டிவிட்டரில் வரலாற்று நாயகர்கள்.

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எப்படி எழுத்து திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த முடியுமோ அதே போல குறும்பதிவுகளிலும் திறமையை பளிச்சிட செய்யலாம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சொல்வது போல டிவிட்டரின் 140 எழுத்து வரையரைக்குள்ளும் கைவண்ணத்தை வெளிப்படுத்தி குறும்பதிவுகளை சுவாரஸ்யமானதாகவும் கருத்தை கவரும் வகையிலும் வெளியிட்டு முத்திரை பதித்தவர்கள் இருக்கின்றனர்.

இதற்கு அழகான உதாரணம் தேவை என்றால் ஹிஸ்டாரிகல் டிவீட்ஸ் தளத்தை சொல்லலாம்.இந்த தளத்தின் பின்னே உள்ளே ஐடியா அடிப்படையில் மிகவும் எளிதானது,ஆனால் சுவாரஸ்யமானது .கேலியும் கிண்டலுமாக அதனை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அதைவிட சுவாரஸ்யமானது.

வரலாற்று நாயகர்கள் டிவிட்டர் செய்தால் எப்படி இருக்கும்?என்னும்  கற்பனை தான் இந்த தளத்தின் அடிப்படை.ஆபிரகாம் லிங்கனில் துவங்கி,ஹிட்லர்,எழுத்தாளர் மார்க் டுவைன்,நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி என வராலாற்று நாயகர்கள் அனைவர் சார்பிலும் குறும்பதிவுகள் இந்த தளத்தில் வெளியாகியுள்ளன.

அந்த கால தலைவர்கள் குறும்பதிவுகளை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்பதே நல்ல கற்பனை தான்.அதில் மேலும் சுவையை கூட்டும் வகையில் அந்த பதிவுகளை சற்றே நகைச்சுவை கலந்து சரியான நையாண்டியாக தோன்ற செய்திருப்பது தான் இந்த தளத்தின் தனிச்சிறப்பு.

அதாவது தலைவர்களையே கலாய்ப்பது போல அவர்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் அந்த தலைவர்களின் சிந்தனையும் பேச்சும் எப்படி இருக்கும் என்பது போல இந்த குறும்பதிவுகள் அமைந்துள்ளன.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் கருப்பர்களின் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட மார்டின் லூதர் கிங்கின் பெயரில் வெளியாகி இருக்கும் குறும்பதிவு ,தூக்கம் பற்றி எழுதுவதற்கான டைரியை வாங்கியுள்ளேன்,நிறைய கணவுகள் வருகின்றன,ஆனால் அவற்றை குறித்து வைக்க மறந்து விடுகிறேன் என்று தெரிவிக்கிறது.

கிங்கை அறிந்தவர்களுக்கு வரது வரலாற்று சிறப்பு மிக்க உரையில் இடம்பெற்றிருந்த இதயம் தொட்ட எனக்கு ஒரு கணவு உண்டு என்னும் வாசகத்தை நிச்சயம் அறிந்திருப்பார்கள்.அப்போது ஒவ்வொரு அமெரிக்கரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வாசகம் இன்றளவும் மேற்கோள் காட்டப்படும் போதெல்லாம் உள்ளத்தை தொடத்தவறுவதில்லை.

பொன்மொழிகளை எல்லாம் விட சிறந்த இந்த வாசகத்தை கேலிக்குளாக்குவது கொஞ்சம் வேதனையானது என்றாலும் இதில் உள்ள நையாண்டியை ரசிக்காமல் இருக்க முடியாது.

அதே போல நிலவில் கால் வைத்து சாதனை படைத்த நீல் ஆம்ஸ்டிராங் சார்பிலான குறும்பதிவு ,சக விண்வெளி வீரரான பஸ் ஆர்டினிடம் ‘செட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன்,அதாவது நிலவுக்கு…” என்பது போல அமைந்துள்ளது.நிலவில் கால் வைத்த நிகழ்வே ஒரு மோசடி வேலை என்று ரு கருத்து இருப்பதை அறிந்தவர்களுக்கு இந்த கிண்டல் வாசகம் புன்னகையை வர வைக்கும்.

உலகையே வெல்லத்துடித்த மாவீரன் ஆலெக்ஸாண்டர் ‘எனது சாதனைகளை பார்த்துவிட்டு அலெக்ஸாண்டர் ரொம்ப நல்லவர் என்று புகழ்கின்ரனர்.இனி ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சொல்வது போல வெளிப்படுகிறது.மிக பொருத்தமாக ஆங்கிலத்தில் ஆலெக்ஸாண்டர் தி டிவீட என்னும் பெயரில் வெளியாகியுள்ள இந்த பதவி அவரது வெற்றி வெறியை அழகாக பகடி செய்கிறது.

உலகையே ஆட்டிப்படைத்த ஹிட்லர் பெயரிலான குறும்பதிவு முகத்தோற்றம் பற்றிய காதலியின் தவறான எண்ணத்தை போக்குவதற்காக துண்டு மீசை வளர்ப்பதாக தெரிவிக்கிறது.

இதைவிட நகைச்சுவை சொட்ட எழுதிய எழுத்தாளர் மார்க் டுவைன் பெயரிலான பதிவு இன்னும் கூட சுவையானது.இன்னும் நேரம் இருந்தால் ஒரு அழகான குறும்பதிவை எழுதியிருப்பேன் என்று கூறுவது போல உள்ளது.

இப்படி ஒவ்வொருவரின் தனித்தன்மையை நினைவுபடுத்தி அதனை கிண்டல் செய்யும் வகையில் பதிவுகள் அமைந்துள்ளன.

வரலாற்று சம்பவங்களையும் அதன் நாயகர்களையும் அறிந்தவர்கள் இந்த கிண்டலை புரிந்து கொண்டு ரசிக்கலாம்.

ஆனால் மகாத்மா பற்றிய பதிவு நிச்சயம் வேதனையை ஏற்படுத்தும்.சில பதிவுகள் வரலாற்று நாயகர்களை இப்படி கேலிக்குள்ளாக்குவது சரியா என முகஞ்சுளிக்க வைக்கலாம்.ஆனால் இவற்றின் பின்னே உள்ளே கற்பனைத்திறன் மற்றும் நகைச்சுவை ரசிக்கும்படி இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு கார்ட்டூனை ரசிக்கும் மனதோடு இந்த பதிவுகளை அணுகினால் இதில் உள்ள நகைச்சுவையை ரசிக்கலாம்.

இந்த பதிவுகள் எல்லாமே டிவிட்டரில் வெளியாகவில்லை.டிவிட்டர் போன்ற தோற்றத்தில் அதே பாணியில் உருவாக்கப்பட்டு இதற்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தன.அதிலும் அழகான ஓவியங்களோடு வெளியாயின.

இந்த தளத்துக்கான அறிமுகத்திலேயே நையாண்டியையும் கிண்டலையும் காணலாம்.டிவிட்டர் எல்லா காலத்திலும் உண்டு என்பதை இந்த தளம் உணர்த்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவலாக கவனத்தையும் விமர்சனைத்தையும் ஈர்த்த இந்த குறும்பதிவுகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளியாகியுள்ளது.

குறும்பதிவுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாகவும் விளங்கும் நித பதிவுகளை ஹிஸ்டாரிகல் டிவீட்ஸ் தளத்திலும் படித்து ரசிக்கலாம்.பிரபலமானவை,சமீபத்தியவை என பல்வேறு தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளதோடு வரலாற்று கால கட்டத்தின் அடிப்படையிலும் அவற்றை படித்து மகிழலாம்.

இணையதள முகவரி;http://historicaltweets.com/

Advertisements

One response to “டிவிட்டரில் வரலாற்று நாயகர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s