பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில் நுழைகின்றனர். முகப்பு பக்கத்தை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு தொழில்நுட்பமோ பகுதியையோ அல்லது விளையாட்டு பகுதியையோ இல்லை சினிமா பகுதியையோ கிளிக் செய்து அதனுள்ளே நுழைந்த‌ விடுகின்ற‌னர்.

எல்லோருக்கும் இத்தகைய அபிமான பகுதிகள் இருக்கின்ற‌ன.மற்ற பகுதிகளை பொருத்தவரை அவர்கள் கண்ணை கட்டி கொண்டு இருந்து விடுகின்றனர்.இப்போது சமூக மீடியா யூகத்தில் செய்தி தளங்களின் பக்கம் போகாமலேயே குறிச்சொற்களின் அடைப்படையில் தங்களூக்கான செய்திகளை மட்டுமே படித்து கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருக்க செய்தி பிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் துறைகளில் தீனி போடுவதற்கென்றே பிரத்யேக தளங்கள் இருக்கின்றன.அந்த வகையில் பசுமை செய்திகளை விரும்பி தொடர் விரும்புகிறவர்களுக்கு பசுமை விருந்து படைக்கும் வகையில் பிஃபிரிநியூஸ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமான செய்தி தளம் போல காட்சி அளித்தாலும் இதில் இடம்பெறுள்ள செய்திகள் எல்லாமோ பசுமை சார்ந்தவை.சுற்றுசூழல் ஆர்வலர்களால் பரவலாக விவாதிக்கப்படும் புவி உஷ்ணமாத‌ல்,சூர்ய மின்சக்தி,மாசு இல்லாத எரிசக்தி போன்ற தலைப்புகளீல் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுடப்ம் போன்ற தனி பிரிவுகளும் உள்ளன‌.அதில் நுழைந்தாலும் பசுமை மயம் தான்.புகழ்பெற்ற நாளிதழ்கள்,வலைப்பதிவுகள்,செய்தி தளங்கள் ஆகியவற்றில் இருந்து இணைப்புகள் தரப்பட்டுள்ளன.செய்திகள் மட்டும் அல்ல வீடியோ இணைப்புகளும் இருக்கின்றன.

சுற்றுச்சுழல் என்றால் சாதரணமாக நினைத்துவிடுபவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் 256 பசுமை சார்ந்த தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.எல்லாமே ரியல் டைமில் எடுத்து தரப்படுகின்றன.அதாவது உடனுக்குடன் திரட்டித்தரப்படுகின்றன.
சுற்றுசூழல் ,பசுமை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் தகவல் அட்சயப்பாத்திரமாக விளங்கும்.பசுமை ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

அதற்கேறப் பசுமை விஷயங்களுக்கான தேடியந்திரமும் இருக்கிறது.சுற்றுச்சுழல் உலகில் முக்கிய தலைப்பாக கருதப்படும் மின்சார கார் போன்றவை குறித்தெல்லாம் தேடி தகவல் பெறலாம்.

சுற்றுச்சுழலில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த  தளத்தின் பக்கம் சென்றால் பசுமையான் விஷயங்களில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தெளிவை பெறலாம்.

இணையதள முகவரி;http://bfreenews.com/bfn/home?n=1

Advertisements

One response to “பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s