தாய்மொழி காக்கும் டிவிட்டர்

ஹவுசா,செட்ஸ்வனா,மவோரி,சமோரு,அகான்,யோருபா….இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா?

ஊர்களின் பெயரோ அல்ல‌து விநோதமான தேசத்தி உள்ள மனிதர்களின் பெயர்களோ அல்ல,இவை எல்லாமே உலகில் உள்ள மொழிகளின் பெயர்கள் தான்.ஆனால் ஆங்கிலம் போல ஸ்பானிஷ் போல ,தேமதுர தமிழ் போல உலகம் அறிந்திராத மொழிகள்.இவற்றில் சில அழியும் நிலையில் இருப்பவை.பல குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களால் பேசப்படுபவை.ஒரு சில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகம் பேசப்படுபவை.

உதாரணத்திற்கு ஹவுசா மொழியையே எடுத்து கொள்ளுங்கள்,தமிழ் தலைமை தாங்கும் திராவிட மொழிக்குடும்பம் போல நைஜீரியா,நைஜர்,சாட் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படும் சாடிய மொழி குடும்பத்தின் அங்கமாக விளங்குவதாக விக்கிபீடியா கட்டுரை அறிமுகம் செய்கிறது.2.5 கோடி பேர் இதனை தாய்மொழியாககொண்டுள்ளனர்.

ஸ்வனா என்று உச்சரிக்கப்படும் செட்ஸ்வனா தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ளவர்களால் பேசப்படும் மொழி.பன்டு மொழி குடும்பத்தை சேர்ந்தது.லத்தீன் எழுத்துக்களை கொண்டு எழுதப்படும் மொழி.பெரும்பாலும் போஸ்ட்வானா நாட்டு மக்களால் பேசப்படுகிற‌து.

மவோரி நியூசிலாந்தில் மவோரி இன மக்களால் பேசப்படும் மொழி.

லிங்காலா, டேடுன்,சோர்சு என்று இன்னும் பல பெயர் தெரியாத மொழிகள் உலகில் உள்ளன.

அநேகமாக விக்கிபீடியாவில் மட்டுமே இந்த மொழிகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.அல்லது உலக் மொழிகள் பற்றி ஆய்வு செய்து வரும் மொழியியல் வல்லுனர்கள் மட்டுமே இவை பற்றி அறிந்திருப்பார்கள்.

எல்லாம் சரி இப்போது இந்த உலகம் அறியாத மொழிகள் பற்றி குறிப்பிடக்காரணம் என்ன என்று கேட்கலாம்.இந்த மொழிகளில் எல்லாம் யாரேனும் டிவிட்டர் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் அந்த டிவிட்டர் பதிவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மொழியியல் ஆரவ்ம் கொண்ட கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியர் ஒருவர் இந்த மொழிகளை வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதுமே விஷயம்.

அவர் உருவாக்கியுள்ள இன்டிஜினஸ் டிவீட்ஸ் இணையதளம் பரவலாக அறியப்படாத மொழிகளில் வெளியாகும் டிவிட்டர் பதிவுகளை தொகுத்து அளிக்கிறது.இதன் மூலம் இந்த மொழிகளை பேசுபவர்கள் டிவிட்டர் பதிவுகள் வாயிலாக தங்களுக்குள் தொடர்பு கொண்டு தங்கள் தாய்மொழி வளர்க்கவும் உதவுகிறது.

டிவிட்டர் என்றதுமே அதன் அறிவிக்கப்படாத தாய்மொழியான ஆங்கிலம் தான் நினைவுக்கு வரும்.ஆங்கிலம் தவிர ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளும் டிவிட்டரில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழின் நிலையும் மோசமில்லை.டிவிட்டரின் அதிகாரபூர்வ உதவி இல்லாமலேயே தமிழில் குறும்பதிவிடுபவர்கள் கணிசமாக உள்ளனர்.இவ்வளவு ஏன் முற்றம் என்னும் பெயரில் தமிழுக்கு என்று தனி டிவிட்டர் சேவையும் உள்ளது.

மற்ற மொழிகளை பொருத்தவரை  ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்க‌ள் அந்த மொழியிலேயே டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஹவுசா மொழியில் 299 டிவிட்டர் பதிவாளர்கள் இருக்கின்றனர்.ஸ்வனாவுக்கு 314 குறும்பதிவாளர்கள் இருக்கின்றனர்.சமோரு என்னும் மொழியில் மூன்றே மூன்று குறும்பதிவாளர்கள் இருக்கின்றனர்.அகான் மொழியில் 35 குறும்பதிவாளர்கள் உள்ளனர்.கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கருதப்படும் ஆஸ்திரேலியாவில் உள்ள சொற்ப மக்களால் பேசப்படும் கமில்லாரி மொழியில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று ஒரே ஒருவர் டிவிட்டர் செய்து வருகிறார்.

இப்போது உங்களை கமில்லாரி மொழி அறிந்தவராக கற்பனை செய்து கொள்ளுங்கள்.நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வேறு ஒரு நாட்டில் குடியேறி வசிப்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.இணையம் என்றாலே ஆங்கிலம் தான் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் உங்கள் மொழியில் ஒருவர் டிவிட்டர் செய்கிறார் என்றால் நீங்கள் அகமகிழ்ந்து போய்விட மாட்டீர்கள்.உடனே அந்த டிவிட்டர் கண‌க்கை உற்‌சாகத்தோடு பின்தொடர்ந்து அவரோடு உங்கள் ழொயிலேயே தொடர்பு கொண்டு மகிழ்வீர்கள் அல்லவா?

இத்தகைய மகிழ்ச்சியையும் ,தங்கள் தாய்மொழியில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி த‌ரும் நோக்கத்தோடு தான் பேராசிரியர் இன்டிஜினஸ் டிவீட்ஸ் தளத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் டிவிட்டர் பதிவுகளை தேடி கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல.ஆனால் வெகு சிலர் மட்டுமே அறிந்த மொழிகளில் டிவிட்டர் செய்பவர்களை கண்டு பிடிப்பது எப்படி?எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் பரவலான மக்களை சென்றடைய விரும்பினால் ஆங்கிலத்திலேயே டிவிட்டர் செய்து வருகின்றனர்.

ஆனால் தாய்மொழியில் ஆர்வம் கொண்ட சிலர் தங்கள் மொழியிலேயே டிவிட்டர் செய்வதும் உண்டு.இணையத்தின் மூலமாக மொழியை வாழவைக்கும் உத்வேகத்தோடு தாய்மொழியிலேயே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து  கொள்கின்றனர்.ஆனால் இந்த பதிவுகளை அந்த மொழி பேசும் மற்றவர்கள் அறிந்து கொள்ள வழி வேண்டமா?

இன்டிஜினஸ் டிவீட்ஸ் இந்த வழியாக அமைந்துள்ளது.பேராசிரியர் கெவின் ஸ்கேன்னல் தனது மொழி ஆர்வம் மற்றும் அறிவை பயன்படுத்தி பரவலாக அறியப்படாத மொழிகளில் வெளியாகும் டிவிட்டர் பதிவுகளை தேடிப்பிடித்து அவற்றை இந்த‌ தளத்தில் தொகுத்து அளிக்கிறார்.

தளத்தின் முகப்பு பக்கத்தில் வரிசையாக மொழிகளும் அதன் அருகே அந்த மொழியில் டிவிட்டர் செய்பவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.அந்த மொழிகளில் மொத்தம் உள்ள டிவிட்டர் பதிவுகள்,இது வரை வெளியான் குறும்பதிவுகளின் என்ணிக்கை மற்றும் அந்த‌ மொழியின் முதல் குறும்பதிவு ஆகிய விவரங்களூம் இடம்பெற்றுள்ளன.பிரபலாமாக உள்ள தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதோடு மற்ற மொழிகளி டிவிட்டர் பஹிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் வசடியும் உள்ளது.

குறைவான எண்ணிக்கையில் பேசப்படும் மொழியை தாய்மொழியாக‌ கொண்டவர்கள் இந்த‌ பட்டியலை பார்த்து தங்கள் மொழி குறும்பதிவுகளை கண்டுபிடித்து அவ‌ற்றை பின்தொடரலாம்.அவர்க‌ளோடு தங்கள் மொழியிலேயே தொடர்பு கொண்டு இணையத்தில் தங்கள் மொழிக்கான குழுவை ஏற்படுத்தி கொள்ளலாம்.இந்த பட்டியலில் இடம்பெறாத பதிவுகள் இருந்தால் அதனை சம‌ர்பிக்கவும் செய்யலாம்.

35 மொழிகளோடு துவங்கிய இந்த பட்டியல் த‌ற்போது 68 மொழிகளை கொண்டுள்ளது.500 க்கும் மேற்பட்ட அறிய மொழிகளின் வார்த்தைகளின் பட்டியலை கொண்டு சாப்ட்வேர் ஒன்று அந்த மொழிகளில் வெளியாகும் டிவிட்டர் பதிவுகளை அடையாளம் கண்டு இதில் பட்டியலிடுகிறது.

சிறுபான்மை மொழிகளை பேசுபவர்கள் இணையத்தின் மூலம் பரஸ்பர்ம் இனம் கண்டு தங்களூக்குள் உறவை வளர்த்து கொண்டு மொழியை வாழ வைப்பதே தனது நோக்கம் என்கிறார் இந்த தளத்தை உருவாக்கியுள்ள பேராசிரியர் ஸ்கான்னல்.

இந்த வாயிலாக தாய்ம்ழொயில் டிவிடர் செய்பவர்களை அறிந்து கொள்வதோடு அவர்களும் தாய்மொழ்யிலேயே டிவிட்டர் செய்யும் ஊக்கமும் ஏற்படும் என்கிறார் அவர்.இந்த தளம் டிவிட்டரில் மொழி பயன்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு தங்கள் மொழியின் டிவிட்டர் இருப்பு பற்றி அறிந்திறாதவர்களுக்கு அது பற்றிய தகவல் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த தளத்துடன் வலைப்பதிவு ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.அதில் இந்த தளத்தின் முன்னேற்றம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.பொதுவாக இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கும் வெல்ஷ் போன்ற மொழிகள் கூட டிவிட்டரில் குறைவான பதிவாளர்களை கொண்டிருப்பது வியப்பை அளிப்பதாகவும் பேராசிரியர் கூறுகிறார்.

டிவிட்டரின் வீச்சு மற்றும் ஆற்றலை பயன்படுத்திகொண்டு மொழி வளர்க்கும் அருமையான தளம் என்று இதனை பாராட்டலாம்.

இணையதள முகவரி.http://www.indigenoustweets.com/

Advertisements

6 responses to “தாய்மொழி காக்கும் டிவிட்டர்

    • twitter is a microbloging service.you can use it to share anything on twitter.it can be news.it can be personel info.it can be comment.it has 140 leter limit.you can get people to folow u on twitter.you can join twitter by signing it.

      thank simman

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s