நன்றி என்னும் நதி பாய்ந்தோடும் இணையதளம்.

மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எத்தனை பேர் மிதிபட்டுள்ளனரோ, … அவர்கள் சார்பாக உங்களுக்கெல்லாம் நன்றி இத்துடனாவது விட்டதற்கு என்னும் அந்த வரிகளை அய‌ம்தேங்க்புல் இணையதளம் நினக்க வைக்கிறது.

யோசித்து பார்த்தால் நாம் எல்லாவற்றுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.ஏதோ பலனடைந்தால் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றில்லை.

ஒரு யோகியை போன்ற மனதிருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லலாம்.இயற்கையின் மீது நாட்டம் கொண்டவர் என்றால் ஒவ்வொரு மரத்திற்கும் செடிக்கும் கூட நன்றி சொல்லலாம்.

போதும் என்ற மனமிருந்தால் ஒவ்வொரு வேளை உணவுக்கும் நன்றி சொல்லலாம்.ஆத்திகன் என்றால் கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.நாத்திகன் என்றால் மனிதாபிமானத்துக்கு நன்றி சொல்லலாம்.அன்பான‌ மனைவிக்கு,அழகான குழந்தைக்கு,உற்ற தோழனுக்கு என்று நன்றிக்கான விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இதென்ன நன்றி ஆராய்ச்சியாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா?உங்களை கூட அயம் தேங்புல் பார் இணையதளம் இப்படி நெகிழ வைத்து விடலாம்.

அடிப்படியில் மிகவும் எளிமையான தளம் தான்.ஆனால் நாம் எதற்கெல்லாம் என்று சொல்ல வேண்டும் என்று இந்த‌ தளம் யோசிக்க வைக்கிறது.

இந்த தளத்தின் நோக்கமும் நன்றி நவிலல் தான்.அதாவது நீங்கள் யாருக்காவது,எத‌ற்காவது நன்றி சொல்ல விரும்பினால் இந்த தளத்தில் அதனை வெளியிடலாம்.

சொல்ல மறந்த நன்றிகளோ சொல்ல வேண்டிய நன்றிகளோ கிடையாது.எதற்காக வேண்டுமானலும் நன்றி சொல்லலாம்.

நன்றி சொல்வதற்கான டிவிட்டர் என்று சொல்லக்கூடிய வகையில் இந்த தளத்தில் டிவிட்டரில் இருப்பது போல ஒரு கட்டம் இருக்கிறது.அதில் உங்கள் நன்றி அறிவிப்புகளை 140 எழுத்துக்களுக்குள் இடம் பெற செய்யலாம்.

தளத்தில் உறுப்பினராக வேண்டாம்.பாஸ்வேர்டு பற்றிய கவலையில்லை.நம‌க்கென ஒரு பின்தொடர்பாளர் படையை திரட்ட முயல வேண்டாம்.யாருக்காக பகிர்ந்து கொள்கிறோம் என்று யோசிக்க வேண்டாம்.மனதில் என்ன தோன்றுகிறதோ,அதாவது எதற்கு நன்றி உடையதாக கருதுகிறோமோ  அதை வெளியிட்டு விட்டு வெளியேறலாம்.

அவ்வளவு தான்.

ஒருவர் எனது எல்லா நண்பர்களுக்காகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.இன்னொருவர் வாழ்க்கையின் சவால்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.வாழ்க்கையின் இன்னொரு நாளுக்காக ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.நல்ல அலுவலக காபிக்காக ,குடும்பத்துடன் கழித்த ஞாயிற்றுக்கிழமைக்காக,நல்ல உனவுக்காக,நன்பகலுக்காக்,இந்த கணத்திற்காக,இண்டெர்நெட் இணைப்பபிற்காக என்று நன்றிகளின் பட்டியல் நீள்கிறது.

நன்றிகளின் தன்மையும் வெளிப்படும் விதமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.ஒருவர் ஸ்பெல்செக்கை பயன்படுத்துபவர்களுக்காக நன்றி என்கிறார்.நான நானாக இருப்பதற்காக நன்றி என்கிறார் இன்னொருவர்.நேசிக்கப்படுவதற்கு நன்றி என்கிறார் வேறொருவர்.

ஒருவரோ திவ்யதேசத்திற்கு நன்றி என்று கூறி அதற்கு இனைப்பும் கொடுத்திருக்கிறார்.

இப்படி நன்றி வெளிப்பாடின் நதி பாய்ந்தோடுகிற‌து.

ஒரு முறை இந்த நதியில் நீந்தினால் அட இதற்கெல்லாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம் அல்லவா என்று பிரம்மிப்பு உண்டாகிறது.

நன்றிக்கு உரிய விஷயங்களை யோசித்து பார்த்து பகிர்ந்து கொண்டால் மனதும் கொஞ்சம் பரவ‌சம் கொள்ளதான் செய்கிற‌து.அந்த பரவ‌சம் தான் இந்த தளத்தின் நோக்கமும் கூட.நன்றி தெரிவிப்பது குறுகிய மற்றும் நீண்ட கால மகிழ்ச்சியை அதிகரிக்க செய்கிறது என்பது அறிவியல் பூர்வ‌மாக நிருபிக்கப்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர ந‌ன்றிக்கான நதியோடையாக‌ இந்த தளத்தை அமைத்திருப்பதாக் அதன்‌ நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.

.சிலருக்கு இந்த தளம் விளையாட்டுத்தனமானதாகவும் தோன்றலாம்.சிலரை இந்த தளம் நெகிழ் செய்யலாம்.

வாழ்க்கையை லேசாக்கும் விஷயங்களில் ஒன்றாக இந்த தளத்தையும் குறிப்பிடலாம்.பெரிய அளவிலான் நோக்கமோ அல்லது குறிப்பீட்டு சொல்லக்கூடிஅய் பயன்பாடோ இல்லாத இந்த தளம் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.ஆனால் இந்த தளம் நீடித்திருக்கும் பட்சத்தில் இதில் பகிர்ந்து கொள்ளப்படும் நன்றிக்குறிய விஷயங்கள் உணமையிலேயே வியப்பில் ஆழ்த்தலாம்.

நன்றியின் நதி நிற்காமல் பாய்ந்தோடும் என்று நம்புவோமாக.

நன்றியை பகிர ;http://www.imthankfulfor.org/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s