கற்பதற்கு ஒரு இணைய டிவி

இண்டெர்நெட் மூலம் பாடங்களை பயில உதவும் மற்றும் வீடியோ படங்களை திரட்டித்தரும் இணையதளமான ஃபிரிவிடியோலெக்சர்ஸ் பற்றி படித்து விட்டு இத இத தான் எதிர்பார்த்தேன் என்று நீங்கள் உற்சாகமடைந்திருந்தால் உங்களுக்கான மேலும் சில தளங்கள் இருக்கின்றன.

அறிவுபசி கொண்டவர்களுக்கு முழு சாப்பாடு போடக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தளமாக லேர்னர்ஸ்டிவியை குறிப்பிடலாம்.

ஆயிரக்கணக்கான வீடியோ பாடங்களின் இருப்பிடன் என வர்ணித்து கொள்ளும் இந்த தளம் உயிரைய,கணிதம்,பெளதீகம்,கம்ப்யூட்டர்,நிர்வாகவியல்,சட்டம்,இலக்கியம் என விதவிதமான த்லைப்புகளீன் கீழ் விடியோ பாடங்களை வஞ்சனையில்லாமல் வழங்குகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் பத்துக்கும் மேற்பட்ட வீடியோ உறைகள் இடம்பெற்றுள்ளன.இணைய வகுப்புகளில் சேர விரும்புகிறவர்களுக்காக
அப்படியே பாடதிட்டாஙக்ளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தளத்தின் சிறப்பம்சமே விடியோ பாடதிட்டங்கள் மற்றும் விடியோ பாடங்களோடு நிறுத்தி கொள்ளாமல் இணைய தேரு,அனிமேஷன் வகுப்பு போன்ரவற்றையும் வழங்குவது தான்.

ஆம்,மாணவர்கள் தங்கள் திறனை இங்கு பட்டியலிடப்பட்டுள்ள தேர்வுகளில் பங்கேற்று பட்டை தீட்டிக்கொள்ள முடியும்.இணையத்திலேயே தேர்வு எழுதி அங்கேயே அதற்கான விடைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்ப்டுகின்றன.அதே போல குறிப்பிட்ட தலைப்புகளில் அனிமேஷனில் விளக்கம் அளிக்கும் பாடங்களும் உள்ளன. பேராசிரியர்களின் பாடங்களுக்கான வகுப்பு குறிப்புகளுக் கூட இருக்கின்றன.

மருத்துவ வகுப்புகளுக்கான பவர் பாயின்ட் விளக்கம் கலவி சார்ந்த பத்திரிகைகளுக்கான இணைப்பு என்று இந்த தளம் வியக்க வைக்கிறது.

இலவச இணைய கல்வியை தலை வாழையிலை போட்டு பரிமாறுகிறது இந்த தளம்.

அகாடமிக் எர்த் ஆர்ஜி இணையதளமும் இதே போல வியக்க வைக்கிறது.இணையத்தின் மூலம் படித்து பட்டம் பெறக்கூடிய இணைய வகுப்புகளோடு இணையவாசிகளை சேர்த்து வைப்பதே எங்கள் நோக்கம் என்று சொல்லும் இந்த தளம் அதனை அழகாக செய்கிறது.

பாடத்தலைப்புகள் மற்று பல்கலை கழக பட்டியல் என இரண்டு விதமாக இணைய வகுப்புகளை தேட முடிகிறது.இதனை தவிர முகப்பு பக்க்த்திலேயே தெர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகளுக்கான விடியோக்கள் வரவேற்கின்றன.

வழக்கமான பாட திட்டங்களோடு வரலாறு மூலம் புதிய ஏற்பாட்டினை கற்பது போன்ற வித்தியாசமான விடியோ வகுப்புகளும் கவர்கின்றன.சிறந்த பாடதிட்டங்களின் பட்டியலும் பக்கவாட்டில் இடம் பெறுகிறது.அதிகம் பேரால் பயிலப்படும் வகுப்புகளின் பட்டியலும் வழி காட்டுகிறது.

முன்னணி பல்கலைகளால் வழங்கப்படும் பிரபலமான பட்ட வகுப்புகளுக் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

உலக்ததரம் வாய்ந்த கல்வியை உலகில் உள்ளோருக்கெல்லாம் வழங்கும் உய்ர்ந்த லட்சியத்தோடு இந்த தளம் செயல்பட்டு வருகிறது.இணையத்தில் பாடங்களும் ,பட்ட வகுப்புகளூம் அதிக அளவில் பதிவேற்றுப்பட்டு வரும் நிலையில் அவற்றை இணையவாசிகள் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கும் எண்ணத்தோடு எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்டு லுட்லவ் என்னும் அமெரிக்கர் இந்த தளத்தை நிறுவியிருக்கிறார்.யேல் பல்கலையில் படித்து கொண்டிருக்கும் போது விக்கிபீடிய அநிறுவனர் ஜிம்மி வேல்ஸ் போன்றோரின் இணைய முயற்சிகளை அறிந்து அதனால ஏற்பட்ட உந்துதலால் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்.தான் படிக்கும் போதே ஓபன் சோர்ஸ் முறையில் கிடைத்த பாடங்களால் பயன்பெற்ற ரிச்சர்டு உலகில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இணையவசதி உள்ள எவருக்கும் உலக் தரம் வாய்ந்த பேராசிரியர்களின் பாடங்களை கிடைக்கச்செய்வதன் மூலம் ஒட்டுமொத்த கல்வி நிலையை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது.

இணையதள முகவரி;

http://academicearth.org/

http://www.learnerstv.com/

Advertisements

2 responses to “கற்பதற்கு ஒரு இணைய டிவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s