சுற்றுலா செல்லும் முன் உலா வர ஒரு இணையதளம்.

வரலாறு உங்களை வரவேற்கிற‌து.

சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசிகளை அழைக்கிறது.

வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மற்றும் விரும்புகிறவர்கள் இந்த தளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்கள் முதலில் இந்த தளத்தில் ஒரு உலா வரலாம்.

சுற்றுலா விவரங்களை தருவதற்காக தான் ஏற்கனவே பல இணையதள‌ங்கள் இருக்கின்றணவே என்று நீங்கள் கேட்கலாம்.சுற்றுலா விவரங்களை த‌ருவதோடு மட்டும் அல்லாமல் தங்குமிடத்தை புக செய்வதில் துவங்கி பயணத‌தையே முன்கூட்டியே திட்டமிட உதவும் தளங்களும் இருக்கின்றன.

இவற்றை தவிர எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டால் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை இணையத்தில் தேடுவது மிக சுலபம்.குறிப்பிட்ட நகரங்கள் பற்றி தகவல்கலை தரும் பிரத்யேக தளங்களும் இல்லாமல் இல்லை.

ஆனாலும் கூட ஹிஸ்டார்வியஸ் கவனத்தில் கொள்ள வேண்டிய சுற்றுல தளமாக விளங்குகிறது.

அதற்கு காரணம் இந்த தளம் வரலாற்று நோக்கிலான விவரங்களில் கவனம் செலுத்துவது தான்.ஆம் ஒவ்வொரு நாட்டிலும் பார்க்க கூடிய வரலாற்று மையங்கள் பற்றிய விவரங்களை இந்த தளம் இணையவாசிகளுக்கு தருகிறது.

அட சுற்றுலா என்றாலே வரலாற்று மையங்களும் அடக்கம் தானே என்று மீண்டும் கேட்க தோன்றலாம்.இந்திய என்றால் தாஜ்மாகால்,இத்தாலி என்றால் கோலாஸியம்,பாரீஸ் என்றால் ஈபிள் கோபுரம் என எல்லா சுற்றுலாவுமே வரலாற்று நினவு சின்னங்களோடு தானே தொடர்பு படுத்தப்படுகிறது?

வாஸ்தவம் தான்.ஆனால் இங்கே தான் ஹிஸ்டார்வியஸ் தளம் அர்த்தம் பெறுகிற‌து.

இந்த தளம் புகழ் பெற்ற வரலாற்று சின்னங்கள் குறித்த தகவல்களை தருவதோடு மறைந்திருக்கும் வலாற்று பொக்கிஷங்களையும் அடையாளம் காட்டுகிறது என்பதே விஷயம்.அதாவது பல‌ரும் அறியாத அவ்வளவாக பிரபலாலமாகாத ஆனால் வரலாற்றின் சுவடுகளை தன்னுள்ளே கொண்டிருக்கும் இடங்களை இந்த தளம் அறிய உதவுகிற‌து.

உதாரணத்திற்கு இத்தாலியின் ரோம் என்றதுமே எல்லோருக்குமே நினைவுக்கு வருவது வரலாற்று சின்னமான கோலாஸியம் தான்.ஆனால் அதற்கு மிக அருகாமையிலேயே ரெயிலில் போக கூடிய தொலைவில் ஆச்டிய அன்டிகா என்னும் இடம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று இந்த தளம் கேட்கிற‌‌து.ரோம் ந‌கரின் ஆதி கால துறைமுகத்தின் மிச்ச சொச்சமாக விளங்கும் வரலாற்று பொக்கிஷம் இது. அதெ போல ரோம் நகருக்கு வெளியே ஹாட்ரியன் வில்லா என்னும் அருமையான வரலாற்று இடம் உள்ளது.

சுற்றுலா வரைபடங்களில் விடுப்பட்டு போகும் இது போன்ற வரலாற்று மாணிக்கங்களை இனையவாசிகளுக்கு சுட்டிக்காட்டுவதையே இந்த தளத்தின் தனிச்சிறப்பு என்று சொல்லலாம்.

திரைப்படங்களில் அற்புதமாக நடிக்கும் துணை நடிகர்களை பலரும் கண்டும் கொள்ளாமல் நட்சத்திரங்கள் மீது மட்டுமே கவன்ம் செலுத்துவது போல வரலாற்ரு இடங்கள் என்று வரும் போதும் எகிப்தின் பிரமிட்டும்,இந்தோனேசியாவின் அங்கோர்வாட்டும் தான் கோலோச்சுகின்ற‌ன.

இவ்வ‌ளவு ஏன் இந்தியா என்றவுடன் தி தாஜ்ஜும் ,ஜெய்புரும் தானே முன்னிலை பெறுகின்றன.அதிக போனால் நம்மூர் மகாபலிரத்தை கவனத்தில் கொள்கின்ற‌னர்.தஞ்சை பெரிய கோயிலோ,மதுரை நாயக்க மகாலும் எத்தனை வெளிநாட்டவருக்கு தெரியும் சொல்லுங்கள்.இதே போல இந்தியா முழுவதும் அறியப்படாத வராலற்று சிறப்பிடங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டவரை விடுங்கள் .நம்மவரகளுக்கே கூட இவற்றில பெரும்பாலான இடங்களை தெரியும் என்று சொல்ல முடியாது.

உலகம் முழுவதும் உள்ள இத்தகைய பிரபலமில்லாத ஆனால் பார்க்க வேண்டிய‌ இடங்களின் இருப்பிடமாக திகழ வேண்டும் என்பதே இந்த தள‌த்தின் உயர்வான நோக்கம்.

அனால் ஒன்று இணையவாசிகளின் பங்களிப்பு இல்லாமல் இந்த நோக்கம் நிரைவேறுவது சாத்தியமில்லை.எனவே தான் இந்த தளம் வரலாற்று தளங்கள் பற்றீய விவரங்களை சமர்பிக்க அழைப்பு விடுக்கிறது.உங்கல் ஊரில் உள்ள பிரபலமான வரலாற்று சின்னம் முதல் கொண்டு பலரும் அறியாத அரிதான இடங்கள் பற்றிய தகவல்களையும் இங்கு இணையவாசிகள் சமர்பிக்கலாம்.

அந்த வகையில் வராலாற்று இடஙக்ளுக்கான விக்கிபீடியா என்றும் இத‌னை சொல்லலாம்.

இப்போது தான் துவங்கப்பட்டுள்ளதால் இந்த தளத்தில் அதிக இடங்கள் இல்லை.ஆனால் இணையவாசிகள் பங்களிப்பால் இந்த தள‌ம் வளரும் போது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று பொக்கிஷங்களை இங்கே எதிர்பார்க்கலாம்.அந்த வகையில் நம்மவர்களும் இந்திய பொக்கிஷங்களை இங்கே பதிவு செய்யலாம்.

ஒரு முழுமையான வரலாற்று சுற்றுலா வழிகாட்டி தளத்துக்கான அனைத்து அம்சங்களும் இந்த தளத்தில் உள்ளன.

சுற்றுலா பிரியர்கள் தாங்கள் பார்வையிருவத‌ற்கான இடங்களை தேடும் வசதியும் உள்ளது.வரலாற்று காலத்தை குறிப்பிட்டும் தேடலாம்.

இடங்கள் பற்றீய வரலாற்று தகவல்கள மட்டும் அல்லாமல் அவை தொடர்பான அனைத்து விவரங்களையும் தருவதே பிரதான நோக்கம் என்றும் இந்த தளம் குறிப்பபிடுகிற‌து.அதே போல இதில் உள்ள விவரங்களை கொண்டு நம‌க்கான சுற்றுலா கையேட்டினையும் உருவாக்கி கொள்ள‌லாம்.

இணையதள முகவரி.;http://www.historvius.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s