அம்மாக்களுக்காக, டிவிட்டர் ஒரு அறிமுகம்

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக்கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்டு விடுபவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் பலருக்கு டிவிட்டர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம்.

டிவிட்டர் என்பது 140 எழுத்துக்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும் பதிவு சேவை என்பதை புரிந்து கொண்டாலும் டிவிட்டரில் உள்ள பிந்தொடர்பாளர் வசதி,ரீடிவீட் அம்சம் போன்றவை எளிதில் புரியாமால் போக்கு காட்டலாம்.கூடவே அதென்ன ஹாஷ்டேக் என குழப்பம் ஏற்படலாம்.

புதியவ‌ர்களுக்கும் டிவிட்டரின் தன்மை புரியாமல் குழம்பியவர்களுக்கும் டிவிட்டரை அறிமுகம் செய்யும் எளிமையான கையேடுகள் இருக்கின்றன.டிவிட்டரை அறிமுகம் செய்யும் வகையில் பல கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜெஸிகா ஹிஷே என்பவர் டிவிட்டருக்கான அறிமுக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.டிவிட்டரை புரிய வைக்கும் கட்டுரைகளிலேயே சிறந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரஸ்யமானது என்று இதனை சொல்லலாம்.

ஒரு பக்க கதையை போல ஒரு பக்க கட்டுரையாக இதனை அவர் எழுதியுள்ளார்.கொஞ்சம் நீளமான ஒரு பக்கம்.கட்டுரை என்ற தோற்றத்தை தராமல் ஒரு இணையதளம் போலவே இதனை அவர் எழுதியுள்ளார்.

டிவிட்டர்பார்மாம்ஸ் என்பது தான் அந்த தளத்தின் பெயர்.அதாவது அம்மாக்களுக்கான டிவிட்டர் விளக்கம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.அதற்காக அம்மாக்கள் எல்லாம் டிவிட்டர் தெரியாத மக்கு என்றோ அல்லது இந்த விளக்கம் அம்மாக்களுக்கு மட்டுமானது என்றே நினைக்க வேண்டாம்.

பொதுவாக தொழிநுட்பம் என்றால் ஒதுங்கி கொள்ளக்கூடிய அம்மாக்களுக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

எது எப்ப‌டியோ ,’அம்மா இப்படி தான் டிவிட்டர் வேலை செய்கிறது’ என துவங்கும் டிவிட்டர் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இந்த தளம் அழகாக விளக்குகிற‌து.

டிவிட்டர் என்பது 140 எழுத்துக்களுக்குள் தங்கள் வாழ்கையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான அல்லது தாங்கள் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் கருதும் விஷயங்களூக்கான இணைப்பை பகிர்ந்து கொள்ளும் சமூக வலைப்பின்னல் சேவை என்மும் ஆரம்ப வரிகள் டிவிட்டரை சரியாகவே புரிய வைக்க முயல்கிற‌து.

பிரபலமானவர்களை பின்தொடரவும்,நணபர்களுக்குள் பரஸ்ப்ரம் தொடர்பு கொள்ளவும் என பலரும் டிவிட்டரை பலவிதமாக பயன்படுத்துகின்றனர் என்றும் சிலர் டிவிட்டரை தங்கள் வாழ்க்கையை பற்றி பகிரும் குறும்வலைப்பதிவாக கருதுகின்ற‌னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு டிவிட்டர் பயனாளிகள் யார் என்பதும் அவற்றில் உள்ள வகைகளும் விளக்கப்பட்டிருக்கிறது.அதாவது டிவிட்டரை பயன்படுத்துவர்கள் யாரை பிந்தொடருவது என்பதை எல்லாம் தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு பிதொடர்வது என்றால் என்ன என்றும் விளக்கப்பட்டுள்ளது.

எவருக்கும் புரியும் வகையில் இந்த விளக்கம் மிக எளிமையாக அமைந்துள்ளதை பாராட்டாமல் இருக்க முடியாது.உதாரணத்திற்கு பிதொடர்வது என்பது யாருடைய பதிவுகளை எல்லாம உங்களுடைய டிவிட்டர் முகப்பு பக்கத்தில் தோன்ற அனுமதிக்கிறீர்கள் என்று அழகாக சொல்லப்பட்டுள்ளது.

மறுபதிவு (ரீடிவீட்) வசதி,நேரடி வசதி மற்றும் ஹாஷ்டேக் பற்றிய விளக்கமுமாக நீள்கிற‌து.

டிவிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரின்ஷாட்டுடன் இந்த விளக்கங்களை படிக்கும் போது எவருக்கும் டிவிட்டர் பற்றி எளிதில் விளங்கிவிடும்.

அதோடு டிவிட்டர் பயனாளிகள் பலருக்கு பேஸ்புக்கிற்கும் என்ன வித்தியாசம் என்று எழக்கூடிய கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ள‌து.

டிவிட்டர் பற்றீய முழுமையான கையேடு இல்லாவிட்டாலும் டிவிட்டரின் அடிப்படை அம்சங்கள் தொடர்பான சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள இந்த கட்டுரை உதவும் என்று ஜெஸிகா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியுயார்க நகரில் வசிக்கும் இவர் இது போன்ற கட்டுரை தளங்களை உருவாக்குவதில்  கில்லாடி என்றே தோன்றுகிற‌து.டைலி கேப் கிராப் உட்பட பல தளங்களை அவர் இது போல அமைத்திருக்கிறார்.

இணையதள முகவ‌ரி;http://www.jhische.com/twitter/

———–
டிவிட்டர் பற்றிய எனது அறிமுக கட்டுரையை படிக்க விரும்பினால் இந்த பதிவை  https://cybersimman.wordpress.com/2009/08/26/twitter-26/பார்க்கவும்.

அன்புடன் சிம்மன்.

Advertisements

7 responses to “அம்மாக்களுக்காக, டிவிட்டர் ஒரு அறிமுகம்

  1. Pingback: தமிழ் கணணி தொழிநுட்ப தகவல்கள்·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s