டிவிட்டர் மூலம் போராடிய பெண்மணி

சில நேரங்களில் டிவிட்டர் புயல் வீசக்கூடும். குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பதிவு மறுபதிவுகளாக பெருகி டிவிட்டர் வெளியில் மேலேழும் தலைப்பாக முன்னிலை பெறும் போது இந்த புயல் வீசக்கூடும்.’

இப்படி வீசிய டிவிட்டர் புயலுக்கு வர்த்தக நிறுவனம் ஒன்று அடிபணிய நேர்ந்த கதை இது!

இளம் ஓவியர் ஒருவர் தனக்கு வர்த்தக நிறுவனம் இழைத்த நீதியை எதிர்த்து டிவிட்டர் மூலம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற கதையும் கூட.வர்த்தக உலகில் சகஜமாக நடக்கும் செயலிலிருந்து இந்த கதை ஆரம்பமாகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த பேப்பர் சேஸ் எனும் நிறுவனம் காகித பொருட்கள் மற்றும் கைப்பைகள் போன்ற பொருட்களை நாடு தழுவிய அளவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் குறிப்பிட்ட காகித கை பை ஒன்றை அழகான ஓவியத்தை அச்சிட்டு விற்பனை செய்து வந்தது.
அந்த ஓவியம் ஹிடன் இலாய்ஸ் எனும் இளம்பெண்ணுக்கு சொந்தமானது.

ஆனால் இளம் பெண்ணுக்கே இந்த விஷயம் தெரியாமல் இருந்தது. அழகிய ஓவியங்கள் மற்றும் சித்திரங்களை வரைந்து இணைய தளத்தின் மூலம் இலாய்ஸ் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் ஓவியம் வாங்கிய தோழி ஒருவர், பேப்பர் சேஸ் நிறுவனத்தின் கைப் பையில் அவரது இணைய தளத்தில் பார்த்த ஓவியம் ஒன்று பொறிக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்தே அந்நிறுவனம் தனது அனுமதி பெறாமல் ஓவியத்தை அச்சிட்டு விற்பனை செய்வது அவருக்கு தெரியவந்திருக்கிறது.

இதனால் குழப்பமும் கோபமும் அடைந்த அவர் நிறுவனத்திற்கு அந்த விஷயத்தை தெரியப்படுத்தி தனது அனுமதியில்லாமல் ஓவியத்தை பயன்படுத்துவதை நிறுத் திக்கொள்ளவேண்டும் என்றும், ஓவியம் அச்சிடப்பட்ட கைப் பைகளை திரும்ப பெறவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

வருமான இழப்பு ஒருபுறம் இருக்க, காப்புரிமை மீறல் அவரை ஆவேசப்பட செய்தது. யாரோ இளம்பெண் ஓவியம் தன்னுடையது என்று உரிமை கோரினால் அதற்கு வர்த்தக நிறுவனம் செவி சாய்க்க வேண்டுமா என்ன? அந்த கோரிக்கையில் 100 சதவீதம் உண்மையே இருந்தாலும் அதனை அலட்சியம் செய்து விட்டு விற்பனையை தொடரலாமே?
இப்படி நினைத்த பேப்பர் சேஸ் நிறுவனம் அவரது மறுப்புக்கு பதில் அளிக்கவுமில்லை. விற்பனையை நிறுத்தவுமில்லை. இந்த அலட்சியத்தால் நொந்துப்போன இளம் ஓவியர், சட்டரீதியான வழிமுறைகளை நாடிப் பார்த்திருக்கிறார். ஆனால் வழக்கு தொடர 40 ஆயிரம் டாலர்கள் வரை ஆகும் என்று தெரிந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டார்.

எனினும், நிறுவனத்தின் அநீதியான செயல்பாடை அவர் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. ஏதாவது விதத்தில் தட்டிக்கேட்க வேண்டுமென்று நினைத்த அவர், தன்னுடைய இணைய தளத்தில் இந்த விஷயத்தை விளக்கிக்கூறி வர்த்தக நிறுவனம் ஒன்று ஒரு இளம் ஓவியரின் படைப்பாற்றலை உறிஞ்சி சம்பாதிப்பது நியாயமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த நியாயத்தை உணருபவர்கள் அந்நிறுவனத்திற்கு இமெயில் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.
பலர் இதனை படித்துப் பார்த்து விட்டு இமெயிலும் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த மெயில்களையும் நிறுவனம் அலட்சியம் செய்துவிட்டது.
இதனிடையே சிலர் இதுபற்றி டிவிட்டரிலும் பதிவிட்டு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் நீல் கெய்மன் எனும் எழுத்தாளர் இதுபற்றி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதுமே நிலைமை மாறிவிட்டது. கெய்மன் பிரபல எழுத்தாளர் மட்டுமல்ல டிவிட்டருக்கு அவருக்கு 15 லட்சம் பின் தொடர்பர்கள் டிவிட்டரில் இருந்தனர்.\

அவர்களில் பலர் கெய்மனின் டிவிட்டர்பதிவை தங்களது டிவிட்டர் இணைப்பில் மறுபதிவு செய்தனர். அவ்வளவுதான்! சில நிமிடங்களிலேயே டிவிட்டர் புயல் வீசத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான மறு பதிவுகளாக பெருகி டிவிட்டர் வாசகர்கள் மத்தியில் இந்த தலைப்பே கவனிக்கத் தக்கதாக மாறியது. ஒரு இளம் ஓவியரை வர்த்தக நிறுவனம் ஒன்று ஏமாற்றி அலட்சியம் செய்வது சரியா என்று டிவிட்டர் பரப்பில் எல்லோரும் விவாதிக்க தொடங்கினர்.

பலர் நிறுவனத்திற்கு எதிராக கருத்துக்களையும் பதிவுசெய்தனர்.
பேப்பர் சேஸ் அலட்சியம் காட்டி வந்த விவகாரம்இனியும் மூடி மறைக்க முடியாத அளவுக்கு பெரிதானது. இதனையடுத்து அந்நிறுவனம் சர்ச்சைக்குரிய அந்த கைப்பையை விற்பனையிலிருந்து விலக்கிக் கொண்டதோடு இந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக விளக்கத்தை தனது இணைய தளத்தில் வெளியிட்ட அந்நிறுவனம் டிவிட்டரிலும் அடியெடுத்து வைத்து விளக்கம்அளித்தது. (ஒரு சில பதிவுகளை தவிர இந்த கணக்கு செயல்படாமல் இருப்பது வேறு விஷயம் )
உள்ளத்து உணர்வுகளையோ அல்லது பொங்கும் எண்ணங்களையோ டிவிட்டருக்கு கொண்டு சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கான அழகான உதாரணம் இது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s