ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு இணையதளம்

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள்  இருக்கின்றன.

பேராசிரியர்களை மாணவர்கள் மதிப்பிட வைக்கும் தளங்கள் தான் அவை.

பொதுவாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தானே மதிப்பெண் போடுவார்கள்.ஆனால் இந்த தளங்கள் மூலம் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் போடலாம்.அதாவது அவர்களை மதிப்பிடலாம்.

 1 முதல் 5 வரை மதிப்பெண் கொடுப்பதோடு பேராசிரிர்கள் பாடம் நடத்திய விதம் குறித்து கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

ரேட் மை டீச்சர் தளம் இந்த வகை தளங்களை முன்னோடி என்று சொல்லலாம்.அதைவிட முதலில் ஆர்ம்பிக்கப்பட்ட தளம் என்று சொல்லலாம்.ஆசிரியர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவ்ர்கள் அல்ல என்றாலும் மாணவர்கள் ஆசிரியர்களை சீர் தூக்கி மதிப்பிட வைத்த இந்த தளம் இண்டெர்நெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒருவிதத்தில் இன்டெர்நெட்டின் சுதந்திர போக்கின் விளைவாக இந்த தளத்தை கருதலாம்.இணையம் எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும் விமர்சனம் செய்யவும் வழி செய்துள்ளது.வர்த்தக நிறுவனங்களையும் அதன் தயாரிப்புகளையும் சாமன்யர்கள் தராசில் நிறுத்தி தீர்ப்பு சொல்ல உதவும் இணையதளங்கள் மற்றும் சேவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்த நோக்கில் தான் ரேட் மை டீச்சர் தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்களை பகிரங்க விமர்சனத்திற்கு உள்ளாக்குவது நல்லது தானா என்னும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த தளத்தை தொடர்ந்து ரேட் மை பிரபசர் என்னும் கால்லூரிஆசிரியர்களுக்கான மதிப்பீட்டு தளம் தலை காட்டின.

இந்த தளங்களின் அவசியம் மட்டும் பயன்பாடு குறித்து கேள்விகள் இருந்தாலும் அடிப்படையில் இவை மாணவர்களுக்கான விளையாட்டான சேவை என்றே கருதப்பட்டன.பெரும்பாலான ஆசிரியர்கள் இவற்றை கண்டு கொள்ளாமால் இருப்பது நல்லது என நினைத்தனர்.

இருந்தாலும் நல்லாசிரியர்களுக்கு இந்த தளங்கள் வேதனையையே தரலாம்.

ஆனால் இந்த போக்கிற்கு மருந்து போடும் வலையில் அருமையான இணையதளம் ஒன்று இப்போது உதயமாகியுள்ளது.டீச்சர்வால் என்னும் இந்த தளம் ஆசிரியர்கள் மீதான  மாணவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

டீச்சர்களுக்கான டிவிட்டர் என்று சொல்லக்கூடிய இந்த தளத்தில் மானவர்கள்  அபிமான ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ளலாம்.அப்படியே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆசிரியர் யார் ,அவர் எப்படி தன்னை கவர்ந்தார் என்பதை குறும்பதிவு போல பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.

மற்றவர்கல் முன்னுதாரனமாக கருதும் ஆசிரியர்கள பற்றி படித்து பார்த்து கருத்தும் தெரிவிக்கலாம்.அந்த வகையில் ஆசிரியர் மீதான பற்றின் அடிப்படையில் நட்பை வளர்த்து கொள்ளும் வலைப்பின்னல் தளம் என்றும் இதனை கொள்ளலாம்.

நம்முடைய ஆசிரியர் பற்றி சொல்லியுள்ளனரா என்று அவரது பெயரை குறிப்பீடு தேடும் வசதியும் இருக்கீறது.கல்வி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டும் தேடலாம்.

இப்போது தான் துவங்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பட்டியல் நீளவில்லை என்றாலும் ஆசிரியர் பற்றிய பத்கிவுகள் சில உள்ளபடியே நெகிழ வைக்கின்றன.

மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் அப்படி மாற்றத்தை ஏற்படுத்திய நல்லாசிரியர்களின் மீதான நன்றி உணர்வை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த தளம் உருவாக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நல்ல உணர்வுகளை மட்டுமே வெளீப்படுத்தவும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

நம்மில் கூட பலர் அருமையான ஆளுமைகளை ஆசிரியர்களாக பெற்றிருப்போம்.அவர்கள் பற்றி அவப்போது பேசவும் செய்ய்லாம்.அத்தகைய உணர்வுகளை பதிவு செய்வதற்கான கரும்பலகையாக இந்த தளம் அமைந்துள்ளது.

எனவே உங்களுக்கும் மறக்கு முடியாத ஆசிரியர்கள் இருந்தால் டீச்சர்வாலில் அவரை நினைவு கூறுங்கள்.

இணையதள முகவரி;http://www.teacherwall.com/view/main

Advertisements

5 responses to “ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு இணையதளம்

  1. வணக்கம் நண்பரே,
    எனக்கு தங்களிடம் ஒரு ஆலோசனை தேவை.
    1.நோக்கியா சமீபத்தில் வெளியிட்ட NOKIA C3 என்ற மொபைலில் wifi வசதி உள்ளது.எனவே இதில் gprs மூலம் இணையத்தில் gtalk,fring,skype….போன்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி online voice chat செய்யமுடியுமா?

    கேள்விக்கான பதிலை tvetsi@gmail.com ற்கு அனுப்பமுடியுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s