புத்திசாலிகளுக்கான தேடியந்திரம் யேபோல்

கூகுலை முட்டாள்களின் தேடியந்திரம் என்றோ, சோம்பேறிகளின் தேடியந்திரம் என்றோ சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படி சொல்வதால் கூகுலை குறைத்து மதிப்பிடுவதாகவோ, கூகுலை பயன்படுத்துபவர்களை கேலி செய்வதாகவோ பொருள் இல்லை. கூகுலை விட மேம்பட்ட தேடியந்திரங்களின் மகிமையை எடுத்துச் சொல்ல, இந்த வர்ணனை தேவைப்படுகிறது. அதாவது, கூகுலில் தேடும் போது இணைய வலரிகள் தேடுவதை தவிர வேறு எதையும் செய்ய வேண்டியிருப்பதில்லை.
குறிச்சொல்லை அடித்தவுடன் கூகுல் நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை பட்டியலிட்டு தந்து விடுகிறது.

அநேகமாக முதல் முடிவு (அ) முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஒன்று இணைய வலரிகள் தேடியதாக இருக்கும். மற்றபடி கூகுலில் தேட கஷ்டப்பட வேண்டியதில்லை. முடிவுகளை அலசி ஆராய வேண்டாம். மறுபரிசீலனை செய்யும் தேவையும் இல்லை. கூகுலில் எல்லாமே எளிமையானது. அதிலும் கேட்டது கிடைத்து விடுவதால், இணைய வலரிகள் தேடுவதற்கு என்று எதையுமே தனியே செய்ய வேண்டியதில்லை. உண்மையில், இந்த எளிமைதான் கூகுலின் பலம்! ஆனால், கூகுலில் இருந்து அடிப்படையிலேயே மாறுபட்ட நவீன தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்த கொஞ்சம் மெனக்கெட வேண்டும். புத்தி சாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த தேடியந்திரங்களின் பலனை உணர முடியும். சுருக்கமாக சொல்வதானால் தேடல் ஞானம் இருந்தால்தான் இவற்றை பயன்படுத்த முடியும்.

வாழைப்பழத்தை உரித்து தருவது போல், கூகுல் தேடல் முடிவுகளை பட்டியலிட்டு தரும் எளிமைக்கு பழகியவர்களுக்கு இந்த நவீன தேடியந்திரங்கள் சிக்கலானவையாக தோன்றலாம். ஆனால், கூகுல் பாணி தேடல் போதுமானதல்ல என்று நினைக்கும் போது, இவை சிறந்தவையாக தோன்றலாம். “யேபோல்’ இந்த வகையான தேடியந்திரம்தான்! அர்த்தமுள்ள தேடலை வழங்குவதே நோக்கம் என்று சொல்லும் “யேபோல்’ தேடியந்திரங்களின் வழக்கமான தேடல் உத்தியோடு, மனித முயற்சியையும் கலந்து தருகிறது.

அதாவது, இணையக் கடலில் உள்ள குறிச்சொற்களுக்கு ஏற்ற தகவல்களை எல்லாம் திரட்டி தொகுத்து பட்டியலிடுவதோடு, அவற்றில் மிகச்சிறந்தவற்றை, மனித பகுத்துணர்வு மூலம் அடையாளம் காட்டுகிறது. யேபோலில் தேடும் போது இந்த வேறுபாட்டை உணரலாம். குறிச்சொல்லை அடித்தவுடன் யேபோல், கூகுல் போல தேடல் முடிவுகளை பட்டியலிட்டு காட்டுவதோடு நிற்பதில்லை. தேடல் முடிவுகளை, பல்வேறு வகைகளாக ஒரே பக்கத்தில் அங்கும் இங்குமாக கட்டங்களாக தோன்றச் செய்கிறது. உதாரணத்திற்கு ஒபாமா என்று தேடினால், இடது பக்கத்தில் ஒபாமாவுடன் தொடர்புடைய இணைய பக்கங்கள் இடம்பெற்றிருக்கும். மையப் பகுதியின் மேலே ஒபாமா பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களுக்கான நேரடி இணைப்புகள் தோன்றும். வலது பக்கம் பார்த்தால், ஒபாமாவுடன் பொருத்தமான துணை தலைப்புகள் தரப்பட்டிருக்கும். அவற்றிலும் நம்பகமான தளங்களின் நேரடி இணைப்பு இருக்கும். அதே வலது பக்கத்தில் தேடலை விரிவுபடுத்தக் கூடிய பதங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழே கட்டத்தில் தொடர்புடைய டிவிட்டர் பதிவுகளை காண முடியும். மையப்பகுதியில் செய்திகளும் அதன் கீழே வழக்கமான தேடல் பட்டியலும் இருக்கும். விளிம்பு பக்கங்கள், அதற்கான குறிப்போடு சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். இதுதான் யேபோலின் தேடல் பாணி.

ஒரு சில தேடல் சொற்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ இணைப்புகளுடன் கூடுதல் பெட்டிகளும் தோன்றக்கூடும். மேலும் சில தேடலுக்கு மாற்று பதங்களும் கொடுக்கப்படும். (கூகுல் உட்பட பல தேடியந்திரங்கள் தரும் வசதி) முடிவுகளை வரிசையாக அடுக்காமல், அவற்றின் தன்மைக்கேற்ப கொத்துகொத்தாக தொகுத்து தருவது என்பது, இணைய வலரிகளில் கொஞ்சம் பழைய உத்திதான்.

கிளஸ்டி போன்ற தேடியந்திரங்கள் இப்படி முடிவுகளை கொத்துகொத்தாக தொகுத்தளிக்கின்றன. ஆனால், யேபோலை பொருத்தவரை இந்த உத்தி காட்சி ரீதியாக நின்றுவிடுவதில்லை. இப்படி முடிவுகளை பிரித்து வகைப்படுத்துவதற்கு பின்னே அர்த்தமும் இருக்கிறது. இதன் மூலம், சரியான மற்றும் நம்பகமான முடிவுகளை அடையாளம் காட்டுவதோடு, தேடலை பட்டை தீட்டி மேம்படுத்திக் கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. அதற்கு காரணம், கூகுலைப் போல் முடிவுகள் எந்திரத்தனமானவை மட்டும் அல்ல. மனிதர்களால் அலசி ஆராயப்பட்டு வகைப்படுத்தப்படுவதாகவும் அவை மேம்பட்டவையாக இருக்கின்றன. வழக்கமான தேடலோடு, மனித முயற்சியும் சங்கமிப்பதால்தான், இந்த அற்புதம் சாத்தியமாவதாக யேபோல் கூறுகிறது.

அடிப்படையில் யேபோலும், மற்ற தேடியந்திரங்கள் போலவே, இணையம் முழுவதும், தேடல் சிலந்திகளை அனுப்பி வைத்து தொடர்புடைய இணைய பக்கங்களை திரட்டுகிறது. ஆனால், இந்த முடிவுகளை அப்படியே வரிசைப்படுத்தி தருவதோடு நின்று விடாமல், அவற்றை சீர்தூக்கிப் பார்த்து, பொருத்தத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி காட்டுகிறது. இந்த வகைப்படுத்தலுக்கு பின்னே இருப்பது, இதற்காக என்றே மனிதர்களால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள். எனவே, எந்த ஒரு தேடலில் ஈடுபடும் போதும், அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேடல் பக்கத்தை யேபோல் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதாவது, யாரோ ஒருவர் ஏற்கனவே நமக்காக தேடிப்பார்த்து, முடிவுகளை வகைப்படுத்தி தந்திருப்பது போல, யேபோல், தேடல் பக்கத்தை தயார் செய்து தருகிறது. இவ்வாறு, ஏறக்குறைய ஒரு கோடி பதங்களுக்கான தேடல் பக்கத்தை யேபோல் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவற்றின் மூலம் நீங்கள் 100 கோடி இணைய பக்கங்களை சென்றடைய முடியும். யேபோல், நம் முன்வைக்கும் தேடல் பக்கமானது,அந்த பதத்திற்கான முகப்பு பக்கம் என்றுகூட சொல்லலாம்.

இணையவலரிகள் தேடலில் ஈடுபடும்போது, அந்த தேடலானது யேபோல் வசமுள்ள ஒரு கோடி பக்கங்களின் ஒன்று என்னும்போது, அதற்கான தேடல் பக்கம் தோன்றும். அதில் எல்லாமே ஏற்கனவே தேடப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கும். இணையவலரிகள் தனது தேவைக்கேற்ப அதில் கிளிக் செய்து கொள்ளலாம். தேடலை மேலும் கூர்மையாக்கி கொள்ளலாம். இந்த இடத்தில்தான் கவனமாக இருக்க வேண்டும்.

கூகுல் பாணி தேடலுக்கு பழகியவர்கள், இவற்றைப் பார்த்து குழம்பி நிற்கலாம். எதிர்பார்த்தது கிடைக்காமல், வேறு என்னவெல்லாமோ தோன்றுகின்றனவே என்று திணறலாம். ஆனால், கொஞ்சம் உற்று நோக்கினால் முடிவுகள் தோன்றும் விதத்திற்கு ஏற்ப அவற்றை புரிந்து கொள்ள முடியும். மையமாக மேலே தோன்றும் இணைப்பு, தேடலுக்கான அதிகாரப்பூர்வ (அ) நம்பகமான தளம் என்பது புரியும். உதாரணத்திற்கு, பிஜேபி/காங். என்று தேடினால் அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் வரும். அதற்கு மாறாக, பேஜ் ரேங்கில் முன்னிலை பெறும் வேறு ஏதோ தளம் வராது. மருத்துவ ரீதியிலான தகவல்களை தேடும்போது, இதன் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்து கொண்டு விடலாம். ஆஸ்துமா பற்றி தேடினீர்கள் என்றால், கூகுலில் முன்னிலை பெறும் முடிவில் உள்ள தளம் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பது தெரியாது. ஆனால் யேபோல், ஆஸ்துமா பற்றி, மேயோ கிளினிக் போன்ற நம்பகமான மருத்துவ தளங்களையே அடையாளம் காட்டும். ஆனால், தளங்களை பகுத்துணரும் தன்மை உங்களுக்கு இருந்தால் மட்டுமே, அட, யேபோல், நல்ல இணைய தளத்தைதான் காட்டியிருக்கிறது என்பதை நீங்கள் உணர முடியும். மேலும், எந்த வகை உங்களுக்கு தேவையோ, அதில் கிளிக் செய்து பொருத்தமான முடிவை அடையலாம். அதே போல், யேபோல் கட்டங்களுக்குள் உள்ள முடிவுகளை பின் தொடர்ந்து சென்றால், தேடலை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதோ செம்மையாக்கி கொள்வதோ சாத்தியமாகும். உதாரணம் தேவை என்றால், சச்சின் பற்றி தேடும்போது, அவரது சமகால ஜாம்பவான்களான லாரா மற்றும் பாண்டிங்கை சுட்டிக் காட்டி ஒப்பிட்டு பார்க்க வழி செய்யும். இதற்கு காரணம், நமக்கு தேவைப்படக் கூடிய நோக்கில் முடிவுகள் வகைப்படுத்தப்பட்டிருப்பதே! தேடல் முடிவுகளை கூகுலைப் போல ஒரே பரிமாணத்தில் தராமல், பல பரிமாணத்தில் தருவதாக யேபோல் கூறுகிறது. இப்போது சொல்லுங்கள், யேபோலில் தேட, கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவைதானே! ஆனால், எத்தனை பேருக்கு இத்தகைய பொருள் பொதிந்த தேடல் தேவை என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் இத்தகைய சிக்கலை விரும்புவதில்லை என்று உணர்ந்தே கூகுலும் தனது தேடலை எளிமையாகவே வைத்திருக்கிறது.

இருப்பினும் வழக்கமான தேடலில் போதாமையை உணர்பவர்கள் யேபோலை நாடலாம். உலகின் தகவல்களை மனித நோக்கில் திரட்டித் தருவதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த தேடியந்திரம், ஹாங்பெங் யின் என்பவரால் உருவாக்கப்பட்டது. செயற்கை அறிவு, தகவல்களை பகுத்துணர்வது தொடர்பான ஆய்வில் 20 ஆண்டு அனுபவம் மிக்க இவர்.

——————

http://www.yebol.com

Advertisements

4 responses to “புத்திசாலிகளுக்கான தேடியந்திரம் யேபோல்

  1. Pingback: புத்திசாலிகளுக்கான தேடியந்திரம் யேபோல் « takerscopy·

  2. மிகவும் சிம்பிள் . நான் ஒரு பொருளை எடுக்க பத்து படிகள் ஏறி மேலே செல்லவேண்டும். ஆனால் கூகிள் அதனை நான் இரண்டாம் படி ஏறினதுமே கொண்டுவந்து கொட்டுகிறது. அவ்வளவுதான். அதெல்லாம் வேண்டாம் நான் பத்து படி ஏறிப்போய் தான் அதனை எடுப்பேன் என்பது அவரர்களின் மேதாவித்தனம் மற்றும் விருப்பம். சரிதானே. :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s