குழந்தை பேறுக்கு உதவிய ஐபோன் செயலி

செல்போன் செயலிகளில் பல அற்புதமானவை.சில அற்பமானவை.இன்னும் சில அலுப்பூட்டக்குடியவை.இவற்றுக்கு நடுவே அடிப்படையில் எளிமையான செயலிகளும் இருக்கின்றன.இந்த எளிமையான செயலிகள் பயன்படுத்தும் விதத்தில் அற்புதத்தை சாத்தியமாக்கலாம்.

இப்படி தான் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கருவுற்று குழந்தை பெற ஐபோன் செயலி கைகொடுத்துள்ளது.

லேனா பிரைஸ் மற்றும் அவரது கணவரான டட்லே ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்காவில் வசித்து வருபவர்கள் .குழந்தை பெறாமல் இருக்கும் தம்பதிக்கு ஏற்படக்கூடிய தவிப்பை இவர்கள் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர்.வாரிசு உண்டாகாதா என்னும் ஏக்கத்தில் இந்த தம்பதி பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடினர்.மருத்துவ சோத‌னையில் இருவரிடமுமே எந்த குறையும் இல்லை என்பது தெரிந்தது.ஆனாலும் லேனா கருவுறாததற்கான காரணம் என்ன என்பது மருத்துவர்களுக்கே புரியாத புதிராக இருந்தது.

காலம் கணியட்டும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.லேனா காத்திருக்க தயாராக இருந்தாலும் அவருக்கு உள்ளுக்குள் கவலை இல்லாமல் இல்லை.எனவே அவரும் அவரது கணவரும் செயற்கை கருவுறுதல் மற்றும் குழந்தையை தத்தெடுத்தல் உட்பட பல்வேறு வழிகளை பரிசீலித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் லேனாவின் 30 தாவது பிறந்த நாளுக்கு கணவர் டட்லே புத்தம் புதிய ஐபோனை வாங்கி பரிசளித்தார்.

ஐப்போனை வாங்குபவர்கள் முதலில் அல்லது ஒரு கட்டத்தில் அதில் டவுண்லோடு செய்து பயன்படுத்தக்கூடிய செய‌லிகள் மீது கவனம் செலுத்துவது இயல்பாக நிக‌ழக்கூடியது.அதிலும் ஐபோனின் பிரபலமான விளம்பர வாசக‌ம் போல எல்லாவற்றுக்கும் ஏதாவது செயலிகள் இருப்பதால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை பதிவிற‌க்கி பயன்படுத்தலாம்.

இந்த வகையில் கருவுறும் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு உதவக்கூடிய செயலிகளும் இருக்கின்றன. லேனா எதிர்பார்க்ககூடியது போலவே ஐபோனில் க‌ருவுறுதல் தொடர்பான தேடலில் ஈடுபட்டிருந்த போது கருவுற உதவக்கூடிய செயலி ஒன்றை பார்த்தார்.

அடிப்படையில் இந்த செயலி பெண்களின் மாதவிலக்கு நாட்காட்டியை புரிந்து கொள்ள உதவக்கூடியது.லேனா மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்பார்ப்புடனும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்த துவங்கினார்.அதிசயிக்க தக்க வகையில் அடுத்த இரண்டே மாதங்களில் லேனா கருவுற்றார்.மாதவிலக்கு நாட்காட்டி மற்றும் கருமுட்டை உருவாகும் சுழற்சியை சரியாக கணக்கிட்டு செயல்பட்டதாலேயே அவர் கருவுற்றார்.

இதனால் லேனாவும் அவர் கனவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.சில மாதங்கள் கழித்து லேனா அழகான பெண் குந்தைக்கு தாயானார்.இந்த செய்தியை அவரகல் மகிழ்ச்சியோடு பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்டனர்.பத்திரிகைகளும் முதல் ஐபோன் குழந்தை என்னும் அடைமொழியோடு செயலியின் உதவியால் குழந்தை பிறந்தது பற்றி பரபரப்பாக எழுதின.

இது முழுக்க முழுக்க த‌ற்செயலானதாக இருக்கலாம்.லேனா மருத்துவர்கள் சொன்னபடி காத்திருந்தால் சில மாதங்களில் கருவுற்றிருக்கலாம்.அல்லது பல மாதங்க‌ள் ஆகியிருக்கலாம்.ஆனால் ஐபொன் செயலி அவருக்கு ஒரு நம்பிக்கையையும் கருவுறுதல் குறித்த புரிதலையும் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

செயலிகளின் தன்மையும் தனித்தன்மையும் இது தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s