மாற்று வழி காட்டும் மகத்தான தேடியந்திரம்

வாழ்கை வண்ணமயமாக இருக்க வேண்டாமா? இந்த கேள்வியை ஒரு தேடியந்திரத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான்.ஆனால் டூப்லட் ஒன்றும் வழக்கமான தேடியந்திரம் இல்லை.அதனால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வியக்க வைக்கிறது இந்த தேடியந்திரம்.

கேள்வியோடு நிற்கவில்லை. வாழ்கையை வண்ணமயமாக்க இது வழிகாட்டவும்
செய்கிறது.

வண்ணமயம் என்று டூப்லெட் குறிப்பிடுவது வாய்ப்புகளை.அதாவது மாற்று வாய்ப்புகளை.

உலகின் எதற்கும் மாற்றுகளை முன் வைப்பது தான் இதன் சேவை.

மாற்று மருந்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.அதே போல வெகுஜன சினிமாவின் போதாமைகளை இட்டு நிரப்பும் மாற்று சினிமா,லாபத்தை மையமாக கொண்டு இயங்கும் மைன்ஸ்டிரீம் மீடியாவால் செய்ய முடியாததை செய்யும் மாற்று இதழியல் ,காசு பிடுங்கும் அலோபதிக்கு பதிலான மாற்று மருத்துவம் என பழக்கத்தில் இருக்கும் முறைகளின் குறைகளை களையக்கூடிய மாற்றுகள் வாழ்க்கையின் சமநிலைக்கு மிகவும் அவசியம்.

பெரிய விஷயங்கள் என்றில்லை,தினசரி வாழ்கையிலேயே கூட நமக்கு அழப்போது மாற்று தேவைப்படதான் செய்கிறது.

இதை தான் மாற்று இல்லாவிட்டால் வாழ்க்கை அலுத்து கருத்து விடும்.வாய்ப்புகளால் அதனை வண்ணமயமாக்குவோம் என்கிறது டூப்லெட்.

மாற்றுகளுக்கான தேடியந்திரம் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் டூப்லெட்டில் எந்த தலைப்பை அடித்தாலும் அதற்கான மாற்று வாய்ப்புகளை தேடித்தருகிறது.

மற்ற தேடியந்திரங்களில் குறிச்சொல்லை அடித்ததும் தேடல் முடிவுகளின் பட்டியல் வருவது போல டூப்லெட்டில் குறிச்சொல்லை அடித்ததுமே அதற்கான மாற்றுகள் வந்து நிற்கின்றன.சாப்ட்வேரில் துவங்கி கார்கள்,மருத்துவம்,கப்புரிமை குறிகள்,திரைப்படங்கள்,கலைஞர்கள்,தத்துவம் என எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடுங்கள்,மாற்று வாய்ப்புகளை காட்டுகிறோம் என்கிறது டூப்லெட்.

ஒரே மாதிரியான பாட்டை கேட்டு கேட்டு அலுத்து போய் வேறு வகையான பாடல் தேவை என்றாலும் சரி,இல்லை பிரபலமாக இருக்கும் விண்டோசுக்கு மாற்று இருக்கிறதா என அறிய விரும்பினாலும் சரி டூப்லெட் மாற்று வழி காட்டுகிறது.

ஆனால் எல்லாவற்றுக்குமே மாற்று வாய்ப்புகள் வந்து நிற்கும் என்று சொல்ல முடியாது.பல விஷயங்களுக்கு பதில் கேட்டால டூப்லெட் கையை விரிக்கிறது.இந்த குறையை டூப்லெட்டே நன்கு உணர்ந்திருக்கிறது.இப்போது தான் துவங்கப்பட்டுள்ள சேவை என்பதால் எலாவார்றுக்கும் மாற்று காட்ட முடியவில்லை;எனவே சிலவற்றுக்கு முடிவுகள் வரவிட்டால் கோபிக்காதீர்கள் என கெஞ்சும் டூப்லெட் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் இவற்றுக்கும் மாற்றுகளை தேடித்தருகிறோம் என்கிறது.

அது மட்டுமல்ல;இது போன்ற தருணங்களில்,மன்னிக்கவும் மாற்று கைவசம் இல்லை,உங்களுக்கு தகுந்த மாற்று தெரிந்தால் பரிந்துரைக்கவும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

மாற்று தேடும் போது உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று சொல்லப்படுவது முரணானது என்றாலும் பலதரப்பட்ட இணையவாசிகளின் பங்களிப்பால் மாற்று பட்டியல் பரந்து விரிய வாய்ப்பிருக்கிறது.அதோடு நமக்க்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பது இணையத்தின் தனிச்சிறப்பல்லவா?

மேலும் சோதித்து பார்க்கும் நோக்கத்தோடு இந்த தேடியந்திரத்தை பயன்படுத்த முயல்பவர்கள் தங்களுக்கு தெரிந்த மாற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு சோதித்து பார்க்கும் போது இந்த சேவை சுவயாகவே இருக்கிறது.

விண்டோசுக்கு மாற்று என்று கேட்டால் மேக்,லைனக்ஸ்,ஆப்பில்,உபுன்டு என பெரிய பாடியலை தருகிறது.ஒபாமாவுக்கு மாற்று என்றால் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மெக்கெயினில் ஆரம்பித்து புஷ்,கிளிண்டன்,மெடிவிடேவ்,ஹிலாரி உள்ளிட்டோர் பெயரை பட்டியலிடுகிறது.

பிரிட்னிக்கு மாற்றாக கிறிஸ்டினா,ஜெசிகா ,மடோனா,பெயர்களை முன் வைக்கிறது.எம்பி3 க்கு மாற்றாக இபாட்,எம்பி4 என பட்டியலிடுகிறது.ஐபாடுக்கு மாற்றாக ஜூன் பெயரை முதலில் சொல்கிறது.

நல்ல தேடியதிரத்துக்கு அழகு பிராந்தியத்தன்ம் கொண்டிருக்க வேண்டும்.டூப்லெட் இந்த விஷயத்திலும் அசத்துகிறது.

இந்தியா தொடர்பான தேடல்களை புரிந்து கொண்டு பதில் அழகாக சொல்கிறது.சச்சினுக்கு மாற்றாக லாரவையும் திராவிட்டையும் சொல்வதோடு விஜய்க்கு மாற்று அஜித் என்கிறது.

எம்ஜிஆர்க்கு மாற்று எம் ஆர் ராதா என்றும் சிவாஜி என்றும் சொல்கிறது.

சிவாஜிக்கு மாற்று கேட்டால் தசாவதாரம் என்கிறது.தமிழுக்கு மாற்றாக இந்தி,வடமொழி,தெலுங்கு என்கிறது.

ஆனால் தாகூருக்கும்,பாரதிக்கும் மாற்று கேட்டால் முழிக்கிறது.

மொத்ததில் புதுமையான சுவார்ஸ்யமான தேடியந்திரம் தான்.

————-

http://dooblet.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s