நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது.

இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் இந்த 2ரிமைண்டர்ஸ் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

ஆனால் 2ரிமைண்டர்ஸ் தளத்தை பிறந்த நாள் நினைவூட்டல் தளத்திற்கும் மேலானது என்றே சொல்ல வேண்டும்.உண்மையில் உங்கள் வாழ்க்கையை அழகாக நிரவகித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இதனை பிறந்த நாளை மறக்காமல் இருக்க உதவுவதில் இருந்து துவங்குகிறது.

அதற்காக நீங்கள் செய்ய வேன்டியதெல்லாம் இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு உங்களது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியை சம‌ர்பிக்க வேண்டும்.அதன்பிறகு இந்த தளத்தையே கூட நீங்கள் மற‌ந்துவிடலாம்.

ஆனால் உங்கள் நண்பர்களின் பிறந்த நாள வருவதற்கு முன் இந்த தளம் மறக்காமல் இமெயில் மூலம் நினவூட்டலை அனுப்பி வைக்கும்.சரியாக ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த நினவூட்டல் வந்துவிடும்.தொடர்ந்து பிறந்த நாளுக்கு முந்தைய தினமும் நினைவூட்டல் வரும்.

எப்பொழுது நினைவூட்ட வேண்டும் என்பதை கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதியும் உண்டு.இமெயில் தவிர செல்போனில் எஸ் எம் எஸ் வாயிலாகவும் நினைவூட்டலை பெறலாம்.

எனவே,பிறந்த நாளுக்கு டிரிட் த‌ரும் நண்பனிடம் இன்று உனக்கு பிறந்த நாளா சொல்லவேயில்லை என்றெல்லாம் அசடு வழிய தேவையிருக்காது.

நினைவூட்டுவதோடு நின்று விடாமல் பிறந்த நாளுக்கு அனுப்பக்குட்டிய வாழ்த்து அட்டைகளையும் இந்த தளம் பரிந்துரைக்கிறது.அப்படியே பரிசு பொருட்களுக்கான ஐடியாக்களையும் முன்வைக்கிறது.வாழ்த்து அட்டையோ பரிசு பொருளோ வாங்க நேரம் இல்லை என்றால் இந்த தளத்தின் மூலமாகவே வாழ்த்து சொல்லிவிடலாம்.

பிறந்த நாளுக்கு என்றில்லை,திருமண நாள் உள்ளிட்ட எந்த முக்கியமான நிகழ்வுகளுக்கு வேண்டுமானாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.நம்மூர்காரர்கள் கிருத்திகை,பிரதோஷம் போன்ற தினங்களை மறக்காமல் இருக்க கூட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வளவு ஏன் தொலைபேசி பில் கட்ட வேண்டிய நாள்,கேஸ் புக் செய்ய வேண்டிய தினம்,வங்கியில் லோனுக்கான தவணை செலுத்த வேண்டிய தேதி போன்றவற்றை கூட இந்த தளத்தில் குறித்து வைத்து சரியான நேரத்தின் நினைவூட்ட வைக்கலாம்.

நம‌க்கு நாமே திட்டம் போல கட்டாயம் இதனை செய்ய வேண்டும் என்று சில விஷயங்களை நினத்து கொண்டிருப்போம் அல்லவா அந்த வேலைகளை மறக்காமல் செய்து முடிக்கவும் இந்த சேவை கை கொடுக்கும்.அந்த வகையில் ஒருவருடைய வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு முக்கிய விஷயங்க‌ளை மறக்காமல் இருக்க இந்த தளம் உதவுகிறது.

இந்த சேவையை எந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்துவது என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது.

மருத்துவரிடம் செக் அப்பிற்கு சென்று கோண்டிருபவர்கள் அடுத்த முறை எப்போது டாக்டரை பார்க்க வேண்டும் என்பதையும் இந்த தளத்திடமே சொல்லி வைத்து நினைவுட்ட சொல்லலாம்.இப்படியே மனைவி வாங்கி வரச்சொல்லிய பொருளை மறக்காமல் இருக்கவும் இதனை பயன்படுத்தலாம்.

சில நேர‌ங்களில் உறவினரை ஏர்போர்ட்டில் இருந்து பிக் அப் செய்வதாக‌ சொல்லிவிட்டு வேலை அதற்கான நேரம் வந்ததும் மறந்து விட்டு அவரை அம்போவென தவிக்க விட்டு விடுவீர்கள் அல்லவா?அத்தகைய தவறுகள் நேராமல் இருக்கவும்,இந்த சேவையின் மூலமே எப்போது ஏர்போர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் நினைவில் வைத்து கொள்ளலாம்.

இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு குழுவாக செய்ய திட்டமிட்டுள்ள பணியை கூட இந்த தளத்தின் வசம் ஒப்படைத்துவிடலாம்.உதாரணத்திற்கு நண்பர்கள் ஒன்றாக மதிய உணவுக்கோ பிக்னிக்கிற்கோ செல்ல விரும்பும் படசத்தில் தனிதனியே போன செய்து அல்லது இமெயிலனுப்பி கொண்டிருக்க வேண்டியதில்லை.நண்பர்களின் முகவரியை கொடுத்து மனதில் உள்ள திட்டத்தையும் சொன்னால் அவர்களுக்கு தகவல் தரும் பொறுப்பையும் இந்த தளமே ஏற்றுக்கொள்கிற‌து.

இப்படி ஒரு தற்காலிக சமூக வலைப்பின்னல் சேவையாகவும் செய்லப்டுவதாக் இந்த தளம் பெருமைப்பட்டு கொள்கிற‌து.

உங்கள் வாழ்க்கையை சிறந்த‌ முறையில் திட்டமிடப்பட்டதாகவும் சுவை மிக்கதாகவும் மாற்றிய‌மைத்து கொள்ள வழி செய்வதாகவும் இந்த தளம் சொல்கிறது.திட்டமிட உதவும் இணைய நாட்காட்டிகளை விட இந்த முறை சிறந்தது என்றும் இந்த தளம் உறுதியாக சொல்கிறது.

இண்டெர்நெட் துறையில் அனுபவம் மிக்க மார்க் லூக்கி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகிறார்.பஸ்மைண்டர் என்னும் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்த தளத்தை அவர் நடத்தி வருகிறார்.நினைவூட்டல் சார்ந்த மேலும் பல சேவைகளை வழங்க‌ இந்த தளம் திட்டமிட்டுள்ளது.

இணையதள முகவரி;http://www.2reminders.com/default.jsp

Advertisements

8 responses to “நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s