இன்றே இணையதளம் துவங்குவீர்

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது .

இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம்.

]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என்று சொல்வது போல இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.

இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.

இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும்.

முன் போல இணையதளம் அமைப்பது கம்பசூத்திரம் இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகிவிட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணைஅய்தளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.ஓரளவுக்கேனும் எச் டி எம் எல் போன்றவைம் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம்.

இவையெலாம் தேவையேயில்லை,இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ். வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது.

பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி,இமெயில் ,வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது. தனி நபர்கள்,இசை கலைஞரகள்,வர்த்தக பிரிவினர் என் ஆனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிற‌து.

உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படிஅயான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது.அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல‌ வேண்டும்.

மூழு வீச்சிலான‌ இணைய‌த‌ளம் தேவை என்றால‌ க‌ட்ட‌ன‌ சேவைக்கு தான் செல்ல‌ வேண்டும்.ஆனால் எளிதான‌து விரைவான‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

இணைய‌த‌ள‌ முக‌வ‌ரி;www.bravesites.com

Advertisements

8 responses to “இன்றே இணையதளம் துவங்குவீர்

  1. நன்றி உங்கள் தகவலுக்கு ஆனால் தேன் போல புதிய விசயத்தை நீங்கள் சொல்லும்போது ருசித்துவந்த நான்

    //பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படிஅயான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது//

    என்ற வார்த்தையை கண்டதும் ருசித்ததையம் விட்டுவிட்டு வந்து விட்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s