யாரு,யாரு,என்னோடு பறப்பது யாரு?

இந்திய விமான உலகில் பிரபலமான ஒரு கதை உண்டு. ஒருமுறை ஜே.ஆர்.டி.டாடா மும்பையிலிருந்து விமானத்தில் பயணம் செய்த போது, தனக்கு அருகே அமர்ந்திருந்த சக பயணியிடம் பேச்சுக் கொடுத்து வந்தார். டாடா யார் என்பதை அறிந்திருந்த அந்த பயணியும் அவருடன் மிகவும் மரியாதையாக பேசி வந்தார்.

ஒருகட்டத்தில் டாடா மிகுந்த ஆர்வத்தோடு நீங்கள் யார்? என்று அந்த பயணியிடம் கேட்டார். டாடாவால் அப்படி கேட்கப்பட்ட அந்த பயணி வேறு யாருமல்ல, பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன்தான். அமிதாப்பை கூட தெரியாமல் கூட ஒருவர் இருக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவம் உண்மையில், வர்த்தகத்தை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டிருந்த ஜே.ஆர்.டி.டாடாவின் குணாதிசயத்தையும் உணர்த்துகிறது. இந்த சம்பவத்தின் ஆச்சரியமும், சுவாரசியமும் ஒருபுறம் இருக்க, இன்றைய நவீன உலகில் இத்தகைய சம்பவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இனி இல்லை என்றே சொல்ல வேண்டும். விமானத்தில் உங்கள் பக்கத்தில் அமரக்கூடிய பயணி யார் என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அல்லது உங்கள் பக்கத்தில் எந்த பயணி அமர வேண்டும் என்பதை கூட நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இது போன்ற புதிய வாய்ப்புகளை அளிக்கக் கூடிய அழகான சேவையாக பிளான்லே உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயணம் செய்யும் விமானத்தை சொல்லுங்கள்.

உங்களோடு யாரெல்லாம் பயணம் செய்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்கிறோம் என்று அழைக்கிறது இந்த இணையதளம். விமான பயணத்தை திட்டமிட உதவ எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன. இந்த தளம் மிகவும் வித்தியாசமாக விமான பயணங்களின் போது உங்களுடன் பயணம் செய்பவர்களை திட்டமிட உதவுகிறது. எந்தவொரு நகருக்கும் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பாக, அதாவது விமான நிலையத்தில் நுழைவதற்கு முன்பா இந்த தளத்தில் நுழைந்து நீங்கள் பயணம் செய்ய உள்ள விமானம் பற்றிய தகவலை தெரிவிக்கலாம். உடனே சக உறுப்பினர்களில் யாரெல்லாம் அதே விமானத்தில் பயணிக்கின்றனர் என்பதை இந்த தளம் உங்களுக்கு தெரிவிக்கும். அதே போல நீங்கள் சென்று இறங்கும் விமான நிலையத்தில் காத்திருப்பவர்களையும் இந்த தளம் சுட்டிக்காட்டும். உங்கள் தனிப்பட்ட விருப்பம் மற்றும் வர்த்தக நோக்கத்திற்கேற்ப அவர்களில் யார் உங்களுக்கு பொருத்தமானவர் என்பதை தீர்மானித்து அவரையே உங்கள் விமான வழித்துணையாக தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு செல்லும் இரண்டு பயணிகள் அருகருகே அமர்ந்து அந்த கண்காட்சி பற்றியே பேசி செல்ல முடியும். அல்லது புதிதாக ஒரு நகருக்கு செல்பவர் அந்த நகரம் பற்றி மிக நன்றாக அறிந்த ஒருவரோடு அமர்ந்து பேசி செல்லலாம். இப்படி விமான பயணத்தை இனிதாக்கக் கூடிய அநேக வழிகளை இந்த சேவை முன்வைக்கிறது. விமான பயணத்தை சமூக நோக்கிலான பயணமாக மாற்றிக் காட்டு வதாக கூறும் இந்த இணையதளம் பயனாளிகளோடு இணைந்து இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத தகவல் சுரங்கமான சக பயணிகள் பற்றிய விவரங்களை பயன்படுத்திக் கொண்டு அருமையான தொடர்புகளையும், உறவுகளையும் விமான பயணத்தின் போது உருவாக்கிக் கொள்ளலாம் என்று உற்சாகமாக தெரிவிக்கிறது. எதிர்காலத்தில் ஒருவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளின் மூலம், இணையத்தில் அவருக்கு அறிமுகமான நண்பர்கள் அதே விமானத்தில் பயணிக்கின்றனரா என்பதை தெரிவிக்கும் வசதியும் இதில் இணைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தளத்தின் நோக்கம் பற்றி எழுதப்பட்டுள்ள வலைப்பதிவில் இந்த சேவையின் தனித்தன்மைகள் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளன. இதுவரை விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கான இருக்கை வசதியை அளிப்பதில், புகைப்பிடிப்பவர், புகை பிடிக்காதவர் போன்ற வேறுபாட்டை அளிப்பதை தவிர வேறு எந்தவிதமான சேவையையும் அளிக்காமல் இருக்கின்றனர். ஆனால் யோசித்துப் பாருங்கள். குழந்தைகளோடு பயணம் செய்பவர்கள் குடும்பத்தோடு பயணம் செய்யும் நபர்களுக்கு நடுவே பயணம் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். ஒரே மொழி பேசுபவர் அல்லது ஒரே விதமான ஆர்வம் கொண்டவர்கள் அருகருகே அமர்ந்து செல்ல முடிந்தால் எப்படியிருக்கும்? இத்தகைய வாய்ப்பை எல்லாம் வழங்குவதுதான் தங்கள் நோக்கம் என்கிறது அந்த பதிவு.

விமான பயணத்திற்கு முன்பாக லக்கேஜை சரிபார்ப்பது போன்ற விவரங்களில் எல்லாம் அதிக கவனம் செலுத்துவதை விட்டு உங்கள் சக பயணிகள் மீது கவனம் செலுத்துங்கள். அங்குதான் அற்புதமான நட்பும், அருமையான அனுபவமும் காத்திருக்கிறது என்கிறது பிளான்லே.

இணையதள முகவரி:www.planely.com

Advertisements

2 responses to “யாரு,யாரு,என்னோடு பறப்பது யாரு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s