கூகுலுக்கு ஒரு பட்டன்;பேஸ்புக்கிற்‌கு ஒரு பட்டன்.

இண்டெர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா?

அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன்.இமெயிலா அதற்கு ஒரு அழகான பட்டன்.பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன்.டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன்.எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும்,பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை.அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்றுவிடலாம்.

இண்டெர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக்கூடும்.

எல்லாம் சரி,எதற்காக இந்த குறுக்கு வழி என்று கேட்கலாம்.இணையத்தில் உலா வர பிரவுசர் இருக்கிறது.அடிக்கடி செல்லும் தளங்களுக்கு உடனடியாக செல்ல புக்மார்கிங் வசதியும் உள்ளது.ஒரு சில பிரவுசர்களில் நாம் தின‌ந்தோறும் பார்வையிடும் தளங்கள் பிரவுசரை இயக்கியதுமே தோன்றிவிடும்.

அப்படியிருக்க பட்டன்கள் எதற்கு?

விஷயம் என்னவென்றால் இந்த பட்டன்கள் இன்டெர்நெட் சார்ந்த விஷயங்களை சர்வ சாதரணமாக க‌ருதும் இணைய தலைமுறைக்கானது அல்ல.இண்டெர்நெட் என்றாலே மிரண்டு போய்விடும் மூத தலைமுறையினருக்கானது.

அதாவது உங்கள் அப்பா,அம்மா,தாத்தா,பாட்டிகளுக்கானது.

ஆம் பெரியவ‌ர்களுக்கு இண்டெர்நெட் குழப்பமானதாகவும்,சிக்கலானதாகவும் இருக்கிறது .இதனால் தான் பல பெரியவர்கள் இண்டெர்நெட் என்றாலே மிரண்டு போய் ஒதுங்கி கொள்கின்றனர்.ஆர்வத்தோடு வரும் பலர் இந்த நவீன தொழில்நுட்பத்தின் சூட்சமம் புரியாமல் தடுமாறுகின்றனர்.சிலர் இந்த தடுமாற்றத்திலிருந்து தாங்களாகவே விடுப்பட்டு இணைய உலகிற்குள் முன்னேறி வ‌ந்து விடுகின்ற‌னர்.

இன்னும் சிலரை யாரவது கைதூக்கி விடவேண்டும்.பெரும்பாலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கோ அல்லது தாத்தா பாட்டிக்கோ இண்டெர்நெட்டின் அடிப்படைகளை கற்றுத்தர முற்படுகின்றனர்.

இளையவர்கள் இப்படி பெரியவர்களுக்கு இண்டெர்நெட்டில் எப்படி உலா வருவது என கற்றுத்தருவதை அவர்களின் இணைய கடமையாக கூட கருதலாம்.இண்டெர்நெட் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து வரும் நிலையில் பெரியவர்களையும் அதில் சங்கமிக்க கைகொடுப்பது தானே சரியாக இருக்கும்.

ஆனால் எத்தனை பேருக்கு இதற்கான நேரமும் பொறுமையும் இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த இடத்தில் தான் இண்டெர்நெட்டுக்கான பட்டன்கள் வருகின்றன.

இண்டெர்நெட்டில் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்கள் இனையதளங்களை பயன்படுத்த முற்படும் போது தட்டுத்தடுமாறும் நிலை ஏற்படலாம்.அப்போதெல்லாம் அருகே இருப்பவரிடம் உதவி கோரலாம்.அல்லது தொலைபேசியில் அழைத்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம்.

இந்த சங்கடம் கூட இல்லாமல்,இணையதளங்களை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளவை தான் இண்டெர்நெட் பட்டன்கள்.

உதாரண‌த்திற்கு இமெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் இமெயில் என்னும் பட்டனை கிளிக் செய்தால் போது இமெயில் பக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும்.அதே போல பேஸ்புக்கிற்கு போக வேண்டும் என்றால் பேஸ்புக் பட்ட‌னை கிளிக் செய்தால் போதும்.

இப்படி பல்வேறு இணையதளங்களுக்கான பட்டன்களை உருவாக்கி கொள்வதற்கான சேவையை இண்டெர்நெட் பட்டன்ஸ் டாட் ஆர்ஜி தளம் வழங்குகிற‌து.

இமெயில்,பேஸ்புக்,டிவிட்டர்,யூடியூப்,கூகுல் போன்ற இணையதளங்களுக்கான பட்டன்களை இந்த தளத்தில் உருவாக்கி கொள்ளலாம்.இந்த‌ தளங்கள் தான் என்றில்லை,எந்த த‌ளத்திற்கும் அழைத்து செல்லக்கூடிய பட்டன்களை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம்.

பட்டன்களை தேர்வு செய்து அதில் இணையதளங்களுக்கான முகவரியை டைப் செய்தால் பளபளக்கும் வண்ணங்களில் அழகிய பட்டன்கள் தயாரிகிவிடும்.அந்த பட்டன்களுக்கான இணைய முகவரியை சேமித்து கொண்டால் எந்த‌ கம்ப்யூட்டரிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.

அடிக்கடி செல்லக்கூடிய மற்றும் அவசியமான இணையதளங்களூக்கான பட்டன்களை உருவாக்கி கொடுத்துவிட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உற்சாகமாக இணையத்தில் உலா வருவார்கள் இல்லையா?

இணையதள முகவரி;http://www.internetbuttons.org/

இதே போல பெரியவர்களுக்கு உதவக்கூடிய டீச் யுவர் பேரன்ட்ஸ் டெக் இணையதளம் பற்றிய எனது முந்தைய பதிவையும் பார்க்கவும்.

Advertisements

3 responses to “கூகுலுக்கு ஒரு பட்டன்;பேஸ்புக்கிற்‌கு ஒரு பட்டன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s