இணைய யுகத்தில் ரெயில் சிநேகம்

பக்கத்து வீட்டுக்காரரை விட பேஸ்புக் நண்பர்களோடு அதிக நேரம் உரையாடும் காலம் இது.இவ்வள‌வு ஏன் பக்கத்து வீட்டுக்காரை கூட பேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் வியப்பதற்கில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொருத்து இந்த போக்கை காலத்தின் கட்டாயம் என்றோ காலத்தின் கோலம் என்றோ வர்ணிக்கலாம்.

‍‍‍‍‍‍‍ஆனால் ஒன்று பேஸ்புக் போன்ற இணைய சேவைகள் மூலம் அறிமுகம் ஆகும் போது மற்றவர்களை சிற‌ப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.ஒரே பிளாட்டில் குடியிருப்பவர்கள் தினம் தினம் பார்த்து கொள்ளும் போது அறிமுகம் இல்லாதவ‌ர்கள் போல் ஒரு புன்னகையை கூட உதிர்க்காமல் செல்வதே நகர வாழ்க்கையின் இயல்பாக இருக்கிற‌து.

புதியவர்களை பார்த்தால் தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டு பழகிய கிராமத்து மனிதர்கள் இது எப்படி சாத்தியம் என வியந்து போகலாம்.

இதே போலவே தினமும் ஒரே ரெயிலில் பயணம் செய்பவர்களும் ஏதோ தனிமை தவத்தில் இருப்பவர்கள் போல தங்களுக்குள்ளேயே முழ்கி கிடப்பார்களே தவிர பக்கத்தில் இருப்பவரோடு பேச மாட்டார்.விதிவிலக்காக பக்கத்தில் இருப்பவரிடம் ரொம்ப சகஜமாக பேச்சு கொடுத்து இயல்பாக சொந்த விஷயங்கள் குறித்தும் நாட்டு நடப்புக்கள் குறித்தும் பேசுபவர்கள் அபூர்வ பிறவிகள்.

இதை மெட்ரோக்களின் சாபக்கேடு என்றும் சொல்லலாம்.

எது எப்படியோ இணைய உலகில் இதற்கு இணையதளம் வழியே தான் தீர்வு காண முடியும் போலும்.

மெட்ரோமேட்சை அத்தகைய‌ தளம் தான்.

ரெயில் பயணிகள் நண்பர்களாக மாற உதவும் இந்த தளம் டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்த‌மான ரெயில் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.அந்த வகையில் இதனை ரெயில் பயணிகளுக்கான பேஸ்புக் என்றும் வர்ணிக்கலாம்.

தினமும் ஒரே ரெயிலில் பயணம் செய்பவர்கள் பக்கத்திலேயே இருந்தாலும் பேசிக்கொள்ள எந்த விஷயமும் இல்லாமல் அந்நிய‌ர்கள் போலவே உணர்வார்கள்.அதே நேரத்தில் அதே ரெயிலில் ஒத்த கருத்து மற்றும் ஒரே விதமான ரசனையில் நண்பர்களாக கூடியவர்கள் வேறு வேறு பெட்டியில் பயணிக்கலாம்.ஏன் அதே பெட்டியில் கூட இருக்கலாம்.

ஆனால் அவர்களை தெரிந்து கொள்வது எப்படி?மெட்ரோமேட்ஸ் அதை தான் செய்கிற‌து.

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் முதலில் இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அப்போது தினமும் எந்த செயில் நிலையத்தில் இருந்து எந்த இடத்திற்கு பயணிக்கின்றனர் என்பதையும் எந்த நேரத்தில் செல்கின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இதன் பிறகு என்னவெல்லாம் சாத்தியம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

நீங்கள் செல்லும் நேரத்தில் உங்களுடன் பயணிப்பவரை தெரிந்து கொண்டு அவர்களோடு தொடர்பு கொள்ளலாம்.உறுப்பினராக விவரங்களை சமர்பிக்கும் போது பயணிகள் தங்கள‌து விருப்பு வெறுப்புகளையும் தெரிவிக்கலாம் என்பதால் தொடர்பு கொள்வதற்கு முன்பாக சக பயணியின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டு ஒத்த கருத்துள்ளவர்களாக பார்த்து இணையம் வழியே பேச்சு கொடுக்கலாம்.

உதாரண‌த்திற்கு கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள் ஒரே நேரத்தில் ஒரே ரெயிலில் பயணிப்பதை அறிந்து நட்பு கொள்ளலாம்.

உறுப்பினர்களுக்கு புளுடூத் அடையாள எண் ஒன்றும் வழங்கப்படுகிறது.எனவே மெட்ரோ ரெயிலில் ஏறியதும் செல்போனில் ப்ளூடூட்தை இயக்கினால் அதே ரெயிலில் மெட்ரோ நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனர் என்பதை செல்போன் திரையில் பார்த்து தொடர்பு கொள்ளலாம்.அவர்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் ஒரே கிளிக்கில் விவரங்களை அறிந்து நம்மவர் என்ற எண்ணம் ஏற்பட்டால் நணபர்களாகலாம்.பரிட்சியம் ஏற்படும் வரை ப்ளூடூத் வழியே செய்திகளை அனுப்பி தொடர்பு கொள்லலாம்.

மெட்ரோவில் தனியே பயணம் செய்கிறீர்களா,நன்பர்களை தேடிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் கடந்த மாதாம் தான் துவக்கப்பட்டது.ஆனால் அதற்குள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இணையதள முகவரி;http://www.metromates.in/

6 responses to “இணைய யுகத்தில் ரெயில் சிநேகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s