பூகம்பத்தில் பூத்த டிவிட்டர் புத்தகம்

ஒரு டிவிட்டர் செய்தியால் எத்தனையோ மாயங்களும் அற்புதங்களும் நிகழலாம்.இதற்கு சான்றாக பல சம்பவங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக ஜப்பானில் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான முயற்சி ஒரு டிவிட்டர் செய்தியாக துவங்கி, பின்னர் நல்லெண்ண அலைகளாக பரவி உலகம் முழுவதும் நேசக்கரங்களை ஈர்த்து அழகான புத்தகமாக உருவாகி இருக்கிறது. ஜப்பானியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புகிறவர்கள் இணையத்தின் மூலம் இந்த புத்தகத்தை வாங்கி நிதி உதவி செய்து வருகின்றனர். பேரழிவு நிகழ்வுகளுக்கு பிறகு உதவி கிடைப்பதில் இண்டர்நெட் எந்த வகையில் எல்லாம் உதவுகிறது என்பதற்கான உதாரணமாகவும் இந்த புத்தகம் அமைந்துள்ளது. பூகம்ப புத்தகம் அதாவது “குவாக் புக்’ இதுதான் அந்த புத்தகத்தின் பெயர். ஆசிரியர் என்று யாரும் இல்லாமல், எழுத்தாளர் யாரும் பின்னணியில் இல்லாமல் பங்கேற்பாளர்களின் ஆதரவோடு இந்த புத்தகம் உருவாகி இருக்கிறது. இந்த புத்தகம் உருவான விதம் மட்டும் நெகிழ்ச்சியானது அல்ல. அந்த புத்தகத்தின் உள்ளடக்கமும் உள்ளத்தில் உருக்கக்கூடியது. காரணம், பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளையும் அவர்கள் பாதிப்பை எதிர்கொண்ட விதத்தையும் இந்த புத்தகம் தனது பக்கங்களாக கொண்டு இருப்பதுதான். பூகம்பமும் அதனோடு கைகோர்த்து வந்த ஆழிப்பேரலையும் ஜப்பானின் வடமேற்கு பகுதியை புரட்டிப் போட்டு அங்கு இருந்தவர்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கியது. இதன் பாதிப்பை வார்த்தையில் விவரிக்க முடியாது. எனினும் இந்த நெருக்கடியையும் சோகத்தையும் எதிர்கொண்டவர்கள் அதனை தங்களது வார்த்தையில் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது அனுபவத்திற்கேற்ப வரிகளாக, புகைப்படங்களாக, வீடியோ காட்சிகளாக இந்த பதிவுகளை சமர்ப்பித்தனர். இவற்றின் தொகுப்பாக பூகம்ப புத்தகம் உருவாகி உள்ளது. இதற்கென தனி இணையதளம் அமைக்கப்பட்டு அந்த தளத்தின் மூலமாக புத்தகம் மின்னூல் வடிவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த புத்தகத்தை விற்பனை செய்வதின் மூலம் கிடைக்கும் தொகையானது பூகம்ப நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் முக்கிய பங்காற்றும் ஜப்பானிய செஞ்சிலுவை அமைப்புக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அச்சு வடிவிலும் இந்த புத்தகம் கொண்டுவரப்பட உள்ளது. ஜப்பானில் வசிக்கும் இணைய வாசி ஒருவரின் முயற்சியால் இந்த புத்தகம் உருவாகி உள்ளது. அவர் மேன் இன் அபிகோ எனும் பெயரில் டிவிட்டர் செய்து வரும் அவர், மார்ச் 18ம் தேதி டிவிட்டர் செய்தியாக ஒரு எளிமையான வேண்டுகோளை விடுத்தார். ஜப்பானில் பூகம்பம் உலுக்கிய சில வாரங்களுக்கு பிறகு வெளியான அந்த செய்தி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. பூகம்பம் உங்கள் வாழ்க்கையை மாற்றியதா, பூகம்பம் தொடர்பானசெய்தி உங்களை எப்படி உணரச் செய்தது? போன்ற அனுபவங்களை அந்த பதிவு கேட்டிருந்தது. இந்த பதிவு வெளியான பிறகு பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள துவங்கினர். நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளத்தை உலுக்கும் அனுபவங்களை வெளியிட்டதோடு பாதிப்பை உணர்ந்தவர்கள் நெகிழ்ச்சியான பதிவுகளையும் வெளியிட்டிருந்தனர். இந்த பதிவுகள் உலகம் முழுவது முள்ள இணையவாசிகளின் பங்களிப்போடு பிழை திருத்தப்பட்டு தொகுக்கப்பட்டது. பின்னர் அழகான புத்தகமாக உருவானது. புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்புகளோடு இந்த மின்னூல் பூகம்ப பாதிப்பை பேசியது. இந்த புத்தகத்திற்கு பரவலான வரவேற்பு கிடைத்ததோடு இதனை மேலும் பிரபலமாக்க தனியே பேஸ் புக் பக்கம் அமைக்கப்பட்டது. அதேபோல யூடியூப்பிலும் இதற்காக தனியே ஒரு சேனல் உருவாக்கப்பட்டது. டிவிட்டர் உலகின் நட்சத்திரமாக கருதப்படும் ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் ப்ரை போன்றோர் இந்த முயற்சியை ஆதரித்து டிவிட்டர் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. இதனால் விளம்பரச் செலவு இல்லாமலேயே இந்த புத்தகம் இணைய உலகில் வெளியாகி பலரை சென்றடைந்துள்ளது.

முகவரி: http://www.quakebook.org/

Advertisements

2 responses to “பூகம்பத்தில் பூத்த டிவிட்டர் புத்தகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s