ரசிகையின் உயிர்காத்த டிவிட்டர் செய்தி

டிவிட்டரின்  வீச்சு விளம்பரத்தை தேடித்தரும். நண்பர்களை பெற்றுத்தரும். ரசிகர்களை சந்திக்க உதவும். சில நேரங்களில் உயிர்காக்கவும் உதவும்.
நெருக்கடியான நேரங்களில் டிவிட்டர் உதவிக்கு வந்ததற்கு உதாரணமாக  நெகிழ்ச்சியான கதைகள்  பல  இருக்கின்றன.  அந்த வரிசையில் டிவிட்டர் செய்தி மூலம் அமெரிக்க ரசிகை ஒருவர்  உயிர் பிழைத்த உன்னத கதை இது.
பிரபல பாப் பாடகரின் அபிமானத்துக்குரிய அந்த ரசிகை உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்று சீறுநீரகத்தை தேடி கண்டு பிடிக்க டிவிட்டர் உதவிய கதை இது.
பாபேடே என்பது அந்த ரசிகையின் பெயர். மாற்று சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நெருக்கடிக்கு அவர் ஆளானார்.
மாற்று சிறுநீரக உதவி  தேவைப்படுபவர்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மன்றாடுவார்கள். முன்பின் தெரியாத கருணை நெஞ்சங்களை சென்றடைய  பத்திரிகை, நாளிதழ் விளம்பரம் வாயிலாக வேண்டுகோள் வைப்பார்கள்.
டிவிட்டர் யுகத்தில் பாபேடே  இந்த குறும்பதிவு   சேவையின் மூலமாக  வேண்டுகோள் வைத்தார்.  பாபேடேவின் உற்ற தோழியான அபே என்பவர் இதற்கான வேண்டுகோளை உருக்கமான  பதிவாக எழுதி இருந்தார்.
அபே அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். அதே பெயரில் அவரது லவ் கேன் டு எனிதிங் என்ற பெயரில் வலைப்பதிவு ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த வலைப்பதிவு அறிமுகப் பகுதியில் முடியாததைகூட அன்பால் சாதிக்க முடியும். ஆனால்  அதனை செயல்படுத்தி காட்ட வேண்டும் என்று அவர் எழுதியிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தோழி பாபிடேவின் நிலை பற்றி பதிவை  அவர் உருக்கமான தகவல்களை தெரிவித்திருந்தார்.
“பாபேடேவை  எனக்கு 11 ஆண்டுகளாக தெரியும். அவளுக்கு இப்போது மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இது அவளுடைய முதல்அறுவை சிகிச்சைஅல்ல; 3 வயது இருக்கும் போதே அவளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.  7 வயது வரை மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் பாபேடேவுக்கு  தற்போது 30 வயதாகிறது. சோதனையாக  கல்லீரல் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகள் அவளது சிறுநீரகத்தை பாதித்து விட்டது.அவள் உயிர்பிழைக்க மாற்று சிறுநீரகம் தேவை’.
இப்படி படிப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் அந்த பதிவு அமைந் திருந்தது.
பதிவு நெஞ்சை தொடும் வகையில் அமைந்திருந்தாலும் உடனடியாக உதவி தேவைப்படும் நிலையில் அதிக எண்ணிக்கையிலானவர்களை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு வலைப்பதிவு மட்டும்
போதாது என்று அபே நினைத்தார்.
அதே நேரத்தில் டிவிட்டர் சேவையின்  வீச்சையும் அறிந்திருந்தார். “நியூ கிட்ஸ் ஆன் த பிலாக்’ எனும்  பிரபலமான  இசைக்குழுவை நடத்தி வந்த பாடகர் டோனி வால்பர்க்கின் ரசிகையான அவர் டிவிட்டரில் வால்பர்க்கை பின் தொடர்ந்து வந்தார்.
வால்பர்க் டிவிட்டர்மூலம் ரசிகர்களை நேரடியாக  தொடர்பு கொண்டு வந்ததால் கவரப்பட்ட அபே  தானும் அவரது பின் தொடர்பாளராகி இருந்தார்.
இந்நிலையில் பாபேடேவுக்கு உதவிக்கோரும் வலைப்பதிவுக்கான  இணைப்பை டிவிட்டரில் வெளியிட்டார்.
இந்த பதிவை  படித்து டிவிட்டர் பயனாளிகள் சிலர் அதனை மறு  பதிவுகாக வெளியிட்டனர்.  அதாவது ரீ டிவீட் செய்தனர்.
இதனிடையே பாடகர் வால் பர்க்கின் இந்த மறுப்பதிவை பார்த்து விட்டு அது சுட்டிக்காட்டிய வலைப் பதிவை படித்துப் பார்த்தார்; நெகிழ்ந்து போனார்; தன்னால் இயன்றதை செய்ய  தீர்மானித்தார்.  உடனே அந்த பதிவை தனது பின் தொடர்பாளர் களுக்கு மறுபதிவு செய்தார்.
அவ்வளவுதான் டிவிட்டரில் ஆதரவு அலை வீசியது. பாடகரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை பார்த்து உருகிய பலர் பாபேடேவுக்கு உதவ முன்வந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் எல்லாம் பாபேடே அனுமதிக்கப்பட்டிருந்த வான்டர் பில்ட் மருத்துவமனையில் தொலைபேசி மணி விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தன. எல்லாமே மாற்று சிறுநீரகம் தர தயாராக இருப்பவர்களின் குரலாக ஒலித்தன.
அவர்களிலிருந்து 6 பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 6 பேரிலிருந்து பாபேடேவுக்கு தேவையான மாற்று சிறுநீரகம் தரக்கூடியவர் தேர்வு செய்யப்பட்டார்.
மாற்று சிறுநீரகம் தரக்கூடிய கொடையாளர்கள் பலர் இருக்கின்றனர் என்றாலும் உரிய நேரத்தில் அதனை பெறுவது என்பது சோதனையானதுதான். பாபேடேவை பொறுத்தவரை டிவிட்டர் சரியான நேரத்தில் உதவிக்கு வந்து உயிரை காத்துள்ளது.
இந்த அற்புதத்தை சாத்தியமாக்கியதற்காக பாடகர் வால்பர்க்  கொண்டாடப்படுகிறார். ஆனால் அவரோ இந்த அற்புதத்துக்கு நான் மட்டுமே காரணமல்ல; இது டிவிட்டரால் சாத்தியமாகக்கூடிய  நல்ல செயல்களுக்கு உதாரணமாக அமைகிறது என்று கூறி உள்ளார்.

—————–

http://love-can-do-anything.blogspot.com/2010/12/saving-bobbette-donate-life.html

Advertisements

2 responses to “ரசிகையின் உயிர்காத்த டிவிட்டர் செய்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s