டிவிட்டரில் சீறிய நல்ல பாம்பு.

விலங்கியல் பூங்காவில் இருந்து காணாமல் போன பாம்பு பேசத்துவங்கினால் எப்படி இருக்கும்?

அமெரிக்காவில் உள்ள பிரன்க்ஸ் விலங்கியயல் பூங்காவில் இருந்து காணமல் போன நல்ல பாம்பு இப்படி பேசத்துவங்கியது.அதோடு அந்த நல்ல பாம்பு தனது இருப்பிடம் பற்றியும் செயல்பாடு பற்றியும் தகவல்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.பூங்காவில் உள்ளவர்கள் காணாமல் போன பாம்பை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த நிலையில் நகர்வாசிகள் பாம்பின பயணகுறிப்புகளை ஆர்வத்தோடு பின்தொடர்ந்து கொண்டிருந்தனர்.

பாம்பு எப்படி பேசும்? என்று ஆச்சர்யமோ குழப்பமோ கொள்ள வேண்டாம்.காணாமல் போன அந்த பாம்பு பேசவில்லை.ஆனால் டிவிட்டர் செய்தது.அதாவது குற்ம்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் தனது எண்ணங்களை வெளியிட்டு வந்தது.

பாம்பு எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க வேண்டாம்.காணாமல் போன அந்த பாம்புவுக்காக யாரோ ஒருவர் டிவிட்டர் செய்யத்துவங்கினார்.பாம்பின் பயணதை கற்பனையாக விவரித்த இந்த பதிவுகள் தான் இணைய உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து அந்த பாம்பையு பிரபலமாக்கியது.

பிரான்க்ஸ் விலங்கியல் பூங்கா அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.இங்குள்ள ரெப்டைல் இல்லத்தில் எகிப்தில் காணப்படும் நல்ல பாம்பு ஒன்றும் வளர்க்கப்பட்டு வந்தது.சமீபத்தில் இந்த பாம்பு காணாமல் போனது.

இந்த நல்ல பாம்பு காணாமல் போனது அதற்கும் நல்லதல்ல;நகரத்து மக்களுக்கும் நல்லத்தல்ல என்னும் பரபர்ப்போடு பூங்கா நிர்வாகிகள் அத்னை தேடத்துவங்கினர்.அந்த பாம்பு கொடிய விஷம் கொண்டது என்பதால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்னும் எண்ணத்தில் பாம்பு காணாமல் போன செய்தியை நிர்வாகிகள் வெளியிட்டனர்.மேலும் எகிப்து நாட்டில் உள்ள பருவநிலைக்கு பழகிய அந்த பாம்பு பூங்காவில் அதன் இருப்பிடப்பகுதியை விட்டு வெளியேறினால் உயிர் பிழைப்பது கடினம் என்ற கவலையும் அவர்களுக்கு இருந்த்து.

எப்படியும் ரெப்டைல் இல்ல பகுதியை விட்டு எங்கேயும் சென்றிருக்காது,அங்கு தான் எங்காவது பதுங்கியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தேடலில் ஈடுபட்டிருந்தனர்.

பாம்பு காணாமல் போய்விட்டதாமே என்று நியூயார்க மக்கள் பரபர்ப்பாக பேசிக்கொண்டனர்.இந்த நிலையில் தான் குறும்புக்காரர் ஒருவர் டிவிட்டரில் பிரான்க்ஸ்ஜூஸ்கோப்ரா என்னும் பெயரில் டிவிட்டர் கணக்கை துவக்கி பாம்பு டிவிட்டர் செய்வது போலவே பதிவுகளை வெளியிடத்துவங்கினார்.

நான் நல்ல பாம்பு பேசுகிறேன் என்றெல்லாம் இல்லாமல் முதல் பதிவு இயல்பானதாகவே இருந்தது.விலங்குகள் தப்பிச்செல்லும் திரைப்படமான மடகாஸ்கர் படத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்த சில பதிவுகள் வெளியானதுமே டிவிட்டர் வெளியில் இந்த டிவிட்டரில் பேசும் பாம்பு பலரது கவனத்தை ஈர்த்தது.பலரும் இந்த பாம்பை பின்தொடர்த்துவங்கினர். அதாவது டிவிட்டரில் அதன் பதிவுகளை படிக்கத்துவங்கினர். இதற்குள் காணாமல் போன பாம்பு டிவிடர் செய்கிறது என்னும் செய்தி நாளிதழ்களில் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மேலும் பலர் பாம்பின் பின்தொடர்பாளராக மாறினர்.அடுத்த சில நாட்களிலேயே 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாம்பின் பயணத்தை பின்தொடரத்துவங்கியிருந்தனர்.

அவர்களை எல்லாம் கவர்ந்திழுக்கும் வகையில் பாம்பும் சுவையான பதிவுகளை வெளியிட்டு வந்தது.அதாவது பாம்பின் சார்பாக பதிவிட்டு வந்த நபர் நகைச்சுவை மின்ன வெளியிட்டு வந்தார்.உண்மையிலேயே காணாமல் போன பாம்பு பேசினால் எப்படி இருக்குமோ அது போலவே அமைந்திருந்த அந்த பதிவுகள் பின்தொடர்பாளட்ர்களை ரசித்து சிக்க வைத்தன.

உதாரணத்திற்கு இந்த செய்தி பரபரப்பை உண்டாக்கிய இரண்டாம் நாள் வெளியான பதிவு கம்புயூட்டரும் இல்லாமல் இண்டெர்நெட்டும் இல்லாமல் ஒரு பாம்பு எப்படி டிவிட்டர் செய்ய முடியும் என்று பலரும் கேட்கின்றனர்,ஐபோன் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டனர் என்று ரசிக்க வைத்தது.

அடுத்த பதிவு ,எனக்கு போர்சுகீசிய மொழி தெரியும் ,ஆனால் கொஞ்சம் பிரான்க்ஸ் வாடையோடு பேசுவேன் என்று தெரிவித்தது.

இன்னொரு பதிவு நியூயார்க்கில் நல்ல சைவ ஓட்டல் எங்கே இருக்கிறது தெரியுமா என்று பாம்பு கேட்கும் வகையில் இருந்தது.

இதனிடையே பாம்பு நியூயார்க் பங்கு சந்தையிலும் எட்டிப்பார்த்து அந்த அனுபவத்தை பதிவிட்டது.அதற்கு முன்பாக கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று என்னைப்பற்றி  எல்லோரும் தவறான அபிப்ராயம் கொண்டுள்ளனர்,ஆனால் நான் விஷம் கொண்ட பாம்பு தானே தவிர ஆபத்தான பாம்பு இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தது.

நியூயார்க் டாக்சிகளில் ஏறுவது எப்படி ?ஏன் என்றால் நான் வெள்ளையினம் இல்லையே என்றும் அந்த பாம்பு நிறவெறியை இடித்துக்காட்டியது.

காணாமல் போன பாம்பு நிஜமாகவே டிவிட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அது போலவே பாம்பு சார்பில் பதிவான கருத்துக்களும் அமைந்திருந்ததால் பாம்பின் டிவிட்டர் தடத்தை பின்தொடர்ந்தவர்களும் அதனோடு ஒன்றிப்போயினர்.

நியூயார்கில் உள்ள கண்காட்சிக்கு போனது,நட்சத்திர ஓட்டலின் ஜன்னலில் இருந்து அழகியின் மார்பகத்தை பார்த்து ரசித்தது போன்ற அனுபவத்தையும் பாம்பு டிவிட்டர் செய்திருந்தது.

நியூயார்க்வாசிகளின் மனங்கவர்ந்த தொலைக்காட்சி தொடரான செக்ஸ் அண்டு சிட்டி பற்றியும் குறிப்பிட்டு அதில் வரும்சமந்தா.. ஆ நான் தான் என்றும் பாம்பு சீறிய‌து.
எனக்கு காமெடி பிடிக்குமா என இனி யாராவது கேட்டால் கடித்துவிடுவேன் என ஒரு பதிவில் பாம்பு தனது கடுப்பையும் வெளிப்படுத்தியது.இப்படி இந்த‌ கற்பனை பதிவுகளில் நகைச்சுவை இழையோடியது.

பரபரப்பான சம்பவம் அல்லது செய்தியை அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுப்பது இல்லையா அது போல தான்  எகிப்து நல்ல பாம்பு பிரான்க்ஸ் விலங்கியல் பூங்காவில் இருந்து காணாமல் போன சம்பவத்தை உந்துசக்தியாக கொண்டு முகம் தெரியாத அந்த நபர் பாம்பு பேசுவது போலவே டிவிட்டர் செய்து வந்தார்.

விளைவு பாம்புக்கு கிடைத்த பிந்தொடர்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் ,அதன் பிறகு இரண்டு லட்சத்தையும் கடந்தது.இத்தனைக்கும் பாம்பு 50 க்கும் மேற்பட்ட பதிவுகளையே செய்திருந்தது.ஆனால் அதற்குள் அது டிவிட்டர் உலகில் மிகவும் புகழ்பெற்றுவிட்டது.இதில் என்ன விநோதம் என்றால் பாம்பின் இருப்பிடமான பிரான்க்ஸ் விலங்கியல் பூங்காவின் டிவிட்டர் கணக்கிற்கு 6 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.ஆனால் பாம்பு மிகவும் விசுவாசத்தோடு பூங்கா டிவிட்டர் கணக்கை பின்தொடர்ந்தது.

இதனிடையே காஃணாமல் போன பம்பு கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக விலங்கியல் பூங்கா அறிவித்தது.பூங்காவில் பாம்பின் இருப்பிடமான ரெப்டைல் இல்லம் பகுதியிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போன பாம்பு தான் பிடிபட்டுவிட்டதே இனி இந்த டிவிட்டர் பொய் பாம்பின் ஆட்டம் முடிந்தது என்றே நினைக்கத்தோன்றும் .ஆனால் பாம்பின் சார்பாக டிவிட்டர் செய்த நபர் கற்பனை வளம் மிக்கவர் மட்டும் அல்ல மிகுந்த புத்திசாலியும் கூட என்பதை உணர்ந்த்தும் வகையில் தொடர்ந்து பாம்பின் சார்பாக டிவிட்டர் செய்தார்.ஆனால் தகுந்த மாற்றங்களோடு.

டிவொட்டர் செய்யத்துவங்கிய போது டிவிட்டர் கணக்கிற்கான அறிமுக‌த்தில் காணாமல் போன பாம்பு என குறிப்பிட்டிருந்தவர் இப்போது அந்த இடத்தில் ,தற்போது பிரான்க்ஸ் விலங்கியல் பூங்காவில் இருக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அதன் கீழே சுசரிதை குறிப்பில் நகரத்தை சுற்றிவிட்டு திரும்பி வந்திருக்கும் பாம்பு என குறிப்பிடட்டப்பட்டு அதன் இமெயில் முகவரியும் இடம்பெற்றிருந்தது.

உங்களில் பலர் நான் பிடிபட்ட விதம் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் ,நிலவுக்கும் பூமிக்கும் இடையே நான் கண்டுபிடிக்க்ப்பட்டேன் என்று பாம்பு விலங்கியல் பூங்காவிற்குள் இருந்தபடி விளக்கம் தருவது போல வெளியான பதிவு பின்தொட‌ர்பாளர்களின் ஆர்வத்தை தக்கவைக்கும் வகையில் அமைந்தது.

இது போலவே பாம்பு தொடர்ந்து சுவாரஸ்யமான பதிவுகளை வெளியிட்டு வருகிறது.

டிவிட்டரில் செல்வாக்கு மிக்க விலங்குகள் பட்டியலில் எனக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளதாக பாம்பு பெருமை பட்டுகொள்ளும் அளவுக்கு இந்த டிவிட்டர் கணக்கு பிரபலமானது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

டிவிட்டரை பயன்படுத்தி கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன.கொஞ்சம் படைப்பாற்றலும் கற்பனை திற‌னும் இருந்தால் டிவிட்டர் மூலம் எப்படு சுலபமாக புகழ் பெறலாம் என்பதற்கு இந்த பாம்பின் டிவிட்டர் பயணம் அழகான உதார‌ணம்.

இதற்கு முன்பாகவே பிலிப்பைன்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் வாக்கு என்ணும் இயந்திரத்தை டிவிட்டரில் பேச வைத்து பிரபலமாகியிருக்கிறார்.

பாம்பின் டிவிட்டர் முகவரி;http://twitter.com/bronxzooscobra

Advertisements

6 responses to “டிவிட்டரில் சீறிய நல்ல பாம்பு.

 1. அன்பின் சைபர்சிம்மன்

  இதனைப் படிக்கும் போதே ஆர்வம் அதிகமாகிறது. அங்கே டிட்டரில் படித்திருந்தால் எபாடி இருந்திருக்கும். இனி தொடர்வோம். பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. அன்பு நண்பரே
  இன்று தான் முதல் முறையாக உங்களது தளத்தைப் பார்த்தேன்.இணையம் குறித்த அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் . நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி
  நட்புடன்
  ப.சேர்முக பாண்டியன்

 3. Pingback: ஒலிம்பிக் காலி இருக்கை டிவிட்டர் செய்கிற‌து. | Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s