டிவிட்டரில் பிரபலமான‌ பென்குயின் பறவை

ஒரே ஒரு டிவீட் (டிவிட்டர் செய்தி) பல அற்புதங்களை செய்யக் கூடியது.பல நேரங்களில் டிவிட்டர் பதிவானது கிணற்றில் போட்ட கல் போல எந்தவித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் சரியான நேரத்தில் வெளியாகும் ஒற்றை டிவிட்டர் பதிவானது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி இணைய உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடும். எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் உள்ள பென்குயின் பறவைகளை இப்படித்தான் ஒரு டிவிட்டர் செய்தி புகழ்பெற வைத்திருக்கிறது.
.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்கா உலகப் புகழ் பெற்றது. இந்த பூங்காவிற்கு ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் தினந் தோறும் வருவது வழக்கம். சமீபத்தில் இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு பெய்த போது பல இடங்களில் 10 செமீ அதிகமான பனி பதிவாகி பெரும் பாதிப்பை ஏற் படுத்தியது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எடின்பர்க் விலங்கியல் பூங்கா பனிப்பொழிவால் சூழப்பட்டதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர தடை விதிக்கப்பட்டதே தவிர ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றிக்கொண்டு தான் இருந் தனர்.

பூங்காவாசிகளான விலங்குகளை கவனிக்காமல் இருக்க முடியுமா? இப்படி பூங்காவில் உள்ள பென்குயின் பறவைகளுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிலாரி ரிச்சர்ட்சன் என்பவர் பென்குயின் கூண்டில் வைக்கப்பட் டிருந்த வெப் கேமிரா செயலிழந்து போயிருப்பதை கண்டார்.

உடனே அவர் அந்த கேமிராவை முடுக்கிவிட்டார். உயிர் பெற்ற கேமிராவில் பென்குயின் பறவைகள் கொட்டும் பனியில் களியாட்டம் போடும் காட்சி பதிவாகிக்கொண் டிருந்தது.  அந்த காட்சியைப் பார்த்த கிலாரிக்கும் உற்சாகம் தாங்கவில்லை.  பனிப்பொழிவால் பலவித பாதிப்பு ஏற்பட்டாலும் பனிப் பிரதேச ஜீவ ராசிகளான பென்குயின் பறவைக்கு பனியைக் கண்டால் கொண்டாட்டம் தான்.

எனவேதான் அவை பனிப் பொழிவின் குளுமையை அனுபவித்துக்கொண்டிருந்தன. இந்த காட்சியைப் பார்த்த கிலாரிக்கு மற்ற பார்வையாளர்களும் இதனை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சாதாரண நாட்களில் பூங்காவுக்கு வந்தால் பென்குயின் பறவைகளை பார்க்க முடியுமே தவிர அவை இத்தனை உற்சாகத்தில் இருப்பதை காண முடியாது.  தற்போது பனிப் பொழிவு அந்த அரிய வாய்ப்பை தந்திருப்பதால் வெப்கேம் மூலம் இந்த காட்சியை அனைவரும் கண்டு களிக்கட்டும் என அவர் நினைத்தார்.

பல விலங்கியல் பூங்காக்களை போல எடின்பர்க்  பூங்கா சார்பிலும் டிவிட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. கிலாரி பென்குயின்களின் உற்சாகம் பற்றி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு வெப்கேமுக்கான இணைப்பையும் கொடுத்தார். அவ்வளவுதான் அந்த பதிவை பார்த்தவர்கள் பென்குயினின் துள்ளலை ரசித்து மகிழ்ந்ததோடு நிற்காமல் இந்த பதிவை மற்றவர்க ளுக்கும் ரீடிவீட் செய்தனர்.

பல இணைய நிகழ்வுகளின்போது நேர்வதுபோலவே இந்த மறு பதிவுகளை பார்த்தவர்கள் தாங்களும் பதிலுக்கு மறுபதிவு செய்தனர். விளைவு அடுத்த சில நிமிடங்களிலேயே பென்குயின் காட்சி தொடர்பான டிவிட்டர் செய்தி மிகவும் பிரபலமாகி விட்டது.

விரைவிலேயே டிவிட்டரில் மேலோங்கும் தலைப்பாக அது இடம் பெற்றது.  இதன் காரணமாக மேலும் பலர் டிவிட்டர் மூலம் பென்குயின் வெப் கேம் காட்சியை காணத் துவங்கினர். குறிப்பாக குழந்தைகளோடு பெரியவர்கள் இந்த காட்சியை கண்டு ரசித்தனர். ரசித்தவர்கள் இதனை வர்ணித்து கருத்துக்களையும் வெளி யிட்டனர்.

பனிப்பொழிவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க நேர்கிறதே என்று நினைத்திருக்கும் நேரத்தில் பென் குயின்களின் உற்சாகத்தை பார்க்கும் போது உள்ளம் துள்ளிக் குதிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். பென்குயின் பறவைகளை பார்ப்பதே மகிழ்ச்சியை தருவதாக மேலும் சிலர் தெரிவித்திருந்தனர்.

பூங்காவில் உள்ள வெப் கேம் மூலம் பென்குயின் பறவைகளை இதற்கு முன்னரும் பலர் பார்த்து ரசித்து வந்திருந்தாலும் இந்த எதிர்பாரா ஆதரவு பூங்கா நிர்வாகிகளை திக்கு முக்காட வைத்தது. அதிலும் உலகம் முழுவதிலும் உள்ள இணையவாசிகள் ஆதரவு கிடைத்தது ஆனந்தத்தை அளித்தது.எல்லாம் ஒரு டிவிட்டர் பதிவு செய்த மாயம்.

————

http://twitter.com/edinburghzoo

Advertisements

2 responses to “டிவிட்டரில் பிரபலமான‌ பென்குயின் பறவை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s