வீடியோவோடு வாருங்கள்;அழைக்கிறது விக்கிபீடியா

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவானது,உலகின் மிகப்பெரிய இணைய களஞ்சியம் என்றெல்லாம் எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் விக்கிபீடியாவில் மிகப்பெரிய குறை உண்டு.அந்த குறையை களையும் முயற்சியில் விக்கிபீடியா இப்போது இறங்கியுள்ளது.

விக்கிபீடியாவின் குறை என்றதுமே தகவல்களின் நம்பகத்தன்மையின்மை என்று நிபுணர்கள் சொல்வதை நினைத்துக்கொள்ள வேண்டாம்.இணையவாசிகளே தகவல்களை இடம்பெற வைப்பதும்,இணையவாசிகளே அவற்றை திருத்த அனுமதிப்பதாலும் வழக்கமான கலைகளஞ்சியத்தின் நம்பகத்தன்மை விக்கிபீடியாவில் கிடையாது என்று சொல்லப்படுவதுண்டு.

இதில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும் விக்கிபீடியாவின் பலமும் பலவீனமும் இணையவாசிகளின் பங்களிப்பே என்பதால் இந்த அம்சத்தை குறையாக கொள்வதற்கில்லை.அது மட்டும் அல்லாமல் இந்த அம்சத்தை சரி செய்ய முயன்றால் விக்கியின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும்.

எனவே விக்கிபீடியா குறையாக நினைப்பது நம்பகத்தன்மை தொடர்பான கேள்வியை அல்ல;இது விக்கியின் வீடியோ வரட்சி தொடர்பானது.

ஆம் விக்கிபீடியாயில் உள்ள கட்டுரைகள் விடியோ இணைப்புகளுடன் இல்லாததையே பெருங்குறையாக விக்கிபீடியாவை நிர்வகிக்கும் விக்கிமீடியா பவுண்டேஷன் கருதுகிறது.இதனை சரி செய்யும் முயற்சியாக வீடியோ இணைப்புகளை சமர்பிக்கலாம் என்று இணையவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அச்சில் வரும் கட்டுரையோ , இணையத்தில் வெளியாகும் கட்டுரையோ வெறும் வரிகளாக நீண்டால் படிப்பவர்களிடம் சுவாரஸ்யம் இருக்காது.ஆகவே கட்டுரைகளுக்கு நடுவே பொருத்தமான புகைப்படங்கள் இருக்க வேண்டும்.விக்கிபீடியா கட்டுரைகளிலும் புகைப்படங்கள் இருக்கின்றன.கட்டுரைகளில் தகவல்கள இருக்கும் அளவுக்கு புகைப்படங்கள் அதிகம் கிடையாது என்றாலும் கூட புகைப்படங்களுக்கு குறைவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் பெரும்பாலான விக்கி கட்டுரைகளில் விடியோ இணைப்பு கிடையாது.யூடியுப் யுகத்தில் இதனை பெருங்குறை என்றே சொல்ல வேண்டும்.கையடக்க கேமிராவும் விடியோக்களை பதிவேற்றும் வசதியும் சர்வ சகஜமாகியிருக்கும் நிலையில் இப்போது வலையில் வீடியோ காட்சிகளை எளிதாகவே பார்க்க முடிகிறது.செய்தி தளங்கள் செய்திகளோடு அவற்றின் வீடியோ இணைப்பையும் கொடுத்து அசத்துகின்றன.

இப்படி எல்லாமே காட்சிமயமாகி வரும் நிலையில் விக்கி கட்டுரைகள் மட்டும் தகவல் தொகுப்பாக மட்டுமே இருந்தால் எப்படி?நல்லவேளையாக  விக்கிமீடியா பவுண்டேஷன் இந்த குறையை உணர்ந்திருப்பதோடு இதனை சரி செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.

விக்கி கட்டுரைகளில் பொருத்தமான இடங்களில் விடியோக்களை இணைக்க திட்டமிடப்பட்டு விக்கி கலாச்சாரத்தின் படி இந்த பொருப்பு இணையவாசிகளிடமே ஒப்படைப்பட்டுள்ளது.

இதற்காக விடீயோஆன்விக்கி என்னும் இணையதளம் அமைக்கப்பட்டு விடியோ காட்சிகளை சமர்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மனித குல வரலாற்றிலேயே மாபெரும் கூட்டு சோதனை முயற்சியான விக்கிபீடியா இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் இணையதளமாகவும் விளங்குகிறது.விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பில் 32 லட்சம் கட்டுரைகள் உள்ளன. இனையவாசிகளின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியே இதற்கு காரணம் என்று துவங்கும் இந்த தளத்தின் அறிமுக பகுதி ஆனால் கட்டுரைகளின் புரிதலை மேம்படுத்தக்கூடிய விடீயோ இணைப்புகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்கிறது.

இப்போதைய நிலையில் மிகச்சில கட்டுரைகளிலேயே வீடடியோ இணைப்பு இருப்பதால் அதனை மாற்றிக்காட்டும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்து வீடியோ இணைப்புகளை சமர்பிக்க வாருங்கள் என்று அழைக்கிறது.

இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல விக்கிபீடியா வீடியோவுக்கு தயாராகிவிட்டது .இனி விக்கிபீடியாவில் படிக்க மட்டுமல்ல பார்க்கவும் விஷயம் இருக்கும்.

———-

http://videoonwikipedia.org/

Advertisements

4 responses to “வீடியோவோடு வாருங்கள்;அழைக்கிறது விக்கிபீடியா

  1. இன்றைய வேகமான உலகில் நிதானமாக கட்டுரைகளை படிக்க யாருக்கும் நேரம் இல்லை. காட்சிபடுதும்போது இன்னும் அதிகமான உறுப்பினர்களை சென்றடையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s