டிவிட்டரில் பனி விழும் வரைபடம்…

டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்னும் கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் என்பதே சரியான பதில் என்றாலும் உதாரணங்கள் இல்லாமல் இதனை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமே.அத்தகைய அழகான உதாரணங்களில் ஒன்றாக பிரிட்டனை சேர்ந்த பென் மாஷ் என்பவர் பனிபொழிவு தொடர்பான விவரங்களை வரைபடத்தின் மூலம் டிவிட்டரில் இணைத்து சுவாரஸ்யமான சேவையை உருவாக்கியிருக்கிறார்.

ஐரோப்பாவில் இது குளிர்காலம் என்பதால் பல நாடுகளில் கடும் பனி பொழிவு பெய்து வருகிரது.பிரிட்டனில் வழக்கத்தை விட பனிபொழிவு அதிகமாகவே இருக்கிறதாம்.அதோடு பத்து செ மீ அளவுக்கு பனிபொழிவு பெய்யலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பனி விழும் காலங்களில் பனியால் ஏற்படும் இடர்களை பேசித்திர்க்காமல் இருக்க முடியமா?டிவிட்டர் பயனாளிகள் இந்த அனுபவத்தை டிவிட்டர் பதிவுகளாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

டிவிட்டரில் ஒவ்வொருவரும் ஒரு விதமான பதிவுகளை வெளியிட்டு வந்தாலும் அவப்போது பலரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் இயல்பாக நிகழ்வது உண்டு.பிரிட்டனிலும் இப்படி தான் பனிப்பொழிவு தொடர்பான கருத்துக்களை பலரும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்த பதிவுகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒரே இடத்தில் தந்தால் என்ன என்று பென் மாஷ் நினைத்தார்.இதற்காக அவர் மிக யூகேஸ்நோமேப் என்னும் எளிமையான இணையதளத்தை உருவாக்கினார்.

மாஷ் அப் என்று சொல்லப்படும் இணைய வரைபடத்தின் மீது விவரங்களை ஒட்ட வைக்கும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்த இந்த தளத்தில் பிரிட்டன் வரைபடத்தின் மீது பனி விழும் இடங்களை சுட்டிக்காட்ட வழி செய்திருந்தார்.

அதாவது பனி பொழிவு தொடர்பாக யாரெல்லாம் டிவிட்டரில் கருத்துக்களை வெளியிடுகின்றனரோ அந்த பதிவுகள் வரைபடத்தில் தோன்றும்.உடனுக்குடன் தோன்றும் அந்த பதிவுகள் இருப்பிடம் சார்ந்து அமைந்திருக்கும்.வரைப்படத்தில் பார்க்கும் போது பனி பொழிவு சார்ந்த டிவிட்டர் பதிவுகள் வெளியான இடங்கலை தெரிந்து கொள்ளலாம்.

இடது பக்கத்தில் டிவிட்டர் பதிவுகள் வரிசையாக தனியே தோன்றும்.

டிவிட்டர் பணியாளர்கள் தங்கள் பதிவுகளோடு யூகே ஸ்நோ என்னும் அடையாள பதத்தை சேர்த்து கொண்டால் அவை தானாக இந்த தளத்தில் இடம்பெற்று விடும்.பயனாளிகள் பனி பொழிவு அளவையும் குறிப்பிட முடியும்.

இந்த வரைபடம் பனி பொழிவு தொடர்பான தகவல்களை சுவாரஸ்யமாக்கி இருப்பதோடு எந்த இடத்தில் பனி பொழிவு எப்ப்டி இருக்கிறது என்னும் தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.வெளியூர் செல்ல இருப்பவர்கள் பயணத்திற்கு முன்பாக இந்த வரைபடத்தை பார்த்தே மூன்கூட்டியே அந்த இடத்தில் பனிபொழிவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நட்ந்து கொள்ளலாம்.

பனி பொழிவு தொடர்பான புள்ளி விவரங்களுக்கு உயிரோட்டம் அளிப்பதோடு புதிய புரிதலையும் தருகிறது.

பென் மாஷ் ஏற்கனவே இதே போன்ற இரண்டு இணைய சேவைகளை உருவாக்கியிருக்கிறார்.அதில் ரியல்டைம் டாப் 40 என்னும் சேவை இசை கலைஞர்களுக்கான தர வரிசை சேவையாகும்.இந்த சேவையில் முன்னணியில் இருக்கும் 40 பாடகர்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும்.

இந்த பட்டியல் மாறிக்கொண்டே இருக்க கூடியது.அதாவது ரசிகர்கள் இப்போது எந்த பாடகரின் இசையை கேட்டுக்கொண்டிருக்கின்றனரோ அதனடிப்படையில் இந்த பட்டியலில் பாடகர்கள் முன்னிலை பெறுவார்கள்.

ரசிகர்களின் பங்களிப்பில் தான் இந்த பட்டியல் உருவாகிறது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.இசை பிரியர்கள் தாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை குறிப்பிட்டு அந்த பாடகர் பற்றி டிவிட்டரில் பதிவிட்டால் அது பாடகருக்கான வாக்காக கணக்கில் எடுத்துகொள்ளப்படும்.

உலகின் முதல் உயிரோட்டமான பாடகர் தரவரிசை என்னும் அடைமொழியொடு இந்த சேவையை மாஷ் பெருமையோடு அறிமுகம் செய்தார்.

விற்பனை மற்றும் வர்த்த நோக்கில் முன்வைக்கப்படும் பாடகர் தர வரிசைகளுக்கு மாறாக ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாகிறது.ரசிகர்கள் பாடகர்களுக்கு வாக்களிப்பதோடு இந்த பட்டியலில் இருந்து புதிய பாடல்களை இனம் கண்டு கொண்டு அதனை டவுண்லோடும் செய்து கொள்ளலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s