செல்லே மெட்டை கேளு பாட்டை சொல்லு.

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டியலில் ஷசாம் செயலியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக இசை பிரியர்கள் இந்த செயலியை பற்றி அறிந்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.இந்த செயலி அப்படி என்ன அற்புதத்தை செய்கிறது என்றால் மெட்டை கேட்டவுடன் பாட்டை சொல்லி விடுகிறது தெரியுமா?

சில நேரங்களில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ திடிரென புதிய பாடல் ஒன்றை கேட்டு லயித்து நிற்பீர்கள் அல்லவா?அந்த பாட்டு யார் பாடியது, எந்த படத்தில் வருவது என்று தெரியாமல் மனம் அலைபாயும் அல்லவா?

இது போன்ற நேரங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?அருகே உள்ள நண்பர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் அந்த பாட்டை பற்றி விசாரித்து பார்க்கலாம்.ஆனால் உங்களை போலவே அவர்களுக்கும் அந்த பாடல் பற்றிய தகவல் தெரியாவிட்டால் வீட்டிற்கு வந்த பின் அந்த பாடல் எந்த பாடல் என்று விசாரித்து அறிய முற்படலாம். தொடர்ந்து நண்பர்களிடம் பாடல் வரியை சொல்லி அல்லது பாடக்காண்பித்து தேடலை தொடர் வேண்டியிருக்கும்.

இந்த தேடலுக்கு முடிவு கட்டி எந்த பாடலை கேட்டாலும் அந்த பாடல் பற்றிய தகவல்களை உடனடியாக தரக்கூடியது தான் ஷாசம் செயலி.

இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் பாடலை கேட்கும் போது பாடல் ஒலி வரும் திசையில் செல்போனை உயர்த்தி காண்பித்தால் போதுமானது.அதன் பிறகு செல்போனை பார்த்தால் அந்த பாடலின் வரி மற்றும் அதனை பாடியவர் யார் என்ற விவரத்தை செயலி தெரிவிக்கும்.விரும்பினால் அந்த பாடலை அப்படியே ஐடியூன்ஸ் மூலம் வாங்கவும் செய்யலாம்.

இப்படி எந்த பாடலை அறிய வேண்டும் என்றாலும் சரி ஷாசம் செயலியை இயக்கினால் போதுமானது,அது அந்த பாட்டை இனம் காண்பதோடு அதன் சுருக்கமான ஜாதகத்தையே தெரிவித்துவிடும்.

ஷாசன் இந்த அற்புதத்தை எப்படி சாத்தியமாக்குகிறது என்றால் அதன் வசம் 80 லட்சத்துக்கு மேற்பட்ட பாடல்களின் விவரங்கள் இருக்கிறது.எந்த பாடலை ஒலிக்க செய்தாலும் அந்த பாடலை இந்த பாடல் நூலகத்தில் இருந்து தேடிப்பார்த்து அதன் விவரத்தை எடுத்து தருகிறது.

ஷாசம் ஒவ்வொரு பாடலுக்குமான கைரேகை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதன் தனித்தன்மையாக விளங்கும் குறிப்புகளை சேர்த்து வைத்துள்ளது.இந்த கைரேகையை தான் பாடல் நூலகத்தில் தேடிப்பார்த்து எடுத்து தருகிறது.பாடல்களை கனிதவியல் சமன்பாடாக மாற்றி அக்குவேராக ஆணியாக பிரித்து அலசி ஆராய்ந்து அதன் கைரேகையை இந்த செயலி கண்டறிகிறது.

இப்படி சில வரிகளில் சுலபமாக சொல்லி விட்டாலும் ஷாசம் செயலி பின்னே உள்ள தொழில்நுட்பம் மிக சிக்கலானது.அதை விட இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க தேவைப்பட்ட ஆய்வும் உழைப்பும் அசாத்தியமானது.

கொஞ்சம் சுவாரஸ்யமான கதையும் கூட.செயலியை உருவாக்கிய நிறுவனத்தின் இணை நிறுவனரான அவேரி வாங் இதனை விவரிக்கிறார்.இவர் தான் இந்த செயலிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்.இதற்காக மனிதர் படாதபாடு பட்டிருக்கிறார்.

ஒரு நாள் மூன்று எம்பிஏ பட்டதாரிகள் இவரை அணுகி இந்த செயலிக்கான கருத்தாக்கத்தை சொல்லி இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி தர கேட்டிருக்கின்றனர்.வாங்கிறகு இதுவே விநோதமாக தோன்றியது.

பொதுவாக எல்லோரும் தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனடிப்பையிலேயே நிறுவனத்தை துவக்குவார்கள்.ஆனால் இந்த பட்டதாரிகளோ நிறுஅவனத்தை உருவாக்கி கொண்டு அதற்கான தொழிநுட்பம் வேண்டும் என் கேட்கின்றனரே என அவர் நினைத்து கொண்டார்.

எப்படியோ அவர் ஆய்வு பணிகளை துவக்கினார்.செல்போனில் பாடலை பதிவு செய்து அனுப்பி வைப்போம்.அதனை கேட்டு விட்டு பல்லாயிரக்கணக்கான பாடல்களோடு ஒப்பிட்டு பார்த்து அந்த பாடல் என்ன அன்பதை கண்டுபிடித்து சொல்லக்கூடிய வழியை உருவாக்கித்தரும் நோக்கோடு வாங் செயல்பட்டார்.

ஆனால் செல்போனில் வந்த பாடல் பதிவை கேட்டதுமே வெறுத்து போய்விட்டார்.காரணம் அந்த அளவுக்கு சில பாடல்களின் பதிவு மிகவும் மோசமானதாக இருந்தது.

பாட்ல்களின் பதிவு புரியாமல் இருந்ததோடு பின்னணியில் பதிவாகியிருந்த வேறு பல ஒசைகளும் குழப்பத்தை ஏற்பத்தின.முடிந்த வரை பின்னணி ஒலிகளை விலக்கி பாடலை மட்டும் பதிவு செய்ய முற்பட்டதால் அதன் துல்லியம் பாதிப்புக்குள்ளானது.

இதையெல்லாம் பார்த்த வங்கிற்கு தனது ஆய்வில் வெற்றி கிடைப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது.மற்றொரு முக்கியமான பிரச்சனையும் இருந்தது.பாடல் நூலகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பாடல்களில் நொடிப்பொழுதில் தேடிப்பார்த்து அந்த பாடலை கண்டுபிடிக்க கூடிய ஒரு புரோகிராமை அவர் உருவாக்க வேண்டும்.அந்த புரோகிராம் தவறு செய்யாததாக இருக்க வேண்டும் என்பதோடு பாடலை எந்த இடத்தில் கேட்டாலும் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கதாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் சாத்தியம் இல்லை என்று நினைத்தார்.இந்த நேரத்தில் தான் அவர் பாடல்களின் ஸ்பெக்ட்ரோகிராமை கவனித்தார்.ஸ்பெக்ட்ரோகிராம் என்பது பாடல்களுக்கான கனித வரைபடம் என்று வைத்து கொள்ளுங்கள்.பாடல்களில் உள்ள ஒலிக்குறிப்புகளின் அலைவரிசை விவரங்களை காண்பித்த இந்த வரைப்படத்தில் குறிப்பிட்ட இடங்களில் ஒலிகள் உச்சத்தை தொடுவதை கண்டுபிடித்தார்.ஆச்சர்யப்படும் வகையில் இந்த உச்ச புள்ளிகள் நூலக பாடலிலும் இருந்தன.செல்லி பதிவாகி வந்த பாடலிலும் இருந்தன.

அவ்வளவு தான் கண்டேன் பாடலை என உற்சாகமானார்.பாடலில் உள்ள மற்ற குறிப்புகளை எல்லாம் விட்டு விட்டு ஒலி உச்சத்தை உணர்த்தும் புள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டால் ஒவ்வொரு பாடலுக்குமான தனி அடையாளமாக விளங்கும் கைரேகையை உருவாக்கி விடலாம் என்னும் முடிவுக்கு வந்தார்.

இப்படி பிறந்தது தான் ஷாசம் செயலி..

Advertisements

4 responses to “செல்லே மெட்டை கேளு பாட்டை சொல்லு.

  1. ஆனால் நாம் ஏதோ ஒரு தமிழ் பாட்டை நினைத்து ஹம் செய்தால், இது அதன் மூலமான வேறு ஏதோ பாட்டைக் கொடுத்தால், காப்பி அடித்த இசையமைப்பாளருக்கு சங்கடம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s