நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவை திட்டமிட உதவும் இணையதளம்.

நண்பர்களோடு சேர்ந்து டீ சாப்பிட செல்ல ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்?

என்ன விளையாடுகிறீர்களா டீ சாப்பிட எல்லாம் ஒரு இணையதளம் எதற்கு?நண்பர்களை பார்த்தால் டீக்கடையை தேடி போனால் போச்சு,இதற்கு இணையதளத்தின் உதவி எதற்கு என்று கேட்கலாம்.

ஆனால் டீ குடிப்பதை ஒரு சமூக நிகழ்வாக,நட்பையும் அன்பையும் பரிமாரிக்கொள்ளும் வாய்ப்பாக கருதுவதாக இருந்தால் டீ குடிக்க செல்வதை நம் சார்பில் நிர்வகிக்க ஒரு இணைய சேவை இருந்தால் சிறப்பாக தான் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்.

ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பணிக்கு நடுவே அல்லது மாலையில் பணி முடிந்து செல்லும் போது ஒன்றாக டீ குடிக்க செல்வதை பார்த்திருக்கிறோம்.அதே நேரத்தில் தற்செய்லாக நண்பர்களை சந்திக்க நேர்ந்தாலும் அருகே உள்ள கடைக்கு சென்று தேநீர் அருந்தி மகிழ்வதும் சகஜமானது.

இதெல்லாம் தெரிந்த கதை தானே என்று கேட்கலாம்.

இருங்கள் இந்த தற்செயல் நிகழ்வை ஒரு திட்டமிட்ட செய்லாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும் ?அதாவது நாம் நமது நண்பர்களுடன் ஒரு சீரான இடைவெளியில் டீகடைக்கு சென்று தேநீர் அருந்தியபடி பேசி மகிழ்ந்து நட்பை பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்.

இன்றைய அவசர யுகத்தில் யாருடன் டீ குடித்தோம்,நீண்ட நாட்களாக யாருடன் டீ குடிக்கவில்லை என்றெலாம் நினைவில் வைத்திருக யாருக்கும் நேரமில்லை.

ஆனால் நமது நட்பு வட்டத்தில் உள்ளவர்களை பல நாட்களாக சந்திக்கவில்லை என்று வைத்து கொள்ளுங்கள்,அப்போது அந்த நண்பர்களோடு சேர்ந்து தேநீர் அருந்த ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்?இதனை நினைவூட்டி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஒரு இணையதளம் ஏற்றுக்கொண்டால் நன்றாக தானே இருக்கும்.

இதன் மூலம் தொடர்ச்சியாக நண்பர்களை சந்தித்து கொண்டே இருக்கலாம் தானே.மறதியும் பணிச்சுமையும் நட்புக்கு வேட்டு வைப்பதற்கு பதிலாக நண்பர்களை அடிக்கடி சந்தித்து கொண்டே இருந்தால் நமக்கும் நட்புக்கும் நல்லது தானே.

இப்போது விஷயத்திற்கு வருவோம் இந்த கருத்தாக்கம் உங்களூக்கு பிடித்திருந்து அட இப்படி ஒரு இணையசேவை இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றினாலோ அல்லது இதற்கெல்லாம் இணையசேவை உருவாக்குவது சாத்தியமா என்று நினைத்தாலே வெட்னஸ்டேஸ் இணையதளம் இதை தான் செய்கிறது தெரியுமா?

நண்பர்களுக்கான மதிய உணவு நிர்வாக சேவை என்று இந்த தளத்திஅ வர்ணிக்கலாம்.இந்த தளம் நண்பர்கள் வட்டத்திற்குள் மதிய உணவுக்கான சந்திப்பை திட்டமிட உதவுகிறது.

நண்பர்கள் அவப்போது மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டு நட்பை புதிப்பித்துகொள்வதோடு நிதானமாக கருத்துக்களையும் பரிமாறி கொள்வதுண்டு அல்லவா?

பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பிஸியான மனிதர்கள் மத்தியில் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல நேரங்களில் நண்பர்கள் தங்களுக்குள் சரியாக திட்டமிட்டு கொள்ள முடியாமல் தவிப்பதுண்டு.

ஒன்று நேரம் இல்லாமல் இருக்கும்.அல்லதுசரியான் நேரத்தில் மற்ற நண்பர்களை தொடர்பு கொண்டு தகவல் சொல்ல முடியாமல் போகும்.

இந்த இடத்தில் தான் வெட்ன்ஸ்டேஸ் தலம் வருகிறது.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் நண்பர்களது இமெயில் முகவரியை சமர்பிக்க வேண்டும்.

அதன் பிறகு மற்றவற்றை இந்த தளம் பார்த்து கொள்ளும்.ஒரு நல்ல நண்பனை போல இந்த தளம் உங்கள் நட்பு வட்டத்தை கண்காணித்து யாருடனெல்லாம் நீங்க்கள் சமீபத்தில் சாப்பிட செல்லவில்லை என்று கண்டுபிடித்து அவர்களோடு ஒரு புதன் கிழமை தினத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யும்.(புதன் கிழமை வாரத்தின் இடையே வருவதால் பலருக்கும் செள்கர்யமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது)

அதே போல உங்கள் நண்பர்களும் இதில் உறுப்பினராக இருந்தால் அவர்களிடம் இருந்தும் உங்களுக்கு அழைப்பு வரலாம்.

இதன் மூலம் எந்தவித திட்டமிடலும் இல்லாமால் நண்பர்களை சீரான இடைவெளியில் சந்தித்து கொண்டே இருக்கலாம்.

நீங்கள் எதைபற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.வெட்ன்ஸ்டேஸ் தளம் எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும்.

இணையதள முகவரி;http://wednesdays.com/

One response to “நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவை திட்டமிட உதவும் இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s