டிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம்.

டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும்.

டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம்.

நாளிதழ்களிலும் டிவிகளிலும் நிபுணர்கள் கருத்து தெரிவிப்பது போல சாமன்யர்கள் கூட டிவிட்டரில் எந்த தலைப்பு குறித்தும் தாங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.அவற்றை எத்தனை பொருட்படுத்துவார்கள் என்பது வேறு விஷயம்.ஆனால் சமீபத்தில் பார்த்த படத்தில் துவங்கி உலக அமைதி வரை எந்த விஷயம் குறித்தும் நாம் என்ன நினைக்கிறோம் என்று டிவிட்டரில் சொல்லலாம்.

டிவிட்டரில் பதிவாகும் இந்த கருத்துக்கள் உலகின் நாடித்துடிப்பை உணர்த்தக்கூடியதாக அமையலாம்.

புதிய படம் பற்றி ரசிகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை கருத்து கணிப்பு எதுவும் நடத்தாமலேயே டிவிட்டரில் அந்த படத்திற்க்காக பகிரப்பட்ட பதிவுகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.அரசியல் தலைவரின் கருத்துக்கு என்ன எதிர்வினை என்றோ,சமீபத்தில் அம்பலாமான ஊழல் பற்றி மக்களின் பார்வை என்ன என்றோ டிவிட்டரோ உணர்த்தி விடும்.

இதெல்லாம் டிவிட்டரால் விளையும் பயன்கள்.இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.

டிவிட்டரில் பரிமாறப்படும் கருத்துக்கள் தப்பான அபிராயமாகவும் இருக்கலாம்.

உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகம் விவாதிக்கப்படும் பருவ நிலை மாற்றத்தையே எடுத்து கொள்ளலாம்.பருவநிலை மாற்றத்தால் வருங்காலத்தில் பெரும் அபாயம் ஏற்பட இருப்பதாக எச்சரிக்கும் நிபுணர்கள் பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பருவநிலை பாதிப்பின் தீவிரம் சர்ச்சைக்குறியதாவே இருக்கிறது.ஒரு பக்கம் பத்தாண்டுகளில் கடல் உள்ளே வந்துவிடும் ,இமைய மலை உருகி வழியும் என்றெல்லாம் சொல்கின்றனர்.இன்னொரு பக்கமே இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இதன் காரணமாகவே பருவநிலை பாதிப்பை அலட்சியப்படுத்த முடியும் என்றில்லை.இந்த விஷயத்தில்  இருதரப்பு நிலைப்பாடு குறித்தும் சரியான புரிதல் தேவை.அதற்கு முதலில் ஆழமான வாசிப்பு தேவை.மேலோட்டமாக ஏதாவது ஒரு கட்டுரை அல்லது இன்னும் மோசமாக ஒரே ஒரு மேற்கோளை படித்துவிட்டு எல்லாம் தெரிந்துவிட்டது போல கருத்து தெரிவிப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

டிவிட்டரில் இப்படி நிகழ வாய்ப்புள்ளது.யாரோ ஒரு சிலர் பருவ நிலை மாற்றம் மிகைப்படுத்தப்படுவதாக படித்து விட்டு அவப்போது அதற்கு எதிரான கருத்தை டிவிட்டரில் பதிவு செய்யலாம்.பருவநிலை நிபுணர்கள மிகுந்த கரிசனத்தோடு புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு தனது கவலையை தெரிவிக்கும் போது இவர்கள் டிவிட்டரில் அநத கருத்தை பகடி செய்யலாம்.இன்னும் ஒரு படி மேலே போய்  நிபுணரின் கருத்தை எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமலேயே தீர்மானமாக மறுக்கலாம்.அதற்கு ஒரு அறைவேக்காட்டு ஆய்வு,அல்லது செய்தியை ஆதரவாக சுட்டிக்காட்டலாம்.

பருவநிலை மாற்றத்தின் மீது உண்மையான அக்கரை கொண்டவர்களுக்கு இந்த பதிவுகள் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் நிச்சயம் உண்டாக்கும்.அதிலும் பருவநிலை மாற்றத்தின் வேகத்தை தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று நம்புகிறவர்கள் இவற்றை பார்க்கும் போது உள்ளபடியே கொதித்து போவார்கள்.

இப்படி தான் பருவநிலை மாற்றம் மீது கொள்கை பிடிப்பு கொண்டிருந்த ஆஸ்திரேலியே வாலிபர் ஒருவர் டிவிட்டரில் வெளீயாகும் பருவநிலை பதிவுகளை பார்த்து வெறுத்து போனார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிஜல் லெக் சாப்ட்வேர் நிபுணராக பணியாற்றி வருகிறார்.லெக் பருவநிலை மாற்றதின் மீது மிகுந்த அக்கரை கொண்டவர்.பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர வேண்டும் என்றும் உணர்த்த வேண்டும் என்றும் நினைப்பவர்.

அது மட்டும் அல்ல பருவநிலை மாற்றம் ஏற்படவில்லை என்று கருதுவபர்களிடம் அது குறித்து வாதிடவும் விருப்பம் கொண்டவர்.இந்த ஆர்வம் காரணமாக டிவிட்டரில் உலாவும் போது யாராவது பருவநிலை மாற்றம் நிகழவில்லை என்பதை போல கருத்து தெரிவிப்பதை பார்த்து விட்டால்  உடனே அதற்கு டிவிட்டர் பதிவின் மூலமே பதில் அளிக்க துவங்கி விடுவார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான அறியாமையை போக்குவது தனது கடமை  என்னும் உணர்வோடு டிவிட்டர் பதிவுகளில் உள்ள கருத்து பிழைகளை சுட்டிக்காட்டி உற்சாகமாக வாதிட்டு வந்தார். ஆனால் இந்த உற்சாகம் அதிக நாள் நீடிக்கவில்லை.ஒன்று டிவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டவர்களில் பலர் உண்மையை ஏற்க மனமில்லாமல் கன்மூடித்தனமாக வாதிட்டனர்.இரண்டாவதாக அப்படியே பொருமையாக பதில் சொல்லி வாதிட்டு புரிய வைக்க முயன்றாலும் வேறு யாராவது பருவநிலை மாற்றம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருவதை பார்க்க முடிந்தது.

ஒவ்வொருவரோடு வாதிடுவதும் முடியாத காரியமாக இருந்தது மட்டும் அல்லாமல் இந்த விவாதம் முடிவே இல்லாததாகவும் அமைந்தது.

புவியின் எதிர்காலத்தையே பாதிக்ககூடிய தீவிர பிர்ச்சனை  என லெக் நம்பும் பருவநிலை மாற்றம் குறித்து டிவிட்டரில் பலரும் மனம் போன போக்கில் கருத்துக்களை வெளியிட்டு வந்தது கண்டு மனம் வெதும்பி போனார்.

இத்தகைய நிலையில் லெக் என்ன செய்திருக்க முடியும்.டிவிட்டர் விவாதமே தேவையில்லை என்று ஒதுங்கி போயிருக்கலாம்.அப்படி செய்ய வருக்கு மனமில்லை.தெரிந்தே தவறான கருத்துக்கள் உலா வர அனுமதிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.அப்படியென்றால் டிவிட்டரில் விவாத்ததை தொடர வேண்டும்.

ஆனால் இப்படி முகம் தெரியாத எதிரிகளுக்கு டிவிட்டரில் பதில் அளிப்பது என்றால் அதற்காகவே கனிசமான நேரத்தை செலவிட வேண்டும்.அதோடு தர்கரீதியாக எத்தனை சிறந்த பதில் தந்தாலும் அதை ஏற்காமல் மீண்டும் தவறான புரிதலின் அடிப்படையிலேயே டிவிட்டரில் பதிவுகள் வெளியாகும் போது என்ன செய்ய முடியும்.

எல்லா கருத்து போராளிகளுக்கும் ஏற்படும் தடுமாற்றம் தான் இது.டிவிட்டர் வெளியில் இதனை எதிர் கொண்ட லெக் தனது சாப்ட்வேர் ஆற்றலை பயன்படுத்து இதற்கு பதிலடி கொடுக்க தீர்மானித்தார்.

விவாத களத்தில் தானே இறங்கி போராடுவதால் நேரம் தான் வீண் என்று நினைத்த லெக் அதற்காக பருவநிலை விவாகார்த்தைல் தவறான கருத்துக்கள் மறுப்பில்லாமல் உலாவ அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானித்தார்.எனவே இதற்காக என்றே ஒரு பாட்டை உருவாக்கி அதனிடம் விவாத பொருப்பை ஒப்படைத்து தான் ஒதுங்கி கொள்ள முடிவு செய்தார்.

இப்படி லெக் உருவாக்கிய பாட் தான் ஏஇ_ஏகிடபில்யூ.குறிப்பிட்ட செயலை தானியங்கியாக செய்து முடிப்பதற்காக உருவாக்கப்படும் சிறிய அளவிலான ஆணைத்தொடர்களே இவ்வாறு பாட் என்று அழைக்கப்படுகின்றன.இணைய உலகில் விதவிதமான பாட்கள் உள்ளன.

கூகுல் போன்ற தேடியந்திரங்கள் புதிய இணைய பக்கங்களில் உள்ள தகவல்களை திரட்டி தொகுக்க பல பாட்களை இணைய கடலில் உலாவ விட்டுள்ளன.குக்கீஸ் என்னும் இணைய செயல்பாடு ஒற்றர்கலும் ஒரு வித பாட்களே.

லெக் டிவிட்டருக்காக உருவாக்கிய பாட் பருவநிலை மாற்றம் தொடர்பான தவறான நிலைபப்ட்டிலான பதிவுகள் தோன்றுகின்றனவா என்று கண்கானிக்கும் திறன் கொண்டதாக இருந்தது.அத்தகைய பதிவுகளை கண்டுவிட்டால் அதுவே விவாத்ததில் இறங்கிவிடும்.அதாவது அந்த பதிவுக்கு பதில் தர வேண்டும் என்று புரிந்து கொண்டு ஒரு பதிவை வெளியிடும்.

பாட் பதில் தருவதற்காக என்று லெக் பருவநிலை பிரச்சனை தொடர்பாக ஒரு தகவல் பெட்டகத்தையும் உருவக்கியிருந்தார்.விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை பாட் இங்கிருந்து உருவிக்கொள்ளும்.மற்றபடி அதற்கு வேறு எதுவும் தெரியாது.

ஆனால் டிவிட்டரில் பருவநிலை மாற்றம் பற்றி யாரெல்லாம பேசுகின்றனர் என்பதை கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டே இருக்கும்.இதற்காக என்று ஒருஇ சில பதங்களை லெக் கற்றுத்தந்திருந்தார்.அதனடிப்படையில் அப்படி ஏதாவது பதிவு தோன்றும் போது தனது தகவல் பெட்டியில் இருந்து பதிலை அளிக்கும்.

ஆக டிவிட்டரில் எங்கே பருவநிலை மாற்றத்தை மறுதலிக்கும் கருத்து தோன்றினாலும் லெக் உருவாக்கிய பாட் அதற்கான பதிலை அளித்து விவாத்தை தொடரும்.பல நேரங்களில் எதிர்ப்பாளர்கள் யாரோ ஒருவரோடு விவதிக்கிறோம் என்ற உணர்வோடு எதிர் விவாத்ததிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விவாதத்திற்கான ரோபோவை போல அந்த பாட்டும் மிகவும் விசுவாசமாக டிவிட்டரில் செயல்பட்டு வருகிறது.

டிவிட்டர் பரப்பில் ஒரு புதிய மைல்கல்லாக இந்த ரோபோவை கருதலாம்.

இதனை உருவாக்கிய லெக் அடுத்த கட்டமாக தனது பாட்டிற்கான பதில்களை மற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான தளங்களில் இருந்தும் எடுக்க தீர்மானித்திருக்கிறார்.

Advertisements

One response to “டிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ

  1. Pingback: தமிழில் வெளிவந்துள்ள தொழிநுட்ப தகவல்கள் [technology in tamil]·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s