வைக்க எண்ணியிருந்தாராம்.ஆனால் அந்த பெயர் வேறு ஒரு தளத்திற்கு வைக்கப்பட்டிருப்பதால் அறிவின் ஸ்வாமி என பெயர் வைத்துள்ளார்.

ஸ்வாமி என்பது இந்தியர்களுக்கு அறிமுகமான ஸ்வாமி தான்.ஸ்வாமி என்பவர் வழி காட்டும் குரு என்னும் பொருளிலேயே இந்த‌ பெயரை வைத்துள்ளார்.

வர்த்தக நிறுவனங்களுக்காக மேம்ப்பட்ட கண்காணிப்பு சேவையையும் இது வழங்குகிறது.

———-http://www.swamii.com/

Advertisements

8 responses to “தேடாமல் தேட உதவும் புதுமை தேடியந்திரம் ஸ்வாமி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s