டிவிட்டர் ஜோசியம் தெரியுமா?

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம்.

உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ,எதை சொன்னாலும் கடுமையாக‌ சொல்பவரை ஆவேச குறும்பதிவர் என்றோ கணிப்பது சுலபமானது தான்.அதே போல எப்போதும் தன்னை பற்றியே பேசுபவரை தன்முனைப்பு கொண்டவராக கருதலாம்.

எந்த டிவிட்டர் பதிவுக்கும் எதிர் கருத்து பதிவு செய்பவரை விவாத பிரியர் என்று நினக்கலாம்.

ஆனால் இந்த கருத்துக்கள் எல்லாமே மேம்போக்கானவை தான்.ஒரு குறும்பதிவுகளை பார்க்கும் போது மனதில் தோன்றும் எண்ண சித்திரம்.அவ்வளவு தான்.

அதே நேரத்தில் ஒருவருடைய டிவிட்டர் பதிவுகளை படிக்கும் போது அவரை பற்றிய ஒரு கருத்து மனதில் தோன்றுவதும் இயல்பானது தான்.இந்த க‌ருத்து சரியானது தானா என்று சோதிக்க விரும்பினாலோ அல்லது முற்றிலும் சார்பற்ற முறையில் டிவிட்டர் பதிவர்களை பற்றிய கணிப்பை பெற் விரும்பினாலோ ட்வீட்சைக் இணையதள‌த்தை நாடலாம்.

டிவிட்டர் பதிவாளர்கள் பற்றிய உளவியல் சித்திரத்தை வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது.அதாவது ஒரு உளவியல் ஆலோசகர் போல டிவிட்டர் பதிவுகளை அலசி ஆராய்ந்து அந்த பதிவுகளை வெளியிட்டவர பற்றிய அறிக்கையை இந்த தளம் தருகிறது.

எந்த டிவிட்டர் பற்றி அறிய வேண்டுமோ அவரது டிவிட்டர் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் உடனே அவரைப்பற்றியை அறிக்கையை தந்து விடுகிற‌து.

சும்மா சொல்லக்கூடாது அறிக்கை விரிவாகவே அமைகிறது.எண்கள்,பணம்,நிகழ்காலம்,கடந்த காலம்,எதிர்காலம்,கட்டுப்பாடு,உணர்வுகள்,புரிதல் என பல்வேறு தலைப்புகளை பட்டியலிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் அவருடைய டிவிட்டர் பதிவுகள் எப்படி அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிற‌து.

குறும்பதிவுகள் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக இருக்கின்றன,எந்த அளவுக்கு சமூக தன்மை மிக்கவையாக இருக்கின்றன என்பதையெல்லாம் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.

எண்கள் பற்றி எத்தனை முறை பதிவு செய்துள்ளார்,எத்தனை முறை பணம் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்று அலசி ஆராயபடுவதை பார்க்கும் போது அட டிவிட்டர் பதிவுகளை இப்படி கூட புரிந்து கொள்ளலாமா என்ற வியப்பு ஏற்படுகிறது.

எந்திரத்தனமானது என்று சொல்லக்கூடிய வகையில் சாப்ட்வேர் உருவாக்கித்தரும் ஆய்வு தான் என்றாலும் இந்த விவரங்கள் அறிவியல் பூர்வமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு குறும்பதிவரை பற்றி நாம்  நினைத்து கொண்டிருப்பது எத்தனை பொத்தம் பொதிவானது  என்று இந்த‌ அறிக்கை எண்ண வைத்து விடுகிறது.அதோடு ஒரு குறும்பதிவரின் எண்ண ஓட்டங்கள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றியும் புரிய வைக்கிறது.

அனைத்து அமழங்களையும் பரிசிலித்து விட்டு டிவிட்டர் பதிவுகள் மொத்தத்தில் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்றும் உணர்த்தப்படுகிறது.அப்படியே நம்பிக்கைக்குறியவர்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.பக்கத்திலேயே சமீபத்தில் ஆய்வுக்கு உட்பட்ட டிவிட்டர் பதிவர்களின்  பட்டியலும் இடம் பெறுகிற‌து.மேலும் அதே போல சிந்தனை போக்கு கொண்ட டிவிட்டர் பதிவர்களின் பட்டியலும் தரப்படுகிற‌து.

ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிவிட்டர் பதிவுகளை ச‌மர்பித்து ஆய்வு செய்து கொள்ளலாம்.ஆனால் ஆங்கில பதிவுகள் மட்டுமே செல்லுபடியாகிறது.

டிவிட்டரில் உள்ள செல்வாகை கண்க்கிட்டு சொலவது உடப்ட பல்வேறு டிவிட்டர் சார்ந்த சேவைகளுக் தளங்களும் இருக்கின்றன.அவற்றில் சுவாரஸ்யம் மிக்கதாக இதனை குறிப்பிடலாம்.

இணையதள முகவரி;http://tweetpsych.com/

2 responses to “டிவிட்டர் ஜோசியம் தெரியுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s