திட்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தளம்.

மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன.அதே போல உங்களது திட்டங்களையும் இண்டெர்நெட் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

ஷேர்டு டிஸ்கஷன் இணையதலம் இதற்கான என்றே துவங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சரி ஆனால் திட்டங்களை ஏன் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும்.விஷயம் என்னவென்றால் திட்ட‌ங்க‌ளை இந்த‌ த‌ள‌த்தின் வ‌ழியே ப‌கிர்வ‌த‌ன் மூல‌ம் அவ‌ற்றை திற‌ம்ப‌ட‌ நிர்வ‌கிக்க‌ முடியும்.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்ச்சியையோ அல்லது கிரிக்கெட் போட்டியையோ ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ளிர்க‌ள் என்று வைத்து கொள்வோம் அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை ந‌ண்ப‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ இந்த‌ த‌ள‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

உங்க‌ள் நிக‌ழ்ச்சிக்காக‌ என்று ஒரு இணைய‌ ப‌க்க‌த்தை இந்த‌ த‌ள‌த்தின் மூலம் மிக சுலபமாக‌ துவ‌க்கிவ‌ட‌லாம்.

சொல்லப்போனால் உங்களுக்கான இணையபக்கத்தை அமைத்து கொள்வது இமெயில் முகவரியை உருவாக்கி கொள்வதை விடவும் சுலபமானது.

முகப்பு பகத்தில் ஒவ்வொரு வகையான திட்டமிடலுக்கும் என தனித்தனி பகுதி உள்ளன.அதில் உங்களுக்கான வகையை தேர்வு செய்து கிளிக் செய்து விட்டு உங்கள் பெயர் மற்றும் நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிட்டீர்கள் என்றால் புதிய இணைய பக்கம் உருவாகிவிடும்.

அதன் பிற‌கு அதில் நிகழ்ச்சி தொடர்பான மற்ற விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தையும் கூகுல் வரைபடத்தில் குறிபிட முடியும்.

நிகழ்ச்சி தொடர்பான முழு விரங்களையும் இடம் பெற வைக்கலாம்.அது தொடர்பான இணைய முகவரி இருந்தாலும் இணைப்பு கொடுக்கலாம்.

வேறு கோப்புகள் இருந்தாலும் இணைத்து கொள்ளலாம்.பின்ன உங்கள் நண்பர்களுக்கு இந்த இணைப்பை அனுப்பி வைத்து நிகழ்ச்சி பற்றிய முழு விவரஙக்ளையும் தெரிவிக்கலாம்.நண்பர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உண்டு என்பதால் நிகழ்ச்சி பற்றி விவாதித்து அத‌னை மேலும் சிறப்பாக திட்டமிடலாம்.

இந்த இணைய பக்கத்தை நண்பர்கள் மட்டுமே பார்க்ககூடிய வகையில் கட்டுப்படுத்த முடியும்.எனவே நிகழ்ச்சிகள் தொடர்பான விவரஙகள் வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கலாம்.

இதே போல ஒரு தலிப்பு தொடர்பான கருத்துக்கலை வெளியிட்டு நண்பர்களுடன் விவாதிப்படற்கான இணைய பக்கத்தையும் உருவாக்கலாம்.

சுற்றுலா மற்றும் பிக்னிக் போன்ற பயண திட்டங்க‌ளை ஒருங்கினைக்கவும் பயன்படுத்தலாம்.

கைவ‌ச‌ம் உள்ள‌ பொருட்க‌ளை விற்ப‌னை செய்வ‌த‌ற்காக‌வும் இந்த‌ த‌ள‌த்தை பயன்ப‌டுத்த‌லாம்.

இந்த த‌ளத்தை ஒரு முறை பயனப்டுத்தி பார்த்தால் இது எத்த‌னை சிறப்பானது என்று புரிய வரும்.அதன் பின் பலவிதங்களில் இதனை பயன்படுத்தி இன்புறலாம்.

இணையதள முகவரி;http://usekit.com/share

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s