ஊழலுக்கு எதிராக ஒரு செல்போன் செயலி.

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,எவ்வளவு கேட்டனர் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்யுங்கள்.

இப்படி செய்வதன் முலம் உங்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உழலுக்கு எதிரான இயக்கத்தில் உங்களால் இயன்ற பங்களிப்பை நீங்கள் செலுத்தி விட்டதாக ஆதம் திருப்தி கொள்ளலாம்.

அவ்வளவு தானா?

அடிப்படையில் இவ்வளவு தான்.ஆனால் இந்த இணையதளம் மூலமான இயக்கம் வலுப்பெற்றால் மேலும் கூட மாற்றங்கள் நிகழலாம்.அதற்கு இணையவாசிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

எங்கெல்லாம் ஊழல் நடைபெறுகிறதோ,எங்கெல்லாம் லஞ்சம் கேட்கப்படுகிற்தோ,வாங்கப்படுகிறதோ அவற்றையெல்லாம் திரட்டி ஊழல் வரைபடமாக உலகின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பதே இந்த தளத்தின் நோக்கம் .இதற்கு ஆதாரமாக செல்போனை ஆயுதமாக மாற்றும் அற்புதமான செய‌லியையும் உருவாக்கியுள்ளனர்.

பெரும்பாலான செல்போன் செயலிகளை போல ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்ற ஸ்மார்ட் போன்களில் செய்லப்டக்கூடிய இந்த‌ செயலியை டவுண்ட்லோடு செய்து கொண்டால் போதும்.அதன் பிற‌கு எப்போதாவது லஞ்சம் கொடுக்க வேண்டிய‌ நிலை ஏற்பட்டால் இந்த செயலியில் அது பற்றிய விவரங்களை சம்ர்பிக்கலாம்.கேட்கப்பட்ட லஞ்ச தொகை,அல்லது கொடுத்த தொகை,கேட்ட துறை எது போன்ற விவரங்களை குறிப்பிடலாம்.லஞத்திற்கு பின்னே ஏதாவது கதை இருக்குமானால் அதையும் தெரிவிக்கலாம்.

இவை அனைத்தும் உடன‌டியாக வரைபடத்தில் பதிவேற்றப்படும்.செல்போனில் உள்ள இருப்பிடம் உணர் வசதியின் மூலமாக எங்கிருந்து இந்த தகவல் சமர்பிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டு உலக வரைபடத்தில் அந்த இடத்தின் மீது அடையாள குறியோடு லஞ்ச தகவல் இடம் பெறும்.

இப்படி ஊழலால் பாதிக்கப்படும் எவர் வேண்டுமானாலும் இந்த‌ செயலியின் மூலமாக லஞ்ச நிக‌ழ்வுகளை பதிவு  செய்யலாம்.இவை அனைத்தும் வரைபடத்தில் அந்த அந்த இடங்களில் சேர்க்கப்பட்டு விடும்.

குறிப்பிட்ட அந்த இட‌த்தை கிளிக் செய்தால் மேலும் விரிவான விவரங்க‌ளை தெரிந்து கொள்ளலாம்.

ஆக இந்த செயலியை பார்த்தாலே போதும் அதில் உள்ள வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படும் இடங்களின் மூலம் எங்கெல்லாம் லஞ்சம் வாங்க‌ப்படுகிறது அல்லது கேட்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
இதன் வாயிலாக எந்த இடங்களில் எல்லாம் லஞ்சம் தலை விரித்தாடுகின்றன என்ற தகவலையும் பெற முடியும்.

இந்த தகவல்கள் புதிய நாடு அல்லது ந‌கரத்துக்கு தொழில் நிமித்தமாக செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.அதே போல லஞ்சத்திற்கு எதிராக போராட விரும்புகிற‌வர்களுக்கும் இந்த தகவல்கள் பேருதவியாக இருக்கும்.எங்கெல்லாம் லஞ்சம் கோலோச்சுகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்கு எதிராக போராடுவதும் தீவிரமாகலாம்.

இவ்வளவு ஏன் லஞ்ச கேட்பதும் வாங்குவதும் ஆவணப்படுத்தப்படுகிறது என்று தெரிய வந்தால் லஞ்ச ஆசாமிகளுக்கும் அது அச்சத்தை தரும் அல்லவா?

ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றால் இந்த செயலி பிரபலமாகி அதன் மூலம் லஞ்சாதிபதிகள் சுட்டிக்காட்டப்படுவது பரவலாக வேண்டும்.அதற்கு செல்போன்வாசிகள் ஒத்துழைக்க வேண்டும்.

எஸ்டோனியா,ஃபின்லாந்து,லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த குழுவினர் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.புதிய நிறுவனங்களூக்காக நடத்தப்பட்ட போட்டியியில் பங்கேற்ற  போது இதற்கான எண்ணம் உதயமாகியுள்ளது.

ல‌ஞ்சத்தை  வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கலாம்,ஆனால்  பெரும்பாலானோ ல‌ஞ்சத்தை விரும்புவதில்லை  என்று குறிப்பிடும் இந்த குழுவினர் லஞ்சத்தை எதிர்த்து தனியாக் போராடுவது சாத்தியம் இல்லை என்பதால் கூட்டாக போராடும் நோக்கில் லஞ்ச விவரங்களை பதிவு செய்து ஊழல் வரைபட‌த்தையும் அதன் முலம் விழிப்புணர்வையும் உருவாக்கும் இந்த செயலியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல அனைவரும் பங்களிப்பை செலுத்தி ஊழல் விவரங்க‌ளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம் என்பது இந்த செயலியின் தனிச்சிரப்பு.அதே நேர‌த்தில் விவரஙக்ளை சமர்பிப்பவர்களும் பின்விலைவுகலை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.காரணம் இதில் சம்ர்பிப்பவரின் அடையாளம் வெளிப்படுத்தப்பட மாட்டாது.அதாவது லஞ்ச விவரங்கள் மட்டும் தான் பதிவாகுமே தவிர அதை தெரிவித்தது யார் என்பது பதிவாகாது.

லஞ்ச விவர‌ங்களை செல்போனில் செயலின் மூலமும் அணுகலாம்.பிரைப்ஸ்பாட் இணையதளத்தின் மூலமும் அணுகலாம்.ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இணைய‌தளம் வழியேவும் தகவல்களை சம‌ர்பிக்க‌லாம்.

இணையதள முகவரி;http://www.bribespot.com/

5 responses to “ஊழலுக்கு எதிராக ஒரு செல்போன் செயலி.

  1. இதே முறையை http://WWW.ANNIYAN.IN இந்த தளத்தில் பயன்படுத்தியும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s