ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்.

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கென பல தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.

அவற்றில் மிக எளிமையான இரண்டு தேடியந்திரங்களை பார்ப்போம்.

முதலில் தி இன்போ.காம்.அநேகமாக பழைய தேடியந்திரமாக இருக்க வேண்டும்.இதன் வடிவமைப்பே அதற்கு சான்று.அதோடு இப்போது பலரும் மறந்துவிட்ட ,பெரும்பாலானோர் கேள்விபட்டிராத ஆல் தி வெப் தேடியந்திரத்தையும் தனது பட்டியலில் சேர்த்து கொண்டுள்ளது.அதோடு மைக்ரோசாப்டின் எம் எஸ் என் தேடியந்திரத்தையும் பட்டியலிட்டுள்ளது.பல் அவதாரம் எடுத்த மைக்ரோசாப்ட் தேடியந்திரம் தற்போது ‘பிங்’காக உருவெடுத்து விட்டதை இன்னும் கணக்கில் எடுத்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால் 2000 த்துக்கு பிறகு புதுபிக்கப்படவில்லை என்னும் குறிப்பு காணப்ப‌டுகிறது.

எனவே இத‌னை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை.ஆனால் பல தேடியந்திர தேடலின் பாரம்பரியத்தின் சுவடுகளை நினைவு கொள்ள இது உதவலாம்.

தி இன்போ உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம் என்றாலும் சர்ச்சி.யோ நிச்சயம் உங்களை கவரும்.

பல தேடியந்திர சேவைகளின் கூகுல் என்று இதனை சொல்லலாம்.கூகுலை போலவே எளிமையான தெளிவான் வடிவமைப்பு கொண்டிருப்பதோடு செயல்பாட்டில் அத‌னை போலவே அசத்துகிறது.

இதன் தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை டைப் செய்தது விட்டு  இடது பக்கத்தில் வந்தால் நமக்கான தேடல் வாய்ப்புகள் மேலும் கீழுமாக வரிசையாக தோன்றுகின்றன.செய்திகள்,புகைப்படங்களா,வலைப்பதிவுகளா,புக்மார்குகளா,வீடியோக்களா, என எவற்றை வேண்டுமானாலும் தேர்வு செய்து தேடலாம்.புத்தகங்கள்,எழுத்துருக்கள்,நபர்கள் என நீளூம் இந்த பட்டியலில் தேடியந்திரங்களும் உள்ளன.

தேடியந்திரங்களை கிளிக் செய்தால் கூகுலின் தேடல் பட்டியல் தோன்றுகிறது.அப்படியே மேலே பார்த்தால்,பிங்,ஆஸ்க்,லைகோஸ்,ஆல்திவெப்,டாக்பைல் ஆகிய தேடியந்திரங்கள் இடம் பெற்றுள்ளன. எந்த தேடியந்திரம் தேவையோ அத்னை கிளிக் செய்தால் அதற்கான முடிவுகள் தோன்றுகின்றன.

புக்மார்க்குகள்,டிவிட்டர் போன்ற சமூக தளங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேட‌லை செழுமைப்படுத்திக் கொள்ளலாம். எந்த கட்டத்திலும் வடிவமைப்பு குழப்பம் இல்லாமல் எளிமையாக வழிகாட்டுவது பாரட்டத்தக்கது.ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேட விரும்புகிறவர்களுக்கு இந்த தேடியந்திரம் மிகவும் ஏற்றது.
இந்த‌ தேடியந்திரத்தின் எளிமையின் மகத்துவத்தை புரிந்து கொள்ள இதே போன்ற‌ சேவையை வழங்குவதாக சொல்லி கொள்ளும் வைபீஸ் தளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.கூகுலில் துவங்கி,டிக்,அலெக்ஸா,யூடியூப்,டைலிமோஷன்,டிவிட்டர் என பல தளஙகலை பட்டியலிட்டாலும் அவற்றில் ஒரு ஒழுங்கே தேடுபவர்கள் பற்றீஅய் கரிசனமோ இல்லாமல் சிக்கலானதாக காட்சி அளிக்கின்றன.விளம்பர‌த்துக்காக உருவாக்கப்பட்ட  சேவையாக‌ இருக்க வேண்டும்.

இணையதள முகவரி;http://search.io/

———-

http://www.theinfo.com/

——–

http://wiibeez.com/

Advertisements

5 responses to “ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்.

  1. Pingback: இ-சீக் எழுதமறந்தவைகள்.·

  2. Pingback: ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!. « Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s