வேலைக்கு வேட்டு வைத்த டிவிட்டர்

உலகில் எத்தனையோ பேர் எத்தனையோ காரணங்களுக்காக வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.அவையெல்லாம் செய்தியாவதில்லை.ஆனால் அமெரிக்காவை சேர்ந்த எங்கெல்ஸ் என்னும் வைட்டர் வேலையில் இருந்து நீக்கப்பட்டது செய்தியாகி உலகின் கவனத்தை ஈர்த்தது.

அதற்கு காரணம் எங்கெல்ஸ் டிவிட்டரால் வேலையை இழந்தது தான்.ஆம் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட தகவலால் அவர் வேலையை இழந்தார்.

டிவிட்டர் மூலம் வேலை வாய்ப்பை தேடிக்கொள்ளலாம் என்பதற்கு பலர் உதாரணமாக உள்ள நிலையில் எங்கெல்ஸ் டிவிட்டரால் வேலையை இழந்த முதல் நபர் என்னும் அடைமொழிக்கு ஆளானர்.

டிவிட்டர் உலகில் பிரபலமாக சொல்லப்படுவது போல் எல்லாம் ஒரு டிவீட்டால் வந்தது தான்.

ஜான் பேரட் இங்கல்ஸ் என்பது தான் அவரது முழு பெயர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் வெயிட்டராக வேலை பார்த்து வந்தார்.பெவர்லி ஹில்ஸ் திரைப்பட தலைநகரான ஹாலிவுட் அமைந்துள்ள பகுதி.இங்கல்ஸ் பணியாற்றிய கிரின்கேஸ் என்னும் அந்த ஓட்டல் உண்மையிலேயே நட்சத்திர அந்தஸ்து கொண்டது.அதாவது ஹாலிவுட் நட்சத்திரங்கள் வந்து போகும் இடமாக விளங்கியது.

அதே போல ஹாலிவுட்டில் வாய்ப்பு தேடி வருபவர்களும் அந்த ஓட்டலில் தான் வெயிட்டராக தஞ்சம் அடைவார்கள்.இங்கல்சும் இப்படி வந்தவர் தான் என்று வைத்து கொள்ளலாம்.

ஹாலிவுட் கணவில் மிதந்தாரோ இல்லையோ,இங்கல்ஸ் தனது வேலையை ஒழுங்காகவே பார்த்து கொண்டிருந்தார்.தான் உண்டு தந்து வேலை உண்டு என்று இருந்தவர் எப்போதாவது டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிடுவதும் உண்டு.அதே போல வலைப்பதிவு ஒன்றையும் எழுதி வந்தார்.

இரண்டிலுமே அவர் அதிக எழுதியதில்லை.ஓட்டலுக்கு வருகை தரும் பிரபலங்கள் பற்றி டிவிட்டரில் தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டு வந்தார் என்றும் பிரச்னையில் சிக்க வைத்த அந்த நிகழ்வுக்கு முன்பாக அதிகப்டசமாக 5 குறும்பதிவுகளை மட்டுமே அவர் வெளியிட்டிருந்தார்.

ஆனால் 2009ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள் அவர் நடிகை ஒருவரின் செயலால் உண்டான மனக்கசப்பை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் தனது செயல் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.அதனால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றும் நினைத்து பார்க்கவில்லை.பிரபலமான அந்த நடிகை அவருடைய அந்தஸ்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் நடந்து கொண்டதாக கருதியதை அடுத்து தனது உணர்வுகளை டிவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

அதற்கு காரணமான சம்பவத்தை பெரிய மனிதர்களின் சின்னத்தனத்துக்கு சான்றாக விளங்குவதாக சொல்லலாம்.நடந்தது இது தான்.

குறிப்பிட்ட தினத்தன்று ஜேனே ஆடம்ஸ் என்னும் அந்த நடிகை ஓட்டலுக்கு சாப்பிட வந்தார்.ஆடம்ஸ் நல்ல பாத்திரங்களாக தேர்வு செய்து நடிப்பதற்காக பாராட்டப்படுபவர்.ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

இங்கல்ஸ் அவரை பார்த்ததுமே பகிழ்ச்சி அடைந்தார்.ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் மிகவும் பவ்யமாக நடிகையின் ஆர்டரை மட்டும் எடுத்து கொண்டார்.ஆனால் ரசிகனாக தனது அங்கீகார்த்தை பார்வையிலேயே வெளிப்படுத்தினார்.

சாப்பிட்டு முடித்ததும் 13.75 டாலருக்கு பில் வந்தது.பில்லுக்கு பணம் கொடுக்க தனது கைப்பையை திறந்த நடிகை திகைத்து போனார்.வெட்கத்தில் முகம் சிவந்த நிலையில் அவர் தனது பரசை காரிலேயே வைத்துவிட்டதாக மன்னிப்பு கேட்கும் பாணியில் கூறினார்.

அப்போது இங்கல்ஸ் ,நடிகையின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டவர் போல,நீங்கள் காருக்கு சென்று பணத்தை எடுத்து வரும் வரை காத்திருக்க தயராக இருக்கிறேன் என்று கூறினார்.

நடிகையும் அவசரம் அவசராமாக வெளியேறினார்.ஆனால் திரும்பி வரவேயில்லை.இதைகூட இங்கல்ஸ் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.பிரபலங்களுக்கு ஞாபக மறதி ஏறபடுவது புரிந்து கொள்ளக்கூடியது தான்.அவரும் இந்த சம்பவத்தை மறந்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.நடிகையின் மேளாலர் பில் தொகையை கொடுக்க வந்ததுள்ளதாக அந்த அழைப்பு தெரிவித்தது.இங்கல்சும் பில் தொகையை பெற்று கொள்ள சென்றார்.நடிகையின் மேளாலர் 13.75 டாலருக்கான காசோலையை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

காசோலையின் தொகையை பார்த்ததுமே இங்கல்ஸ் வெறுத்து போனார்.காரணம் பில தொகை மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.அவருக்கு டிப்ஸ் கொடுக்கப்படவில்லை.பொதுவாக டிப்ஸாக ஒரு சில டாலர்களே கிடைக்கும் என்றாலும் கிடைக்காமல் போன டாலர்களை நினைத்து அவர் வருந்தவில்லை.ஆனால் நடிகைக்காக தான் ரிஸ்க் எடுத்தும் கூட அவர் அதற்கான நன்றியை வெளிப்படுத்தாமல் இருந்து விட்டாரே என நினைத்து குமுறினார்.

தன்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய வெயிட்டருக்கு ஒரு நடிகை டிப்ஸ் மூலம் நன்றி தெரிவிக்காதது தவறு என அவர் நினைத்தார்.

ஒரு பிரபல நடிகையால் தான் வஞ்சிக்கப்பட்டதாக நினைக்கும் ஒரு சாதரண வெயிட்ட என்ன செய்டுவிட முடியும்.தனது நண்பர்களிடம் சொல்லி புலம்பலாம்.இல்லை தனக்குள்ளே வைத்து மருகலாம்.அல்லது பிரபலங்களே இப்படி தான் என்று மறந்து விடலாம்.

டிவிட்டர் யுகத்தில் இந்த மனக்குறையை ஒரு டிவிட்டர் பதிவாக தட்டிவிடலாம்.

இங்கல்ஸ் அதை தான் செய்தார்.

டிவிட்டரில் அவர் பெரிய புலி என்றெல்லாம் சொல்ல முடியாது.அவர் மொத்தமே 5 குறும்பதிவுகளை மட்டுமே வெளியிட்டிருந்தார்.அவருக்கு மொத்தம் 22 பின்தொடர்பாளர்களே இருந்தனர்.எனவே டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதால் நடிகையை மண்டியிட வைத்து விடலாம் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.

மனதில் உள்ள் அபார்த்தை இறக்கி வைப்பது போல இந்த சம்பவம் பற்றி டிவிட்டரில் குறிப்பிட்டுவிட்டு அதனை மறந்தும் போனார்.

ஆனால் அதன் பிறகு தான் அந்த மாயம் நிகழ்ந்தது.சில நாட்கள் கழித்து அந்த நடிகை ஓட்டலுக்கு திரும்பி வந்தார்.ஆனால் வழக்கமாக சாப்பிட வருவது போல வரவில்லை.மாறாக ஆவேசமாக இருந்தார்.அதே ஆவேசத்தோடு 20 டாலர் நோட்டுக்கு சில்லறை கேட்டவர் அதனை மாற்றிக்கொண்டு 3 டாலர்களை ஓட்டல் மேளாலரிடம் கொடுத்து ,அன்றைய தினம் பணியில் இருந்த வெயிட்டரிடம் கொடுத்து விடுங்கள் டிப்ஸாக என்று கூறியவர் அதே வேகத்தில் வெளியேறிச்சென்றார்.போகும் போது அங்கே நின்று கொண்டிருந்த இங்கல்ஸிடம் மன்னிக்கவும் எனது மேளாலர் உங்களுக்கான டிப்ஸை கொடுக்க மறந்துவிட்டார் என்று கோபத்தோடு கூறிச்சென்றார்.

இங்கல்ஸ் அதிர்ச்சி அடைந்தாலு சமாளித்து கொண்டு நடிகையின் பின்னே ஓடோடிச்சென்று எனக்கு டிப்ஸ் தருவதற்காக மீண்டும் வந்ததற்கு நன்றி என்று பணிவோடு கூறினார்.

அவர் கூறியதை கேட்டு நின்று திரும்பி பார்த்த நடிகை ஆடம்ஸ் மிகவும் அலட்சியமாக எனது நண்பர் எல்லாவற்றையும் டிவிட்டரில் படித்து விட்டார் என்று கூறி பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றுவிட்டார்.

ஒரு நிமிடம் இங்க்லசுக்கு எதுவும் புரியவில்லை.அதன் பிறகு அவருக்கு சிரிப்பு வந்தது.தனது டிவிட்டர் பதிவை கூட ஒருவர் படித்திருக்கிறாரே என நினத்து வியப்படைந்தார்.நடிகையின் கோபத்திற்கு தான் எப்படி காரணமாக முடியும் என்ற எண்ணமும் அவருக்கு உண்டானது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவருக்கு ஒரு 3 டாலர் டிப்ஸ் கொடுக்க மனமில்லாமல் போனது ஏன் என்றும் யோசித்து பார்த்தவர் நடிகையின் அழகையும் திறமையையும் பாராட்டி தான் டிவிட்டர் செய்திகளை வெளியுட்டுள்ளோமே என நினைத்து பார்த்தார்.

அப்போது தான் டிவிட்டர் எத்தனை சக்தி வாய்ந்த சாதனம் என்பதும் அவருக்கு புரிந்தது.டிவிட்டரை இன்னும் சரியாக பயன்படுத்தி கொள்ள தனக்கு பொறுமை தேவை என்றும் நினைத்து கொண்டார்.

அந்த நினைப்பை உறுதி படுத்தும் வகையில் ஓட்டல் நிர்வாகத்தின் நடவடிக்கை அமைந்திருந்தது.அடுத்த சில நாட்களிலேயே அவர் நிர்வாகத்தால் அழைக்கப்பட்டார்.மேளாலர் அதிகம் பேசாமல் அவருடைய டிவிட்டர் பதிவுகளின் நக்லை எடுத்து கொடுத்து இது தான் வேலை பார்க்கும் லட்சணமா என்பது போல கடுமையான வார்த்தைகளை கூறி வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

அந்த நகலில் மொத்தம் பத்து டிவிட்டர் செய்திகளே இருந்தன.எல்லாமே நட்சத்திரங்கள் பற்றியவை.ஒரு சில பாராட்டும் தனமை கொண்டவை.ஒரு சில நடிகையில் உள்ளாடை அணியாத அழகை வர்ணிபப்பவை.

ஆனால் இந்த டிவிட்டர் பதிவுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று ஒரு போதும் அவர் நினைக்கவில்லை. முக்கிய்மாக தனது வேலையை பறிக்கும் என்று நினைத்திருக்கவில்லை.

அனால் அது தான் நடந்தது.

உண்மை தான்.டிவிட்டரை சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.இல்லை என்றால் டிவிட்டரால் வேலையையும் இழக்க நேரிடலாம்.

அதை உலகிறகு உணர்த்தும் வகையிலோ என்னவோ இங்கல்ஸ் இந்த சம்பவத்திற்கு பிறகு தனது டிவிட்டர் அறிமுக குறிப்பில் டிவிட்டரால் வேலை இழந்தவர் என குறிப்பிட்டிருந்தார்.

இங்கல்ஸ் இந்த சோதனையான் அனுபவம் பற்றி தனது வலைப்பதிவில் நகைச்சுவை மிளிர் அசுவைபடவே நடந்தவற்றை விரிவாகவே எழுதியுள்ளார்.ஆச்சர்யம் படும் வகையில் அந்த வலைப்பதிவின் தலைப்பு ஒரு தோல்வியாக எப்படி ஜெயிப்பது ? என்பது தான்.
——————–

Advertisements

6 responses to “வேலைக்கு வேட்டு வைத்த டிவிட்டர்

  1. அன்பின் சைபர் சிம்மன், எதிரபாராத வேலை நீக்கம். இங்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அரசுத்துறையில் பணி புரிபவர்கள் எழுதுவதைப் பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. அரசு என்று முழித்துக் கொள்ளும் – நடவடிக்கை எடுக்கும் என்று. நிர்வாகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இணையத்தில் எழுதித் தள்ளுகிறார்கள்.

    நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s