டிவிட்டரில் ஒரு நாள்;காவல் துறையின் புதிய‌ முயற்சி.

உலக காவல் துறையில் முதல் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் மான்செஸ்டர் நகரை சேர்ந்த காவல்துறையினர் தங்கள் ஒரு நாள் செயல்பாடுகள் முழுவதையும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.இது தான் நாங்கள் செயல்படும் விதம் பார்த்து கொள்ளுங்கள் என்று அவர்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளனர்.

வெளியீட்டு சாதனமாகவும் கருதப்படும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை மற்ற துறையினர் பயன்படுத்துவது போலவே காவல் துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் இப்படி ஒரு சில காவல் நிலையங்கள் டிவிட்டரை ஒரு முன்னோடி முயற்சியாக பயன்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆனால் இந்த டிவிட்டர் பதிவுகள் பெரும்பாலும் குற்றாவாளிகளை பிடிப்பதற்கான முயற்சியில் பொது மக்களை ஈடுபடுத்தவும்,குற்ற நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கவும் பயன்படுத்தபடுகின்றன.என்னும் மக்களோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி கொள்ள டிவிட்டர் போன்ற தொழில்நுட்ப சேவைகளை காவல்துறை பயன்படுத்தி கொள்ளும் இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை மறுப்பதற்கில்லை.

இருப்பினும் மான்செஸ்டர் காவல்தூறையின் டிவிட்டர் முயற்சி காவல்துறைக்கு மட்டும் அல்ல டிவிட்டர் பயன்பாட்டிலேயே முன்னோடி முயற்சியாக கருதப்படுகிறது.

பல்வேறு துறைகல் டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனவே தவிர இதற்கு முன்னர் ஒரு நாள் செயல்பாடுகள் முழுவதையும் எந்த துறையும் பதிவு செய்ததாக தெரியவில்லை.இங்கிலாந்தின் மான்செஸ்டர் காவல் துறை தான் இதனை முதலில் செய்திருக்கிறது.

மான்செஸ்டர் காவல்துறை மிகவும் சோதனையான சூழலில் இதில் ஈடுபட்டது  தான் கவனிக்கத்தக்கது.

பிரிட்டன் அரசுத்துறையில் சிக்கன நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவற்றின் ஒரு பகுதியாக மான்செஸ்டர் நகர காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு மேலும் நிதி குறைப்பு செய்யபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவை குறைப்பதற்கான நடவடிக்கை என்ற போதிலும் நிதி குறைப்பு என்பது தங்கள் செயல்பாடுகளை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மான்செஸ்டர் காவல்துறையினர் கருதினர்.ஏற்கனவே பணிச்சுமை அதிகம் உள்ள நிலையில் நிதி பற்றாக்குறை கூடுதல் சுமையையே ஏற்படுத்தும் என்று அவர்கள் நெஞ்சம் குமுறினர்.

பொதுவாக அரசு துறையினர் இத்தகைய நிலைக்கு ஆளாகும் போது அதிருப்தி அடைவது இயல்பானது.இது போன்ற நிலையில் அவர்கள் போராட்டம் நடத்தவோ ஆர்ப்பட்டம் நடத்தவோ முடிவு செய்வார்கள்.அதற்கு வாய்ப்பில்லை என்றால் தங்களுக்குள் புலம்பி தீர்ப்பார்கள்.

ஆனால் மான்செஸ்டர் காவல்துறையினர் டிவிட்டரில் தங்கள் மனக்குறையை வெளியிட தீர்மானித்தனர்.அதிலும் புதுமையான முறையில் தங்களுக்கு பெருமை தேடிகொள்ளும் வகையில் செயல்பட முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு நாள் முழுவதும் தங்கள் அலுவல்களை டிவிட்டரில் வெளியிட்டனர்.காலை 5 மணி முதல் மறு நாள் காலை 5 மணி வரை 24 மணி நேர செயல்பாடுகள் முழுவதையும் இப்படி டிவிட்டரில் பதிவு செய்தனர்.

காவலர்களின் வேலை திருடர்களை பிடிப்பது மட்டும் என்றே எல்லோரும் எளிமையாக நினைத்து கொண்டிருக்கின்றனர் ஆனால் உண்மையில் இது ஒரு பகுதி மட்டுமே ,காவலர்களின் பணி பெரும்பாலும் காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது ,குடும்ப சண்டை புகார்களை கவனிப்பது ,போன்ற சமூகம் சார்ந்ததாக இருக்கின்றது என்றும் அதனை உணர்த்தவே எங்கள் ஒரு நாள் அலுவலை டிவிட்டர் வாயிலாக பார்வைக்கு வைப்பதாக தலமை காவலர் பீட்டர் பாஹே கூறியிருந்தார்.

காவல் துறையின் செயல்பாடுகளை மதிப்பிட  வேறுவிதமான அளவுகோள் தேவை என்பதை வலியுறுத்த விரும்புவதாகாவும் ஆவர் கூறியிருந்தார்.

நாங்கள் வெட்டி வேலை செய்து கொன்டிருப்பதாகவா நினைக்கிறீர்கள் ;எங்கள் பணியை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்வது போல அன்றைய தினம் முழுவதும் ஒவ்வொரு நடவடிக்கையையும் உடனுக்குடன் டிவிட்டரில் பதிவு செய்தனர்.

அந்த பதிவுகள் குறிப்பிட்ட ஒரு நாளில் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் ,அவற்றுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளையும் சுட்டிக்காட்டின.
 
பாலம் ஒன்றி மீது குழந்தையுடன் ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அவசர அழைப்பு வந்ததை அடுத்து விசாரனைக்கு ஓடிசென்று பார்த்தால் அந்த ஆசாமி உண்மையில் நாய்க்குட்டி ஒண்றை தூக்கி வைத்து கொண்டிருப்பதயே பார்க்க முடிந்திருக்கீறது.நாய்க்குட்டிக்கு பாலம் என்றால் பயன் என்பதால் அவர் அதனை தூக்கி வைத்திருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

மற்றொரு அழைப்பு தன்னை அழகாக இருப்பதாக ஒருவர் வர்ணித்தார் அவரை கைது செய்யுங்கள் என்று பெண்மணி ஒருவருடையதாக இருந்தது.

இவற்றை தவிர கார் திருட்டு,கொள்ளை முயற்சி, போன்ற புகார்களும் அதிக அளவில் பெறப்பட்டன.மேலும் காணாமல் போன குழந்தைகள பற்றிய புகார்களுக்கு மத்தியில் காணமல் போன நாய்க்குட்டியை மீட்டுத்தாருங்கள் போன்ற புகார்களோடு பலர் வந்துள்ளனர்.யாரோ ஒரு பெண்மணி தன்னுடைய யூடியூப் தளத்தில் மர்ம ஆசாமி விடியோவை இடம்பெறசெய்ததாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார்.
மொத்தத்தில் 700 அவசர அழைப்புகள் உட்பட அன்று முழுவதும் பெறப்பட்ட புகார்கள்,மற்றும் அவை தொடர்பான நடவடிக்கைகளை குறும் பதிவுகளாக வெளியிட்டனர்.

ஒவ்வொரு நாளும் காவல் துறையினர் என்ன செய்கின்றனர் என்று உணர்த்தும் வகையில் அமைந்திருந்த அந்த பதிவுகளுக்கு பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.மான்செஸ்டர் காவல் துறை டிவிட்டர் முகவரியின் பின்தொடர்பாளர் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்தது.

காவல் துறையினர் எந்த அளவுக்கு சமுக்கத்தில் இணைந்து செயல்படுகிண்ரனர் என்பதையும் அவர்களை முழுமையாக நம்பலாம் என்பதையும் இந்த குறும்பதிவுகள் உணர்த்துவதாக பொது மக்களில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

மான்செஸ்டர் காவலர்கள் எதிர்பார்த்ததும் அதனை தானே.

Advertisements

3 responses to “டிவிட்டரில் ஒரு நாள்;காவல் துறையின் புதிய‌ முயற்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s