உள்ளங்கையில் விமான நிலையம்

செயலி என்று சொல்லப்படும் செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறிய சாப்ட்வேர்களுக்கு பின்னே நிச்சயம் ஒரு தேவை இருக்கும். ஒரு சில செயலிகளுக்கு பின்னே அந்த தேவையை உணரச் செய்த சுவாரஸ்யமான கதையும் இருக்கும்.

விமான பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேட்குரு செயலியை பொறுத்தவரை அதற்கான தேவையும் இருக்கிறது. அதன் பின்னே அழகான கதையும் இருக்கிறது.

விமான நிலையங்களை உள்ளங் கைக்குள் அடக்கி தந்துவிடும் இந்த செயலின் தன்மையை புரிந்து கொள்வதற்கு முன்னர் இது உருவான கதையை அறிந்துகொள்வது இதன் மகத்துவத்தை உணர உதவியாக இருக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த டான் கெல்லர்ட் என்பவர் இந்த செயலியை உருவாக்கி உள்ளார். புதிய நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் வென்சர் கேப்டலிஸ்டாக பணியாற்றிய இவர் மற்ற அமெரிக்கர்களைப் போல அடிக்கடி விமான பயணம் செய்யும் வழக்கம் கொண்டவர். ஒவ்வொரு முறை விமான பயணம் மேற்கொள்ளும் போதும் விமான நிலையங்கள் தொடர்பான தகவல்கள் சரிவர தெரிவ தில்லை என்ற ஏக்கம் அவருக்கு உண்டு.

உதாரணத்துக்கு, விமான நிலையத்தில் புத்தக கடை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் திண்டாட நேரலாம் அல்லது மதிய உணவுக்கான ரெஸ்டாரண்ட் விமான நிலையத்தில் எந்த நிலையத்தில் இருக்கிறது அலைய நேர்ந்த அனுபவமும் அவருக்கு உண்டு.

ஒருமுறை சிறிய விமான நிலையம் ஒன்று தனது விமானத்திற்காக காத்திருந்தபோது அவருக்கு நல்ல பசி. காத்திருக்கும் பகுதியை கடந்து சென்று விட்டால் நல்ல உணவு விடுதி இருக்கும் என்ற எண்ணத்தில் அவர் உள்ளே சென்று விட்டார். ஆனால் உள்ளே சென்ற பிறகு அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கு உணவு விடுதி எதுவுமே இல்லை. பாதுகாப்பு சோதனை முடிந்து விட்டதால் மீண்டும் வெளியே செல்வது சாத்தியமில்லை என்ற நிலையில் அடடா வெளிப்பகுதியில் பார்த்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டு வந்திருக்கலாமே என்று அவருக்கு தோன்றியது.

அதன் பிறகு அவர் வயிற்றைக் கிள்ளும் பசியோடு விமானத்தில் பறக்க வேண்டியிருந்தது. வாட்டும் பசிக்கு நடுவே அவருக்கு விமான நிலையங்களில் என்னென்ன வசதிகள் எங்கெங்கு இருக்கின்றன என்ற விவரங்கள் முன்கூட்டியே தெரிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. ஒவ்வொரு விமான நிலையத்தி லும் உணவு விடுதிகள், புத்தக மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட வசதிகள் எங்கே இருக்கின்றன, எங்கெல்லாம் இல்லை போன்ற தகவல்களை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிய முடிந்தால் அது பயணிகளுக்கு எத்தனை பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்ற எண்ணமாக அது விரிந்தது.

விமான நிலையத்தில் உள்ள வசதிகள் பற்றிய தகவல்களை சுலபமாக சேகரிக்க முடியும் என்றாலும் இதுவரை விமான பயணம் தொடர்பான சேவைகளை வழங்கும் எந்த இணைய தளமும் அதனை வழங்காமல் இருப்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இத்தகைய சேவை ஒன்றை தானே உருவாக்கினால் என்ன என்ற சிந்தனையின் அடிப்படையில் அப்போதே கையிலிருந்த வெற்றுக் காகிதத்தில் இந்த சேவைக்கான குறிப்புகளை எழுத தொடங்கினார். இப்படி உருவானதுதான் கேட்குரு செயலி.

செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறு சாப்ட்வேரான இது விமான நிலையங்களில் உள்ள வசதிகளை சுட்டிக்காட்டக்கூடியதாக அமைந்துள்ளது. ஒருவர் பயணம் செய்ய உள்ள விமான நிலையத்தை கிளிக் செய்தால் அங்குள்ள வசதிகள் பற்றிய விவரங்கள் இதில் தோன்றும். அதனை பார்த்து அந்த விமான நிலையத்தில் கிடைக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக தெரிந்துகொள்ள லாம்.

இதன் மூலம் விமான நிலையத்தில் வசதிகளை தேடி கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப்போல பயணிகள் அங்குமிங்கும் அலைய வேண்டிய அவசியமில்லாமல் போகும்.

புதிதாக செல்லக்கூடிய விமான நிலையத்தில் கூட ஏற்கனவே பலமுறை அந்த விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த அனுபவம் உள்ளவர் போல சரியாக பயணிகள் தங்களுக்கான இடங்களை தேடிச் செல்வதை யும் இந்த செயலி சாத்தியமாக்கு கிறது. விமான பயணத்தின் குழப்பத்தை குறைத்து வழிகாட்டக்கூடிய இந்த செயலியை ஒரு பயண புரட்சி என்று கெல்லர்ட் வர்ணிக்கிறார்.

மிகச் சிறந்த செயலிக்கான விருதை பெற்றுள்ள இந்த செயலி அமெரிக் காவில் உள்ள சின்னதும், பெரியதுமான 85 விமான நிலையங்கள் பற்றிய தகவல்களை செல்போனில் வழங்குகிறது. பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் இந்த செயலிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பையடுத்து பக்கத்து நாடான கனடாவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சர்வதேச விமான நிலையங்களும் சேர்க்கப்பட உள்ளன. இந்த செயலியின் விவரங்களை இடம்பெறச் செய்யும் பங்களிப்பை விமானப் பயணிகளும் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி மென்மேலும் பயனுள்ளதாக மாற வாய்ப்புள்ளது.

தேவை சார்ந்த செயலிகள் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான அழகான உதாரணம் இந்த கேட்குரு. இணைய தள முகவரி : http://gateguruapp.com/

Advertisements

2 responses to “உள்ளங்கையில் விமான நிலையம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s