டிவிட்டரில் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

டிவிட்டருக்கு பலவிதமான பயன்கள் உண்டு.கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றுக்கு பின்தொடர்பாளர்கள் பதில் தெரிவிக்கும் போது அவர்களோடு அழகான உரையாடலிலும் ஈடுபடலாம்.

இவ்வளவு ஏன்,ஏதாவது சநதேகம் என்றாலோ அல்லது குறிப்பிட்ட கேள்விக்கு பதில் தேவை என்றாலோ டிவிட்டரில் கேள்வி கேட்டு பதிலும் பெறலாம்.உதாரணத்திற்கு வெளியூர் பயணம் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அந்த ஊரில் எங்கு தங்கலாம்,எந்த ஓட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பது போன்ற கேள்விகளை டிவிட்டர் மூலம் கேட்கலாம்.

உள்ளூர் ஞானம் மிக்க டிவிட்டர் அன்பர்கள் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்ககூடும்.என்ன படம் பார்க்கலாம்,என்ன புத்தகம் படிக்கலாம் போன்ற கேள்விகளை கூட டிவிட்டரில்,கேட்கலாம்.

பதில் தேவைப்படும் எந்த கேள்வியை வேண்டுமானாலும் டிவிட்டரில் கேட்கலாம் என்றாலும் இந்த கேள்விக்கு உரிய பதில் கிடைப்பது ஒருவரது டிவிட்டர் ஆதரவை பொறுத்தே அமையும்.அதிக பின்தொடர்பாளர்களை பெற்றிருந்தால் பதில் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.அதே போல வெறும் தற்பெருமைகளோடு நின்று விடாமல் பின்தொடர்பாளர்களோடு உரையாடலில் ஈடுபட்டு நல்ல டிவிட்டர் நட்பை வளர்த்துக்கொண்டிருந்தால் பதில்களிலும் வேகம் இருக்கும்.

ஆனால் டிவிட்டரில் தங்களுக்கென ஒரு சமூகத்தை ஏற்படுத்திகொள்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை.அதற்காக டிவிட்டர் கேள்வி கேட்க நினைப்பவர்கள் தங்களுக்கு போதிய ஆதரவு இல்லையே என வருந்த வேண்டியதில்லை.டிவிட்டர் கேள்வி கேட்டு உரிய பதிலை பெறுவதற்காக என்றே தனியே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிவிட் ஹெல்ப் என்னும் அந்த தளத்தில் டிவிட்டர் பயனாளிகள் தாங்கள் பதில் பெற விரும்பும் கேள்விகளை சமர்பிக்கலாம்.யாருக்கு பதில் தெரியுமோ அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்.

ஏற்கனவே இணையவாசிகளுக்கு நன்கு அறிமுகமான யாஹூ ஆன்ஸரஸ் சேவையை போன்றது தான் இது.டிவிட் ஹெல்பே தன்னை டிவிட்டருக்கான யாஹூ ஆன்ஸர் என்று தான் வர்ணித்துக்கொள்கிறது.கூடவே மக்களால் இயக்கப்படும் தேடியந்திரம் என்றும் வர்ணித்துக்கொள்கிறது.

அதாவது கூகுலில் பதில் தேடுவதற்கு பதில் பரந்து விரிந்திருக்கும் டிவிட்டர் சமூகத்திடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என்னும் அர்த்தத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்விகள் கேட்பது மிகவும் சுலபம்.டிவிட்டர் முகவரி கணக்கு மூலம் உள்ளே நுழைந்து எந்த கேள்விக்கு பதில் தேவையோ அதனை கேட்க வேண்டியது தான்.இதற்கென கேட்கவும் என்னும் தனிப்பகுதி இடம் பெற்றுள்ளது.அதே போல உங்கள் டிவிட்டர் பக்கத்திலேயே கேள்வியை பதிவு செய்து விட்டு அதனுடன் டிவிட் ஹெல்ப் என குறிப்பிட்டாலும் போதுமானது.

கேல்விகளை பொதுவாகவும் கேட்கலாம்.அல்லது தேவைப்பட்டால் குறிப்பிட்ட நிபுணரிடமும் கேட்கலாம்.ஆனால் கட்டணம் உண்டு.இருப்பினும் பதிலில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.

இது வரை 4 லட்சத்திற்கு மேலான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக முகப்பு பக்கத்தில் பெருமையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையான கேள்விகளை இங்கே கேட்கலாம் என்ற சந்தேகம் எழலாம்.அதற்கு வரையரையே கிடையாது.பதில் தேடும் எந்த கேள்வியையும் கேட்கலாம்.

தளத்தில் பதில்கள் வேண்டி சம்ர்பிக்கப்பட்டுள்ள கேள்விகளை ஒரு முறை நோட்டம் விட்டால் எத்தனை வகையான கேள்விகள் என்ற வியப்பு ஏற்படுகிறது.

முழுநீள திரைப்படங்களை பார்க்க உதவும் இணையதளம் ஏதாவது தெரியுமா?சமையல் குறிப்புகளை தரும் இணையதளத்தை சொல்லுங்கள்? எனபதை போல இணையதள முகவரிகளை கேட்கும் கேள்விகள் ஒரு வகை என்றால்,துக்கம் வரவில்லை,யாராவது தூங்குவதற்கான வழி தெரிந்தால் சொல்லுங்களேன் போன்ற கேள்விகளும் சமர்பிக்கப்படுகின்றன.

ஜீ 6 என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்களேன் என்று ஒருவர் கேட்டிருக்கிறார் என்றால் இன்னொருவர் கட்டிட கலை பயிற்சி வகுப்புகள் நடக்கும் இடம் பற்றி கேட்டிருக்கிறார்.இன்னொருவரோ போரடிக்கிறது,ஸ்கைப்பில் பேச ஆள் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.

புதிதாக வந்த படத்தில் எது பார்ப்பது போல உள்ளது போன்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. எல்லாமே புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்கும் கேள்விகள் என்று சொல்ல முடியாது.சில மிகவும் எளிமையானவை.சில கருத்துக்களை எதிர்பார்ப்பவை.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இணையதளத்தில் உறுப்பினராக சேர விருப்பமா என விளம்பர நோக்கிலான கேள்விகளும் உண்டு.

பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரு சில பதில்களாவது பதிவாகியுள்ளன.

கேள்விகளுக்கு பதில் கிடைப்பதோடு அதன் மூலமே புதிய நட்பையும் தேடிக்கொள்ளலாம்.குறிப்பிட்ட கேள்விக்கு சரியான பதிலை தருவதன் மூலம் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தி தொடர்பு கொண்டு நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு நல்ல கேள்வி கேட்டு அதற்கு அசத்தலான பதில் அளிப்பவரை அடையாளம் கண்டு அவரையே நண்பராக்கி கொள்வது சாத்தியம் தானே.கேள்வி கேட்பது மட்டுமல்ல குறிப்பிட த்லைப்பில் கில்லாடி என கருதுபவர்கள் அந்த ஏரியா தொடர்ப்பான் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்களை தந்து தங்கள் நிபுணத்துவதை உணர்த்தலாம்.

இதற்கேற்றார் போல் பதில் சொல்பவர்களுக்கு பலவிதமான பட்டைகளையும் தளம் வழங்குகிறது.

கேள்விகளோடு தான் இந்த தளத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்றில்லை.எப்போது வேண்டுமானாலும் இந்த தளத்திற்கு சென்று இங்குள்ள கேள்விகளை நோட்டம்விடலாம்.புதிய கேள்விகளை பார்ப்பது மூலம் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.இணையதளம்,இசை,வேலை,வலைப்பதிவு,வீடியோ என பல்வேறு குறிச்சொற்களின் கீழ் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன .எனவே எதில் ஆர்வம் உள்ளதோ அதனை தேர்வு செய்து கேள்விகளை பார்க்கலாம்.

———

http://twithelp.me/

Advertisements

4 responses to “டிவிட்டரில் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

  1. தங்களின் வலைப்பூ மிகவும் அருமை. இதனை வலைச்சரம் திரட்டியில் இணைத்துள்ளோம். சந்தேகங்கள் கேள்விகளுக்கு எம்மை தொடர்புகொள்ளவும்.

    நிர்வாகம்,
    வலைச்சரம் திரட்டி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s