இந்த போன் பேசுவதற்கு மட்டும் தான்

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி  கோண்டே இருக்கின்ற‌ன.
நவீன செல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும்.

புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும்.

செல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி எரியும் யூஸ் அண்டு துரோ போன் அறிமுகமானால் கூட வியப்பில்லை.அந்த அளவுக்கு செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு பொருளை வாங்கினோம் என்றால் அது பழுதடையும் வரை தூக்கியெறியாமல் பயன்படுத்தி வந்த கால‌ம் எங்கே,நேற்று வாங்கிய போனை இன்று வெறுப்போடு பார்க்கும் காலம் எங்கே?

இப்படியெல்லாம் கவலைபடுபவராக நீங்கள் இருந்தால்,உங்களை மகிழ்விக்க கூடிய சூப்பர் போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.

சூப்பர் போன் என்ற‌வுடன் சகல‌ வசதிகளுடனும் கூடிய எல்லாம் வல்ல போன் என்று நினைக்க வேண்டாம்.இந்த போன் மிக மிக எளிமையானது.

இந்த போனில் இண்டெர்நெட் கிடையாது.இமெயில் அனுப்ப முடியாது.வைஃபீ வசதி எல்லாம் இல்லை.செயலிகள் கிடையாது.பேஸ்புக் பார்க்க முடியாது.காமிரா இல்லை.இவ்வளவு ஏன் எஸ் எம் எஸ் கூட அனுப்ப முடியாது.

இந்த போனில் இருந்து கால் செய்யலாம்.வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம்.அவ்வளவே.

உலகீன் மிகவும் எளிமையான செல்போன் என்னும் அடைமொழியோடு டச்சு நிறுவனம் இந்த போனை அறிமுக செய்திருக்கிறது.செல்போன்கள் கையடக்க கம்ப்யூட்டர்கள் என்று வர்ணிக்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உருவெடுத்திருக்கும் நிலையில் இவற்றின் அடையாளமாக கருதப்படும் ஐபோனுக்கு எதிரானதாக‌ இந்த ஜோன்ஸ் போன் அறிமுகமாகியுள்ளது.

ஒரு போனில் நீங்கள் அடிப்படையில் எதனை எதிர்பார்ப்பீர்களோ அதற்கு மட்டுமே இந்த போன் பயன்படும்.அதாவ‌து மற்றவர்களோடு பேசலாம்.மற்றபடி வேறு எந்த வசதிகளும் கிடையாது.அதாவது வேறு எந்த தொல்லைகளும் இல்லை.

பேசி முடித்தொமா வேறு வேலையை கவனிக்க துவங்கினோமா என்று இருக்க உதவும் இந்த போனை எப்படி பயன்படுத்துவது என விளக்க பக்கம் பக்கமாக நீளும் கையேடு இல்லை.இதன் கையேடும் எளிமையாக ஒரே பக்கத்தில் ரத்தினச்சுருக்கமாக இருக்கிற‌து.

அலங்கார் ரிங்டோன் எல்லாம இல்லாமல் தொழிநுட்ப துறவறம் கொண்டிருக்கும் இந்த செல்போனில் ஆயிரம் செல்போன் எண்களை எல்லாம் சேமித்து வைக்க முடியாது.சொல்லப்போனால் போனில் அட்ரஸ் புக்கே இல்லை.அதற்கு பதிலாக போனோடு ஒரு குட்டி புத்தகம் இணைக்கப்ப‌ட்டுள்ளது.அதில் தான் எண்களை குறித்து கொள்ள வேண்டும்.

அதே போல் இந்த போனில் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று வாரங்களுக்கு கவலையே இல்லாமல் இருக்கலாம்.

உலகின் எந்த மூளையிலும் இதனை பயன்ப‌டுத்தலாம்.

வெளியூர் செல்லும் போதோ,ஜாலியாக‌ விளையாடும் போதோ.இந்த போன் கையில் இருந்தால் இதன் அருமை நன்றாக புரியும்.பார்த்து கொண்டிருக்கும் வேலயில் எந்த இடையூறும் இல்லாமல் அதே நேரத்தில்  தகவல் தொடர்பையும் இழக்காமல் இருக்க இந்த போன் பேரூதவியாக இருக்கும்.

சாதாரண செல்போன்களே கூடுதல் சிறப்பம்சங்களோடு வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் உருவக்கப்ப்படுள்ள இந்த எளிமையான போனை ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதி மட்டுமே கொண்ட எளிமையான செல்போன்கள் சில ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஆனால் கிட்டத்தட்ட எளிமையை ஒரு கொள்கையாக‌வே கொண்டது போல இந்த போன் வந்துள்ளது.

நவீன வாழ்வின் சிக்கல்கல் இல்லாத எளிமையான வாழ்க்கைக்கு திரும்பும் கன்வை போல,போனை பேசுவதற்கு மட்டுமே பயன்ப்டுத்தும் எளிமையான யுகத்திற்கு இந்த போன் உங்களை அழைத்து செல்லும்.

இணையதள முகவரி;http://www.johnsphones.com/

Advertisements

7 responses to “இந்த போன் பேசுவதற்கு மட்டும் தான்

  1. நல்லதொரு தகவல் வாழ்த்துக்கள்.. ஒரு சந்தேகம் என் பிளக்பெரி போன்களக்கு சாதாரண போன்களில் உள்ளது போல் இன்டெர்நெட் பாவிக்க முடியாது… முடிந்தால் உதவுங்கள்…

  2. சகோதரா நான் இலங்கையைச் சேர்ந்தவன் எனது பிளக்பெரி 8220 pearl வகை போனாகும்… இதில் இணையம் பாவிப்பதானால் சாதாரண போனில் பாவிப்பது போல் பாவிக்க முடியாதாம்.. இதற்கென ஒரு மாதாந்தக் கட்டண சேவை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டள்ளதாம்.. அதுவும் பெரும் தொகைக் கட்டண செவையாகும்… அவர்கள் சரியான விளக்கம் தரவில்லை…. இந்த போனில் manual ஆஹா gprs setting எப்படி செய்வது என்றும் தெரியவில்லை.. அதனால் மற்றைய போன்களில் செய்வது போல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர் பாவிக்க முடிவதில்லை.
    எனக்கு manual ஆஹா gprs setting எப்படிச் செய்யலாம் என்று தெரிந்தாலே போதும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s