மேலும் ஒரு இணையதள சேமிப்பு சேவை

என்றாவது ஒரு நாள் படிப்பதற்காக இணைய பக்கங்களை குறித்து வைக்கும் சேவைகளை விரும்புகிறவர்கள் இன்ஸ்டா பேப்பர் சேவையை மிகவும் விரும்பக்கூடும் என்றாலும் உண்மையில் இந்த சேவையை வாசிப்பு விரும்பிகளுக்கானது என்றே சொல்ல வேண்டும்.

அதாவது படிக்க விரும்புகிறவர்களுக்கான சேவை இது.இன்னும் சரியாக சொல்வதனால் நீண்ட கட்டுரைகளை படிக்க விரும்புகிறவர்களுக்கானது.

பொதுவாகவே இப்போது அளவில் பெரிய கட்டுரைகளை யாரும் படிக்க விரும்புவதில்லை.டிவிட்டர் யுகத்தில் எதுவுமே சின்னதாக இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.இருந்தாலும் என்ன,ஒரு நீண்ட கட்டுரை தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தையும் ஆழமான புரிதலையும் விரும்புகிறவர்கள் இல்லாமல் இல்லை.

ஆனால் சோதனையாக நீண்ட கட்டுரைகளை படிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.அதிலும் இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது நல்ல கட்டுரை தென்பட்டால் அதனை உடனே படிப்பது கொஞ்சம் கடினமானது தான்.

இது போன்ற நேரங்களில் கைகொடுப்பது தான் இன்ஸ்டா பேப்பர் சேவை.

இன்ஸ்டா பேப்பர் சேவையை பயன்படுத்தி இணையதளங்களில் பார்க்கும் நீண்ட கட்டுரைகளை பின்னர் படிக்க என சேமித்து கொள்ளலாம்.அதன் பிரகு நேரம் கிடைக்கும் போது இங்கே வந்து அந்த கட்டுரையை படித்து மகிழலாம்.

டெஸ்க்டாப்பில் மட்டுமல்லாது ஐபோனிலும் படிக்க முடியும்.இபுக் சாதனத்திலும் படிக்க முடியும்.ஆனால் ஒன்று இந்த கட்டுரைகள் எல்லாம் காலகாலத்திற்கும் அப்படியே இருக்கும் என்று இன்ஸ்டா பேப்பர் உறுதி அளிக்கவில்லை.கட்டுரைகள் தற்காலிகமாகவே சேமிக்கப்பட்டிருக்கும்.

ஒருவித்ததில் இதுவும் நல்லதுக்கு தான்.பின்னர் படிக்கலாம் என்று அலட்சியமாக தள்ளி போட்டு கொண்டே இருக்காமல் படித்து முடிக்க இது கட்டாயப்படுத்தலாம்.

இன்ச்டா பேப்பரின் இன்னும் ஒரு முக்கியமான சுவாரஸ்யம் இருக்கிறது.நாம் சேமித்த கட்டுரைகளை படிப்பதோடு சமீபத்தில் மற்றவர்கள் சேர்த்து வைத்த கட்டுரைகளையும் படிக்கலாம்.அந்த வகையில் இன்ஸ்டா பேப்பர் கட்டுரைகளுக்கான திரட்டியாகவும் செயல்படுகிறது.

ஆனால் திரட்டிகளிள் சமர்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தொடு கட்டுரைகள் பகிரப்படுவதால் அவற்றின் தரம் எப்போதுமே சிறந்ததக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.இன்ஸ்டா பேப்பரிலோ உறுப்பினர்கள் தங்களுக்கு சுவாரஸ்யமான கட்டுரைகளை சேமித்து வைப்பதால் அவறறின் தரம் உயர்வாகவே இருக்க வாய்ப்புள்ளது.

உறுப்பினர்கள் சேமிக்கும் கட்டுரைகள் ஆடிரியரின் தேர்வாகவும் ,மிக பிரபலமாதாகவும் தனித்தனியே பட்டியலிடப்படுகின்றன.இவற்றை தவிர ஒவ்வொரு தலைப்புகளுலும் குறிச்சொற்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம்,கலாச்சரம்,பொழுதுபோக்கு,இலக்கியம்,பொது,வரலாறு,மீடியா,விளையாட்டு என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை பார்க்கலாம்.

கட்டுரைகளை கிளிக் செய்து அப்போதே படிக்கவும் செய்யலாம்.இல்லை இந்த தளத்தின் தன்மைக்கு ஏற்ப பின்னர் படிக்க என குறித்து வைத்து கொள்ளலாம்.

ஒரு விதத்தில் பார்த்தால் இதனை வாசிப்பு சார் வலைப்பின்னல் சேவையாகவும் கருதலாம்.நல்ல அருமையான கட்டுரைகளை அடையாளம் கண்டு கொள்வதோடு குறிபிட்ட கட்டுரை நன்றாக இருந்தால் அதனை பகிர்ந்து கொண்டவர்களின் மற்ற பகிர்வுக்ளையும் பார்க்கலாம்.தொடர்ந்து பின்பற்றவும் செய்யலாம்.நம்மையும் கூட பலரும் பின்தொடரலாம்.

நல்ல கட்டுரைகளை பார்ப்பதற்காக என்றே இந்த தளத்திற்கு அடிக்கடி விஜயம் செய்யலாம்.இந்த தளத்தின் போன்ஸ் பலன் இது.

இணையதள முகவரி;http://www.instapaper.com/

Advertisements

2 responses to “மேலும் ஒரு இணையதள சேமிப்பு சேவை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s