ஒரு நாள்;ஒரு நன்கொடை;ஒரு இணையதளம்

தினம் தினம் தள்ளுபடி பற்றிய தகவல்களை தரும் இணையதளங்கள் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்க்கும் வகையில் இந்த தினசரி தள்ளுபடி தளங்கள் நிறுவன தள்ளுபடிகளில் அன்றைய தினத்துக்கானவற்றை தேர்வு செய்து வெளியிடுகின்றன.

இவ்வளவு ஏன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு பொருளை மட்டுமே விற்கும் வூட் போன்ற தளங்களும் கூட இருக்கின்றன.தள்ளுபடி தகவல்களை எளிமைபடுத்தி தரும் தளங்களாக இவற்றை கருதலாம்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் தளம் இந்த வகை தளம் தான் என்றாலும் இது வாங்குவதற்கானது அல்ல;கொடுப்பதற்கானது.அதாவது நன்கொடை கொடுப்பதற்கானது.

நம்முள் இருக்கும் கொடை வள்ளகளை வெளிக்கொணரும் வகையில் நன்கொடை அளிக்க ஊக்குவிக்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.

உலகில் உள்ள சேவை அமைப்புகள் பற்றியெல்லாம் இவை விரிவான த‌கவல்களை அளிக்கின்றன.இந்த அமைப்புகள் செய்யும் நற்பணிக‌ள் போன்றவற்றை பட்டியலிடும் இந்த தளங்கள் அவற்றுக்கு தேவைப்படும் நிதி உதவி பற்றிய கோரிக்களைகளையும் அறிய உதவுகின்றன.

இவற்றில் இடம்பெறும் தொண்டு நிறுவங்களை பற்றிய விவரங்களை படித்து பார்த்து தங்கள் மனதுக்கேற்றவற்றை தேர்வு செய்பவர்களும் அதிக அளவில் உள்ளனர்.கொடை உள்ளம் கொண்டவர்கள் தினமும் கூட இத்தகைய தளங்களுக்கு விஜ‌யம் செய்வதுண்டு.ஆனால் எல்லோருக்கும் இத்தகைய ஆர்வமும் பொருமையும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஆனால் நிச்சயம் எல்லோருக்கும் நல்லிதயம் உண்டு.எல்லோருக்குள்ளும் ஒரு கொடை வள்ளளும் உண்டு.சரியான தூண்டுதல் இருந்தால் பலரும் தங்களை கவரும் அமைப்புகளுக்கு அல்லது திட்டங்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவார்கள்.

அந்த தூண்டுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் தினம் ஒரு தொண்டு நிறுவனம் பற்றிய தகவலை தரக்கூடிய ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு தொண்டு நிறுவனம் பற்றிய தகவல்களை தந்து அந்த அமைப்பிறகு நன்கொடை தர ஊக்குவிக்கிறது பிலான்த்ரோப்ர் என்னும் அந்த இணைய‌தளம்.

தள்ளுபடி தளங்களில் தினம் ஒரு தள்ளுபடி தகவல் இடம்பெறுவது போல இதில் நாள்தோறும் ஒரு தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்யப்படுகிறது.

அந்த அமைப்புகளின் நோக்கம் செய்லபாடுகள்,அந்த அமைப்பின் தேவைகள் போன்றவை அந்த அறிமுக பக்கத்தில் இடம் பெறுகின்றன.

இணையவாசிகள் இந்த‌ தகவல்களை படித்து பார்த்து அந்த அமைப்புகளின் நோக்கம் தங்களுக்கு பிடித்திருந்தால் நன்கொடை வழங்கலாம்.நன்கொடை கூட அதிகம் கிடையாது.ஒவ்வொருவரும் ஒரு டாலர் கொடுத்தால் போதும்.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தை புக்மார்க் செய்து கொண்டு தினமும் விஜயம் செய்து பார்க்கலாம்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல சிறு நிதி மூலம் உலகை மாற்றுவோம் என்று இந்த தளம் சொல்கிறது.உங்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்தால் இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.

இணையதள முகவரி;https://philanthroper.com/

7 responses to “ஒரு நாள்;ஒரு நன்கொடை;ஒரு இணையதளம்

    • விரைவில் இது பற்றி தனி பதிவு எழுத திட்டமிட்டுள்ளேன்.

      இப்போதைக்கு முகவரிகள் தேவை என்றால்;www.dealies.in,www.snapdeal.com,www.mydala.com,www.koovs.com,www.dealsyou.com,www.scoopstr.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s