சாப்பாட்டு முனைவோர்களுக்கான இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய‌ உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்முனைவோரின் ஸ்டைல்.தொழில்முனைவோர் மட்டும் அல்ல நிறுவன‌ங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களும் புதியவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பாக மதிய உணவு நேரத்தை பயன்படுத்தி கொள்கின்ற‌னர்.

ஆனால் ஏற்கனவே ஒரளவேனும் அறிமுகமானவர்களை தான் இப்படி மதிய உணவுக்கு அழைக்க முடியும்.முற்றிலும் அறிமுகமில்லாதவர்களை சேர்ந்து சாபிட அழைப்பதோ அல்லது புதியவ‌ர்களோடு அரட்டை அடித்தபடி சாப்பிடுவதோ கொஞ்சம் கடினமானது தான்.

இருப்பினும் புதியவ‌ர்களை சாப்பிட அழைத்து அதன் மூலமே தொடர்பையும் நட்பையும் ஏற்படுத்தி கொள்வது சாத்தியமே.இப்படி உணவு வழி தொடர்பை சாத்தியமாக்கும் இணைய சேவைகள் வரிசையில் லஞ்சபிரனர் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

மதிய உணவுக்கு அழைப்பதன் மூலம் நீடித்த வர்த்தக தொடர்பை ஏற்படுத்தி கொள்ள உதவுவதாக இந்த தளம் பெருமைப்பட்டு கொள்கிறது.இதை மற்ற மதிய உணவு சார்ந்த வலைப்பின்னல் சேவை தளங்களில் இருந்து மாறுபட்ட முறையில் நிறைவேற்றி தருவதாகவும் இந்த தளம் தெரிவிக்கிறது.

உண்மையில் இந்த சேவை வலைப்பின்னல் வகையை சேர்ந்ததே அல்ல;தொழில்முனைவோர்களிடையே தொடர்பு ஏற்படுத்தி தரும் சேவை என்ற போதிலும் இது வலைப்பின்னல் சேவை அல்ல.மாறாக இது தொழில்முனைவோர்களுக்கான இணைப்பு சேவை என்று சொல்லலாம்.

இதையே கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் சொல்வதென்றால் தொழில்முனைவோருக்கான டேட்டிங் சேவை என்று சொல்லலாம்.அதாவது தொழில்முனைவோர்களிடையே பொருத்தும் பார்த்து தொடர்பை ஏற்படுத்தி தரும் சேவை.

எப்படி டேட்டிங் தளங்கள் பல்வேறு அம்சங்களை பரிசிலித்து அவறின் அடிப்படையில் பொருத்தமானவர்களை பரிந்துரைக்கின்றனவோ அதே போல இந்த சேவை தொழில்முனைவோர்களில் பொருத்தமானவர்களை மதிய உணவுக்காக ஒன்று சேர்கிக்கிற‌து.இப்படி இந்த தளம் பரிந்துரைக்கும் நான்கு பேர் குறிப்பிட்ட இடத்தில் மதிய உணவை சுவைத்து மகிழலாம்.

நான்கு பேரும் பொதுவான அம்சங்களோடு தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் இந்த சந்திப்பின் போது பேசிக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்குள் ஏராள‌மான விஷயங்கள் இருக்கும்.எனவே இந்த சந்திப்புகள் தொழில்ரீதியாக பயனுள்ளதாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த அம்சத்தை தான் லஞ்ச்பிரனர் தளம் குறிப்பிட்டு சொல்கிறது.சமூக வலைப்பின்னல் சேவையை போல இணையத்தில் புகைப்படத்தை பார்த்து தொடர்பு கொண்டு வீணான அரட்டையில் ஈடுபட உதவுவது அல்ல எங்களின் நோக்கம்.நிஜ உலகில் தொடர்பை ஏற்படுத்தி அதன் பிறகும் தொடரும் பயனுள்ள வர்த்தக உறவை உருவாக்கி தருவதே எங்களின் தனி சிறப்பு என்று இந்த தளம் தெரிவிக்கிறது.

அந்த வகையில் மதிய உணவு மூலம் தொழில்,வர்த்தக வாய்ப்புகளை பெற உதவுகிறது.

இந்த‌ சேவையை பயன்ப‌டுத்தி கொள்ள விரும்புகிறவர்கள் முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அப்படி பதிவு செய்து கொள்ளும் போது தங்களைப்பற்றி எவ்வளவு தகவல்களை சம‌ர்பிக்க முடியுமோ அவ்வளவு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.இந்த தகவல்களை 65 அம்சங்களின் கீழ் பரிசிலிக்கும் இணைய சூத்திரம் ஒன்றை இந்த தளம் உருவாக்கியுள்ளது. அந்த சூத்திரத்தின் அடிப்படையில் உறுப்பினர்களில் பொருத்தமான நான்கு பேரை இந்த தளம் பரிந்துறைக்கிற‌து.

உறுபினர்கள் எந்த தினத்தில் மதிய உணவுக்கு தயாராக இருக்கின்றனர் என்பதை குறிபிட்டால் அதற்கேற்ப இந்த பரிந்துறை வழங்கபப்டுகிற‌து.அதன் பிறகு உறுப்பினர்கள் பரிந்துறைக்கப்பட்ட நண்பர்களோடு இமெயில் மூலம் தொடர்பு கொண்டு சாப்பிட அழைக்கலாம்.

பொதுவாக புதிதாக தொழில் துவங்குபவர்கள் தொழில்முனைவோர் என்று குறிப்பிடப்படுவது உண்டல்லவா?அதே போல மதிய உணவு மூலம் வர்த்தக தொடர்பையும் தொழில் ரீதியிலான நட்பையும் உருவாக்கி கொள்ள உதவுவதால் இந்த தளம் தனக்கு சாப்பாட்டு முனைவோர்கள் (லஞ்ச்பிரனர்)என்று பெயர் சூட்டி கொண்டுள்ளது.

சாப்ட்வேர் துறையை சேர்ந்த மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தி தரும் சேவை ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதை அடுத்து இந்த தளத்தை உண்டாக்குவதற்கான எண்ணம் அந்த நண்பர்களுக்கு உண்டானது.மாமூலான சமுக வலைப்பின்னல் சேவை போல இல்லாமல் வர்த்த துறையினருக்கான டேட்டிங் சேவை போல இதனை உருவாக்க வேன்டும் என்றும் அவர்கள் தீர்மானித்து கொண்டு செயல்பட்டு லஞ்ச்பினர் சேவையை உருவாக்கினர்.

இணையதள முகவரி; http://www.lunchepreneur.com/

(

இதற்கு முன்பாகே மதிய உணவு சார்ந்த சுவையான வலை பின்னல் சேவை தளங்கள் பறி எழுதியுள்ளேன்.அவற்றுக்கான இணைப்புகள் இதோ.

1.

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

—————

2.

சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

————-

3.

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

-0

4.

நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவை திட்டமிட உதவும் இணையதளம்.

————-

5 responses to “சாப்பாட்டு முனைவோர்களுக்கான இணையதளம்.

  1. நண்பரே,பதிவுகள் எல்லாம் அருமை, தங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்!
    பின்குறிப்பு: lunchwalla.com வை foursquare.com வாங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

  2. பிங்குபாக்: உணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக். « Cybersimman's Blog·

பின்னூட்டமொன்றை இடுக