வீடியோக்களுக்கான விக்கிபீடியா

உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது.

காட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று அனைத்து வகையான திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி படங்கள் போன்ரவற்றை இந்த தளத்தில் பார்க்கலாம் என்பது.இரண்டாவது தான் இன்னும் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.எல்லாவற்றையும் அவரவர் மொழியிலேயே பார்த்து ரசிக்கலாம் என்பது தான் அது.

உதாரணமாக  கொரிய மொழி படம் என்று வைத்து கொள்ளுங்களேன் அதனை இணையவாசிகள் தங்கள் மொழியில் பார்க்கலாம்.அதாவது அவர்களின் மொழியில் சப் டைட்டிலோடு பார்க்கலாம்.

பெரிய விஷயம் தான் இல்லையா இது.பொதுவாக திரைப்பட விழாக்களில் தான் சப் டைட்டிலோடு வேற்று மொழி படங்களை பார்க்க முடியும்.மற்றபடி வசனங்கள் புரியாமல் காட்சி மொழியை மட்டுமே நம்பி தான் இருக்க வேண்டும்.

ஆனால் வைகி தளத்தில் பல நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் ,டிவி தொடர் நிகழ்ச்சிகள் ஆகியவை சப் டைட்டிலோடு இடம் பெறுகின்றன.ஜப்பான்,கொரியா,மெக்சிகோ,போலந்து,மொரக்கோ,னைஜிரியா என பல நாடுகளின் படங்களை 150 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் சப்டைட்டிலோடு பார்க்கலாம்.

இது எப்படி சாத்தியம் என்று வியப்பு ஏற்படலாம்.இதற்கு காரணமும் இணையவாசிகள் தான்.

ஆம் இந்த தளம் விக்கிபீடியா பாணியில் இணையவாசிகளை நம்பி செயல்படுகிறது.

இந்த தளத்தில் இடம்பெறும் படங்களுக்கும் வீடியோ காட்சிகளுக்கும் சப்டைட்டில் எழுதி தருவது இணையவாசிகளே.விக்கிபீடியாவில் உறுப்பினர்களாக சேர்ந்த பின் எப்படி கட்டுரைகளில் தகவல்களை சேர்ப்பது ,திருத்தம் செய்வது போன்றவற்றை மேற்கொள்கின்றனறோ அது போலவே இந்த தளத்திலும் உறுப்பினர்கள் திரைப்படம்/வீடியோ காட்சிகளில் வரும் உரையாடல்களுக்கு சப்டைட்டில் எழுதலாம்.மற்றவர்கள் அதனை திருத்தி செப்பனிடலாம்.

உறுப்பினராக பதிவு செய்யும் போது ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழி ,இரண்டாம் மொழி எவை என்னும் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.அதன் அடைப்படையில் வீடியோ உரிமையாளர்கள் சப்டைட்டில் அமைக்க தொடர்பு கொள்வார்கள்.

அதன்பிறகு அந்த மொழி அறிந்தவர்கள் தங்கள் மொழியில் சப்டைட்டில்களை எழுதி தரலாம்.இப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கு 500க்கும் மேற்பட்ட பல இனையவாசிகள் ஒன்று செர்ர்ந்து சப்டைட்டில்களை உருவாக்கி தருகின்றனர்.

சரி இப்படி மொழிமாற்றம் செய்பவர்களுக்கு என்ன பயன் என்று கேட்கலாம்.வருவாய் ஆதாயம் எதுவும் இல்லை என்றாலும் திரைப்படம் அல்லது நிகழ்ச்சியின் இறுதியில் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறது.

மேலும் தளத்தின் முகப்பு பக்கத்திலேயே முன்னணி பங்கேற்பாளர் மற்றிய விவரங்களும் இடம் பெறுகிறது.

வெளிநாட்டு திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சி போன்றவறை பார்த்து ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் விருந்தளிக்கும் என்றே சொல்ல வேண்டும்.பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ,வீடியோ இடம் பெறுவதால் அவற்றின் மூலம் புதிய தகவல்களை பெற முடியும்.உதாரணத்திற்கு ஜப்பானிய மொழியை கற்றுத்தரும் வீடீயோ வகுப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன.ஜப்பனிய மொழியை கற்க விரும்புகிறவறகள் சப்டைட்டில் உதவியோடு களத்தில் இறங்கலாம்.

அதே போல செய்தி படங்கள்,குறும்படங்கள் புதிய அனுபவத்தை தர வல்லது.

இது வரை 100 கோடி விட்டியோகள் பார்த்து ரசிக்கப்பட்டு 15 கோடி வார்த்தைகளுக்கெ மேல் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்த தளம் தெரிவிக்கிறது.

 எல்லைகளை கடந்து பொழுதுபோக்கை அளிக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று சொல்லும் இந்த தளம் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் சமூகத்தை உருவாக்கி இதனை நிரைவேற்றி வருகிறது.மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அருமையான பொழுதுபோக்கு காட்சிகளுக்கும் ரசிகரக்ளுக்கும் இடையே இருக்கும் மொழி என்னும் தடையையும் உடைத்தெறிந்து வருவதாக இந்ததளம் பெருமிதம் கொள்கிறது.

இதில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து தாங்களும் மொழி மாற்றம் செய்யலாம்.இல்லை என்றால் உலகம் முழுவதும் உள்ள படைப்புகளை சப்டைட்டில் உதவியோடு கண்டு களிக்கலாம்.

இணையதள முகவரிhttp://www.viki.com/

One response to “வீடியோக்களுக்கான விக்கிபீடியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s