தமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த ஆவேச குரல் அரசின் காதுகளை எட்டச்செய்ய வேண்டும்.

இந்த இணைய முயற்சியின் இன்னொரு அங்கமாக மீனவர் நலன் காப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான இணைய விண்ணப்ப படிவம் உருவாக்க‌ப‌பட்டுள்ளது.

இணைய கோரிக்கைகளை உருவாக்கி அதற்கு ஆதரவு திரட்ட வழி செய்யும் பிரபலமான பெட்டிஷன்ஸ் ஆன்லைன் தளத்தில் தமிழக் மீனவர்கள காப்பாற்றுங்கள் என்னும் படிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கு,அதாவது பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ள அந்த படிவம் இதுவரை இலங்கை கடற்படையால 539 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கும் வேதனையான உண்மையை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தோடு இந்தைய மினவர்களுக்கு இது போன்ற பிரச்ச்னை ஏற்பட்ட போது தீர்வு கண்டது போல இந்த பிரச்ச‌னைக்கும் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும் ,கடல் எல்லையை மீறினாலும் மீனவர்கள் தாக்கப்படகூடாது என்றும் இந்த படிவம் வலியுறுத்துகிற‌து.

மீனவர்களுக்காக இந்தைய கடற்படை ரோந்து சுற்ற வேண்டும் என்றும் கச்சத்தீவை மீடக் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இணையவாசிகள் கைப்பமிட்டு இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

இணைய படிவம் மூலம் குரல் எழுப்புவது என்பது இணைய போராட்டம் மற்றும் இயக்கத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.எனவே இந்த படிவத்தில் கையெழுத்திட்டு நம் ஆத‌ரவை தெரிவிப்போம்.

 

———–

http://www.petitiononline.com/TNfisher/petition.html

 

—————

(இந்த போராட்டம் பற்றி அறிய விரும்புகிற‌வர்கள் என் முந்தைய பதிவான தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரலை பார்க்கவும்.)

 

 

Advertisements

9 responses to “தமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

 1. தமிழக மீனவர்கள் பிரச்சினையே இந்தியா அரசு மெத்தன போக்குடன் நடந்து கொள்கிறது இவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் மீனவர்களுக்கு தேசபக்தி இருப்பது கேள்விகுரியகிவிடும்
  அன்புடன்
  மீனவன் மண்டபம் -அலி அக்பர்

 2. தமிழகத்து மீனவர்கள் இப்போ இருக்கிற எந்த அரசியல் வாதியேயும் நம்பகூடாது
  அனைத்து இயக்கங்களும் ஓட்டுக்கு நாடகம் ஆடுகிறது
  தமிழகத்து மீனவர்களை ஓன்று கூடுங்கள் அனைத்து மாவட்டத்தையும் இணைத்து ஒரே இயக்கமாக உரூவாக்கி உடனடியாக ஒரு கட்சியே உருவாக்கவும் உங்களில் ஒருவனை பிரதிநிதியாக தேர்ந்து எடுத்து உங்களுக்காக உழைத்திட /இழந்த்த உரிமைகளை மீண்டும் பெற பிதிநிதியே சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்
  உங்களுக்காக ஓட்டுபோட காத்திருக்கும்
  மீனவன் – மண்டபம் அலி அக்பர்

  • மீனவர்களுக்காக வலுவான ஒரு இயக்கம் உருவாவது பொருத்தமனாதே.இணையம் உங்கள் பக்கம் இருக்கிறது.

   அன்புடன் சிம்மன்.

 3. இந்திய அரசும்,பிரதமர்ரும் .வெளியுறவுதுறையு ஏன் இலங்கை ஒருதட்டு கூட தட்டாமல் வேடிக்கை பார்க்கிறது? இந்தியவேடிக்கை பார்க்க…..
  இலங்கைவேடிக்கை காட்ட…இந்தியமீனவர்களின் உரிமைகள் ,உயிர்கள் இலங்கையால் பரிக்படுகிறது,து ம்மர்துண்டு இலங்கை இந்தியாக்குஎதிர் விளையாட்டு விளையாடுகிறது இத –ர்க்கு கா ரணம் ”இந்தியாரகசிம்-இலங்கையிடம்இருப்பதே”கா ரணம்மர்கும் ….கா ரணம் எதுவாகட்டும் மீனவர்களின்உரிமைகள்-உயிர்கள் களைகாத்திடட்டும்இதுவே இந்தியஇறையாண்மை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s