ஒசாமா மீதான தாக்குதலை டிவீட் செய்தவர்

கடமையை செய்யுங்கள்;பலனை எதிர்பார்க்காதீர்கள்,என்பது போல பலனை எதிர்பாராமல் டிவீட் செய்யுங்கள் என்றும் சொல்லலாம் போலும்.அப்படி செய்தால் ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாகிவிடலாம்.ஒரே நாளில் கூட இல்லை.ஒரே இரவில்!அதாவது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து டிவீட் செய்தால்!

பாகிஸ்தானை சேர்ந்த ஷோயிப் அத்தர் இப்படி தான் புகழ் பெற்றார்.அவர் செய்ததெல்லாம் ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்க தாக்குதலை டிவிட்டரில் பதிவு செய்தது தான்.நேரடி ஒளிபரப்பு என்பார்களே அதே போல அத்தர் ஒசாமா மீதான தாகுதலை டிவிட்டரில் நேரடியாக பதிவு செய்தார்.

அதிலும் அமெரிக்கா இந்த தாக்குதலை மிகவும் ரகசியமாக அரங்கேற்றி எல்லாம் முடிந்த பிற்கே ஒசாமா கொல்லப்பட்ட தகவலை உலகிற்கு அறிவித்த நிலையில் அத்தர் அபோதாபாத்தில் இருந்த படி அந்த தாக்குதல் பற்றிய விவரங்களை உலகோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.

அவரது சுய வர்ணனை போலவே அத்தர் ,தெரியாமலேயே ஒசாமா மீதான தாகுதலை நேரடியாக டிவீட் செய்தவராக உருவாகியிருக்கிறார்.வரலாறு அவருக்கு தனி இருக்கை அளித்து தனது நினைவில் குறித்து வைத்திருக்கிறது.

எளிதாக எவருக்கும் கிடைத்திடாத கவுரவம் இது.

அத்தருக்கு அவரே கூட எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது.

33 வயதாகும் அத்தர் ஐ டி ஆலோசகராக பணியாற்றியவர்.பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் பணியாற்றி வந்த அத்தர் தனது துஐயில் நிலவிய போட்டி பொறமையால் வெறுத்து போய் நகர வாழ்கையே வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டார்.

அவர் அப்படி ஒதுங்கிய அபோதாபாத் நகரில் பின்லேடன் பதுங்கியிருந்த்தையோ அங்கு அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தப்போகின்றன என்பதையோ ,அதைவிட முக்கியமாக அந்த சரித்திர நிகழ்வுக்கு டிஜிட்டல் சாட்சியாக தான் நிற்க போவதையோ அவர் அறிந்திருக்கவில்லை.

அந்த நகரின் அமைதியையும் அது அளித்த தனிமையையும் விரும்பி அவர் அங்கே குடிபெயர்ந்தார்.லேப்டாப்பே தனக்கு துணை என்பது போல அந்த மலைப்பகுதியில் அவர் தஞ்சம் அடைந்திருந்தார்.நகரை விட்டு விலகி வந்திருந்தாலும் அத்தர் வெளி உலகுடன் தொடர்பு வைத்து கொள்ளும் வகையில் ரியலி வர்ச்சுவல் என்னும் பெயரில் வலைப்பதிவு செய்து வந்தார்.அதே பெயரில் டிவிட்டர் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார்.

வலைப்பதிவு ,டிவிட்டர் இரண்டிலுமே அபோதாபாத் வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டு  வந்தார்.வலைப்பதிவில் அவ்வளவு சுறுசுறுப்பு காட்டாவிட்டாலும் டிவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகளை செய்து வந்தார்.

மே 1 ம் தேதி நள்ளிரவு விழித்திருந்த அவர் லேப்டாப்புடன் அம்ர்ந்திருந்தார்.அப்போது தான் வானில் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டது.அந்த நேரத்தில் ஹெலிகாப்டர் பறப்பது விநோதமாக தோன்றவே தனது டிவிட்டர் பக்கத்தில் அது பற்றி குறிப்பிட்டார்.

‘ஒரு மணிக்கு அபோதாபாத் மேலே ஹெலிகாப்டர் பறக்கிறது’.

அவருடைய முதல் டிவீட் இப்படி தான் அமைந்திருந்தது.

அதன் பிறகு வெடிச்சத்தம் கேட்டது பற்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘அபோதாபாத் கன்டோன்மன்ட் பகுதியில் பெரிய ஜன்னல் உடைந்த சத்தம் கேட்கிறது.ஏதோ மோசமாக நடக்க உள்ளது’ என அடுத்த பதிவு அமைந்திருந்தது.

அதன் பிறகு நள்ளிரவில் நடந்தவற்றை அவர் தொடர்ந்து டிவீட் செய்து வந்தார்.

அந்த நேரத்திலும் ஆன்லைனில் இருந்த தன்னை போன்ற ஒரு சில நள்ளிரவு இணைய பறவைகள் தந்த தகவல்களையும் தனது பதிவுகளில் சேர்த்து கொண்டார்.

மேலே பறக்கும் ஹெலிகாப்டஇல் ஒன்று பாகிஸ்தானை சேர்ந்தது அல்ல என்று கூறுகின்ற‌னர் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டவர் அடுத்த பதிவில் இப்போது அபோதாபாத் மீது விமானம் பறக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே ஹெலிகாப்டர்கள் நொருங்கி விழுந்தது பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மோதிஹெலிகாப்டரை தொடர்ந்து இரண்டு காப்டர்கள் பறப்பதாக‌ சொல்கிறார்கள்.அவற்றில் ஒன்று வெளிநாட்டு காப்டர் என்றும் அவர் பதிவிட்டார்.

நள்ளிரவு நேரத்தில் ஏதோ அசாதரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்னும் உணர்வோடு அத்தர் இந்த பதிவுகளை வெளியிட்டர்.

ஆனால் இந்த நிகழ்வுகளின் பின்னே இருந்த உண்மை பற்றி அவர் எதையும் அறிந்திருக்கவில்லை.அவர் மட்டும் அல்ல உலகில் வேறு யாருமே அந்த மர்ம நிகழ்வின் பின்னணியை அறிந்திருக்கவில்லை.உலகின் ஒரே வல்லரசின் தலைவரும் அவருக்கு நெருக்கமான ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த பரம ரகசியமாக அது அமைந்திருந்தது.

உலகையே உலுக்கும் வகையில் பாகிஸ்தானி அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க கமேண்டோ படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த போது தான் அபோதாபாத்தில் அரங்கேறிய நிகழ்வுகளும் பறந்த ஹெலிகாப்டர்களும் ஒசாமா மிதான் தாக்குதலின் அங்கம் என்று தெரிய வந்தது.

அது மட்டும் அல்ல உலகம் அறியாமல் மிக ரகசியமாக நடத்தப்பட்ட அந்த தாக்குதலை ,மிக மிக தற்செயலாக தன்னை அறியாமலேயே டிவிட்டரில் நேரடியாக அத்தர் பதிவு செய்திருந்தார்.

இதையும் அவர் டிவிட்டர் பதிவாக குறிப்பிட்டிருந்தார்.

தேர் கொஸ் த நைபர்ஹுட் என குறிப்பிட்டவர் ஒசாமா மீதான தாக்குதலை தன்னை அறியாமலேயே நேரடியா டிவிட்டரில் பஹிவிட்டவர் என்று தன்னை வர்ணித்து கொண்டார்.

ஆக மறுநாள் காலை ஒசாமா கொல்லப்பட்ட செய்தியை உலகம் தெரிந்து கொண்டு தாக்குதல் பற்றி பரபரப்பாக பேசத்துவங்கிய போது அதனை டிவிட்டரில் பதிவு செய்த அத்தர் பற்றியும் அதே பரபரப்போது பேசியது.விளவு அமைதியை நாடி அபோதாபாத் சென்றவர் ஒரே நள்ளிரவில் உலக புகழ் பெற்றுவிட்டார்.

அதுவரை டிவிட்டரில் வெகு சிலரே பின்தொடர்ந்த நிலையில் அடுத்த சில மனி நேரங்களில் பல்லாயிரக்கணகானோர் அவரை பிந்தொடர்ந்தனர்.உலக‌ மீடியாவில் இருந்தெல்லாம் அவரை பேட்டி காண வேண்டுகோள்கள் குவிந்தன.

———–

http://twitter.com/#!/reallyvirtual

————–

(டிவிட்டர் யுகத்தில் இது கொஞ்சம் தாமதமான பதிவு தான்.மன்னிக்கவும்.

அன்புடன் சிம்மன்.)

Advertisements

One response to “ஒசாமா மீதான தாக்குதலை டிவீட் செய்தவர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s