இந்த இணைய‌தளத்தில் எதையும் ஒப்பிடலாம்.

இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இந்த கேள்விக்கான பதில் மூலம் இந்திய வங்கி துறை வரலாற்றையே சுருக்கமாக தருகிற‌து டிபரன்ஸ் பிட்வீன் இணையதளம்.அதைவிட முக்கியமாக இரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அழகாக உணர்த்தவும் செய்கிறது.

இத்தகைய வேறுபாட்டை புரிய வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.அதாவது எந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையும் விளக்குவது தான் இதன் குறிக்கோள்.

எந்த இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றுக்கு இடையிலான வேறுப்பாட்டை அறிய விரும்பினாலும் இந்த தளத்தை அணுகலாம்.உதாரணத்துக்கு ஆப்பிளின் ஐபோனுக்கும் கூகுலின் அன்ட்ராய்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை அறிய வேண்டுமா?அதற்கான விளக்கத்தை இந்த தளம் தருகிறது.

அதே போல சோனோகிராமுக்கும் அல்ட்ரா சவுண்டுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுந்தாலும் இந்த தளம் விடை தருகிற‌து.

ஐ நாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் என்ன வேறுபாடு என்பதையும் அழகாக விளக்குகிறது .

இந்த தலைப்பு தான் என்றில்லை,இந்த விஷயம் தான் என்றில்லை பொதுவாக ஒப்பிட்டு பார்க்க கூடிய அநேக விஷயங்கள் குறித்த விளக்கங்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள‌ன.

தொழில்நுடபம்,உடல்நலம்,விஞ்ஞானம்,மதம்,பேஷன் ,கல்வி,நாடுகள்,வர்த்தகம்,என பல்வேறு தலைப்புகளில் விளக்க குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தலைப்பிலும் துணை தலைப்புகள் இருக்கின்றன.மனிதர்கள் மற்றும் பிரபலங்கள் இடையிலான வேறுபாட்டையும் அறியலாம்.

குறிப்பிட்ட இரண்டு பொருட்கள் குறித்த ஒப்பீடு தேவை என்றால் இந்த தள‌த்தில் தேடிப்பார்க்கலாம்.அவ்வாறு தேடிப்பார்க்கும் போது இந்த விளக்க குறிப்புகள் ஏற்படுத்தும் புரிதலும் ,இந்த தளத்தில் உள்ள தலைப்புகளின் பர்ந்து விரிந்த தன்மையும் வியப்பை உண்டாக்குவது நிச்சயம்.

மிக சாதரண‌மாக நாம் நினைக்க கூடிய இரண்டு விஷயங்கள் இடையே உள்ள நுட்பமான வேறுபாடு ஆச்சர்யத்தை அளிப்பதோடு பல நேரங்களில் இவை பயனுள்ளதாகவும் அமைகின்றன.அதைவிட முக்கியமாக நமக்கு உள்ள குழப்பத்தை போக்கும் வகையில் அமைந்துள்ளன.

உதாரண‌த்திற்கு ஹாலந்து ,நெதர்லாந்து ஆகிய இரண்டும் ஒரே நாடுகளா என்ற சந்தேகம் இருந்தால் அதற்கான விளக்க குறிப்பும் இடம் பெற்றுள்ளது.நெதர்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள சில பகுதிகல் ஹாலந்து என அழைக்கப்படுகின்றன.சில நேரங்களில் ஒட்டு மொத்த நெதர்லாந்தும் ஹாலந்து என்று குறிப்பிடப்படுகின்ற‌து என்ற விளக்கத்தை படிக்கும் போது அட என்று வியக்காமல் இருக்க முடியாது.

இவற்றுக்கு இடையே எல்லாம் இத்தனை நுட்பமான வேறுபாடு இருக்கும் என்று நாம் நினைத்துகூட பார்த்திராத எண்ணற்ற விஷய‌ங்கள் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

பேச்சு வாக்கில் ஏற்படக்கூடிய சந்தேகங்களாக‌ இருந்தாலும் சரி குறிப்பிட்ட பொருள் குறித்து ஆய்வு செய்யும் போது உண்டாகும் சந்தேகம் என்றாலும் அவற்றுக்கான விளக்கத்தை இங்கு தேடிப்பார்க்கலாம்.

இந்த விளக்க குறிப்புகளின் மற்றொரு சிறப்பம்சம்,அவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள‌ தொடர்புடைய தலைப்புகள்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட இந்திய பொது துறை மற்றும் தனியார் வங்கி இடையிலான் வேறுபாட்டையே எடுத்து கொள்வோம்.இந்த குறிப்புடன் இந்தியாவின் எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி இடையே உள்ள வேறுபாடு,தென்னிந்தியா மற்றும் வட இந்தியா இடையிலான் வேறுபாடு,இன்போசிசுக்கும் டிசிஎஸ் க்கும் என்ன வேறுபாடு,சீனாவுக்கும்,இந்தியாவுக்கும் என்ன வேறுபாடு என்று பட்டியல் நீள்கிற‌து.

சங்கிலித்தொடர் போல ஒரு தலைப்பிலிருந்து இன்னொரு தலைப்புக்கு தாவிக்கொண்டே இருக்கலாம்.இந்த தாவல் சுவாரஸ்யத்தை உண்டாக்குவதோடு புதிய விஷயங்களையும் புரிய வைக்கும்.

வாழ்க்கையில் தான் தேர்வு செய்ய எத்தனை விஷயங்கள் இருக்கின்றன.அவற்றில் தேர்வு செய்ய வேண்டும் என்றால் வேறுபாட்டை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு தேவையான பாரபட்சம் இல்லாத தகவல்களை எளிதாக பெறக்கூடிய ஒரிடம் தேவை என்ற எண்ணத்துடன் இந்த தளத்தை அமைத்திருப்பதாக இதன் அறிமுக பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் உதவியோடு இந்த தகவல்கள் திரட்டி தரப்படுகின்ற‌ன.

இணையதள‌ முகவரி;http://www.differencebetween.com/

Advertisements

One response to “இந்த இணைய‌தளத்தில் எதையும் ஒப்பிடலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s