வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் என்று நினைக்க வைத்து ஏமாற்றி விடுகின்றனர்.இப்படி ஏமாறுபவர்கள் சார்பில் எல்லாம் குரல் கொடுப்பது பொல அமெரிக்காவை சேர்ந்த டான் பால்சம் ஸ்பேம் மெயிகளை அனுப்பும் நிறுவங்களை எதிர்த்து துணிச்சலான போராட்டத்தை நடத்தி வருகிறார்.

தேவையும் இல்லாத பயனில்லாத மெயில்களை அனுப்பும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்வது அவர் நடத்தி வரும் போராட்டம்.

உண்மையில் பால்சம் தான் பார்த்து கொண்டிருந்த வேலையை கூட உதறித்தள்ளி விட்டு ஸ்பேம் மெயில்கள் பின்னே உள்ளவர்களை ஒரு கை பார்த்து வருகிறார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் பால்சம் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றை வந்தவர்.எல்லோரும் போல அவருக்கும் தேவையில்லாத விளம்பர மெயில்கள் வந்து கொண்டிருந்தன.அவரும் முதலில் பொருத்து கொண்டு தான் போனார்.ஆனால் ஒரு நாள் மார்பகத்தை பெரிதாக்க உதவும் சேவை பற்றிய இமெயில்கள் தொடர்ந்து வந்ததால் கடுப்பாகி போன பால்சம் பதிலடி கொடுப்பது என தீர்மானித்தார்.

விளம்பர நோக்கில் அனுப்பபடும் மெயில்களை யாரும் விரும்புவதில்லை.அது அனுப்பி வைப்பவர்களுக்கும் நன்றாக தெரியும்.இருந்தும் இணையவாசிகளின் முகவரி பெட்டியலில் வயக்ரா விளம்பரங்களும்,இன்னும்பிற பயனில்லா அழைப்புகளும் குவிந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் இந்த மெயில்களை அனுப்பி வைப்பது மிகவும் மலிவானது என்பதே.

அஞ்சல் மூலம் விளம்பர நோக்கிலான தபால்களை அனுப்பி வைப்பது என்றால் தபால் தலை செலவு காகித செலவு என்று ஏகப்பட்ட பணம் தேவைப்படும்.அந்த அளவுக்கு விரபனையில் பல இருக்காது.ஆனால் இமெயிலில் விளம்பரங்களை அனுப்புவது மிகவும் சுலபம்.எப்படியாவது இமெயில் முகவரிகளை திரட்டிவிட்டு ஒரே மெயிலை எல்லோருக்கும் அனுப்பி விடலாம்.

இப்படி ஆயிரக்கணக்கில் மெயிலை அனுப்பி அதில் யாராவது ஒரு சிலர் படித்து பார்த்தால் கூட லாபம் தான்.எனவே தான் பல நிறுவனங்கள் ஸ்பேம் மெயிலாக அனுப்பி தள்ளுகின்றன.

பால்சமும் இந்த தகவல்களை நன்கு அறிந்திருந்தார்.இமெயில் இலவசமாக இருப்பதாலேயே இந்த எரிச்சலூட்டும் மார்க்கெட்டிங் விளையாட்டு தொடர்கிறது என்றும் அறிந்திருந்த பால்சம் இந்நிறுவனங்களுக்கு கொஞ்சம் கையை கடிக்க வைத்தால் சரியான பாடமாக இருக்கும் என்று நினைத்தார்.

அதாவது ஸ்பேம் மெயில்களை அனுப்பி வைப்பவர்களுக்கு சிறிதளவேனும் இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார்.

அதன்படி டான்ஹேட்ஸ்ஸ்பேம் என்னும் பெயரில் ஒரு இணையதளத்தை அமைத்து ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க துவங்கினார்.

கலிபோர்னியா மகாண சட்டப்படி வழக்கு தொடர்ந்த பல நிறுவங்களை நீதிமன்றதுக்கு இழுத்து திணறடித்தார்.பல நிறுவனங்கள் இது என்னட வம்பாக போச்சே என்று அவரோடு சமரசம் செய்து கொண்டு நஷ்டஈடு தந்து விலகி கொண்டன.இதனிடையே பால்சம் சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கு போடுவதை மேலும் தீவிரமாக்கினார்.

விளைவு மேலும் பல ஸ்பேம் நிறுவனங்கள் அவரிடம் சிக்கி கொண்டன.அவற்றிடம் இருந்து நஷ்டஈடாக வந்த தொகையே பத்து லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

தனது இணையதளத்தில் இந்த வழக்குகள் பற்றிய விவரங்களை அவர் பெருமையோடு குறிப்பிட்டு வருகிறார்.

அதோடு ஸ்பேம் மெயில்களால் என்ன பிரச்ச்னை என்பது குறித்தும் அவற்றை ஏன் களைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பேம் மெயில்களை அனுப்புவது இலவசமானது அல்ல என்னும் நிலையை ஏற்படுத்தும் வகையில் இந்நிறுவங்களுக்கு நம்மால் முயன்ற அளவு சிறிய நஷ்ட்டத்தயேனும் உண்டாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் ஸ்பேம் தொழிலையே முழுவதுமாக முடக்கி விடலாம் என்று நம்புவதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஸ்பேம் நிறுவங்களை சேர்ந்தவர்களோ இவரது உண்மையான நோக்கம் பணம் சம்பாதிப்பதே என்று குற்றம் சாட்டுகின்றனர்.சட்டபடி வழக்கு தொடரும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வழக்கு போட்டு நிறுவங்களை வளைய வைத்து காசு பார்த்து விடுவதாக கூறுகின்றனர்.

பால்சம் இத்தகைய குற்றச்சாட்டுகளை கண்டு கொள்வதில்லை.குப்பை மெயில்களை அகற்றி இண்டெர்நெட்டை தூய்மை படுத்தும் செயலை தான் செய்து வருவதாக அவர் உற்சாகமாக கூறுகிறார்.

இணையதள முகவரி.;http://www.danhatesspam.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s