பெற்றோர்க்கு கற்றுத்தர ஒரு இணைய தளம்

பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மாணவர்கள் போல கைக்கட்டி நிற்க வேண்டி இருக்கும் என்று கடந்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் நிச்சயம் நினைத் துக்கூட பார்த்திருக்க மாட்டார் கள். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் இண்டெர் நெட்டின் தாக்கம் இதைத் தான் செய்து இருக்கிறது.
.
பிறக்கும்போதே இமெயில் முகவரியோடு குழந்தைகள் பிறக்கத் துவங்கியிருக்கும் காலத்தில் கம்ப்யூட்டரும், இண்டெர்நெட்டும் எல்லா துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது. இந்தக்கால தலைமுறையினர் மிகச் சுலபமாக இண்டெர் நெட்டுக்கு பரீட்சைமாகி விடுகின்றனர். ஆனால் கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  இண்டெர்நெட் என்றால் ஏதோ தொழில்நுட்ப பூதம் என்பது போல விலகி நிற்கின்றனர்.

பலர் காலத்தின் போக்கை அறிந்து இண்டெர்நெட்டை பயன்படுத்த கற்று வருகின்றனர். பலர் தங்கள் பிள்ளைகள் மூலமே இண்டெர் நெட் பயன்பாட்டை அறிந்துகொள்கின்றனர்.  வீட்டில் அம்மா  அப்பாவுக்கு, தாத்தா  பாட்டிகளுக்கு பிள் ளைகளும் பேரக்குழந்தைகளும் தொழில்நுட்ப அரிச்சுவடியில் பாடம் நடத்துவதை பல வீடுகளில் பார்க்கலாம். டிவி விளம்பரம் ஒன்றில் வருவதுபோல இண்டெர் நெட் பற்றி மகன் விளக்கிக் கூறுவதை பார்த்து தாய் வியந்து போய் நிற்பதுதான் இந்த தொழில்நுட்ப யுகத்தின் யதார்த்தம்.

பெரியவர்களும், வயதின் தயக்கத்தை உதறித் தள்ளி இந்த யுகத்துக்குள் அடியெடுத்து வருகின்றனர். ஆனால் பல நேரங்களில் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கம்ப்யூட்டர் மற்றும் இண்டெர் நெட் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுமை இல்லாமல் போகலாம்.  அதிலும் வேலை பளு அதிகம் உள்ளவர்கள் ஒரே மாதிரியான சின்னச் சின்ன சந்தேகங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்க நேர்வதால் வெறுத்துப் போகலாம்.

இதுபோன்ற நேரங்களில் பெற்றோர்களுக்கும் வேதனை தராமல் அதே நேரத்தில் பிள்ளைகளின் நேரமும் பாழாகமல்  கைக்கொடுக்க ஒரு இணைய தளம் அமைக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களுக்கு தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுங்கள் என்று பொருள் தரும் வகையில் (டீச் பேரெண்ட்ஸ் டெக்) அமைக்கப்பட்டுள்ள அந்த இணையதளம், கம்ப்யூட்டர் இண்டெர் நெட் தொடர்பாக புதிதாக பயன்படுத்தக்கூடியவர் களுக்கு ஏற்படக்கூடிய அடிப் படையான சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கான வழிகளை கொண்டு இருக்கிறது. அதிலும் வீடியோ மூலமான செய்முறை விளக்கங்களாக இவை அமைந்துள்ளன. உதாரணத்துக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்த துவங்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளன. அதேபோல இணைய தளத்தில் உலாவர என்னவெல்லாம் செய்ய வேண் டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளன.

எந்த பிரிவில் உதவி தேவையோ அதனை கிளிக் செய்து அந்த வீடியோவை அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ, தாத்தாவுக்கோ  அல்லது பாட்டிக்கோ அனுப்பி வைக்கலாம். தேடியந்திர உலகில் முன்னணியில் இருக்கும் கூகுல் நிறுவனத்தில் பணியாற்றும்  நபர்கள் இணைந்து இந்த தளத்தை உருவாக்கி உள்ளனர்.

கூகுலைப்போலவே எளிமை யான வடிவமைப்பை கொண்ட இந்த தளத்தின் மூலமாக அன்புள்ள அம்மாவுக்கு/அப்பா வுக்கு எனும் அறிமுகத்தோடு தேவைப்படும் வீடியோ வழிமுறையை கிளிக் செய்து அனுப்பி வைக்கலாம். பெற்றோர்களின் இண்டெர்நெட் பயன்பாடு குறித்து பிள்ளை கள் கொண்டிருக்கும் எண்ணத்தையும் வெளிப்படுத்த வழி செய்திருக்கின்றனர்.  பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கற்றுத் தந்த காலம் மாறி பிள்ளைகள் பெற்றோருக்கு கற்றுத் தரும் காலத்தை உணர்த்தும் இணைய தளம் இது.

இணைய தள முகவரி: http://www.teachparentstech.org

Advertisements

One response to “பெற்றோர்க்கு கற்றுத்தர ஒரு இணைய தளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s